உள்ளடக்கத்துக்குச் செல்

உள்ளிருப்புப் போராட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

உள்ளிருப்புப் போராட்டம் (ஆங்கிலம்: Sit-in) என்பது ஒரு நேரடி நடவடிகை முறையில் அமைந்த அறவழி எதிர்ப்புப் போராட்ட வடிவம் ஆகும். இது ஒரு முதன்மை சட்ட மறுப்பு முறை ஆகும். சட்ட, சமூக, அரசியல் அல்லது பொருளாதார அநீதிகளாக தாம் கருதுபவற்றுக்கு எதிராக இது பயன்படுத்தப்படுகிறது. வியூக முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் உள்ளிருப்புச் செய்வதன் மூலம் கூடிய கவனத்தை ஈர்த்து தமது கோரிக்கைகளை முன்னேற்ற உள்ளிருப்புப் பயன்படுகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் உணவகம் போன்ற போன்ற பொது இடங்களில் கறுப்பின மக்களுக்கு சேவைகள் மறுக்கப்பட்டதை எதிர்த்து அந்த இடங்களில் உள்ளிரிப்புப் போராட்டங்கள் வெற்றிகரமாக முதலில் பரவலான முறையில் பயன்படுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து பலவேறு சூழ்நிலைகளில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க