திக் நியாட் ஹன்
Appearance
திக் நியாட் ஹன் | |
---|---|
பாரீசில் நியாட் ஹன் (2006) | |
மற்ற பெயர்கள் | Thầy (ஆசான்) |
பட்டம் | Thiền Sư (Zen master) |
சமயம் | Thiền பௌத்தம் |
திக் நியாட் ஹன் (பி. 11 அக்டோபர் 1926 - இ. 22 சனவரி 2022[1]) ஜென் ஆசான்களுள் குறிப்பிடத்தக்கவர். இவர் உலக அமைதிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடியவர் ஆவார்; குறிப்பாக, வியட்நாம் போருக்கு எதிராகக் குரல் கொடுத்தார். சமூக ஈடுபாடுள்ள பவுத்தம் என்ற புத்தமதப் பிரிவு உருவாகக் காரணமாக இருந்தவர்களுள் ஒருவர்[2]. அவரது மாணவர்களால், தே (ஆசான் என்று பொருள்) என்று அழைக்கப்பட்ட ஹன், விழிப்புணர்வு இயக்கத்தின் தந்தை என்றும் குறிப்பிடப்படுகின்றார்[3].
பிறப்பு
[தொகு]1926 ஆம் ஆண்டு மத்திய வியட்நாமில் பிறந்த நியாட் ஹன் பதினாறாவது வயதில் துறவு மேற்கொண்டார்.
சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளி
[தொகு]1960- ஆம் ஆண்டில் சைகானில் சமூக நலப்பணிகளுக்கான இளைஞர் பள்ளியைத் (School of Youth for Social Services (SYSS)) தொடங்கினார்.
இப்பள்ளியின் பணிகள்
[தொகு]- குண்டுத் தாக்குதலுக்குள்ளான கிராமங்களைச் சீரமைத்தல்
- பள்ளிகள் தொடங்கல்
- மருத்துவமனைகள் தொடங்கல்
- வியட்நாம் போரில் வீடிழந்த குடும்பங்களை மீள் குடியமர்த்துதல்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thich Nhat Hanh, revered Zen Buddhist monk and peace activist, dies at 95". பார்க்கப்பட்ட நாள் 25 Jan 2022.
- ↑ "Ann Gleig. Engaged Buddhism". பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2022.
- ↑ "From MLK to Silicon Valley, how the world fell for 'father of mindfulness'". பார்க்கப்பட்ட நாள் 25 சனவரி 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]- Order of Interbeing
- Parallax Press – founded by Thich Nhat Hanh
- Plum Village – Thich Nhat Hanh's monastery
- Sangha Directory – List of communities practicing in Thich Nhat Hanh's tradition