ஆர்.என்.ஏ. பாலிமரசு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
ரிபோ கரு அமில (ஆர்.என்.ஏ) பாலிமரசு அல்லது சுருக்கமாக ஆர்.என்.ஏ பாலிமரசு (Ribonucleic acid (RNA) polymerase) மரபு ஈரிழையில் (DNA) இருந்து ரிபோ கரு அமில (ஆர்.என்.ஏ) உற்பத்தியில் ஈடுபடுகிறது. இந்த நொதியின் மரபணு பகுதியின் (coding region) கட்டமைப்பைப் பொறுத்து மூன்று வகையாக பிரிக்கலாம்.[1][2][3]
- டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (அனைத்து உயிர்களிலும் இவை காணப்படும், விரிவாக அறிய கீழ் பார்க்கவும்)
- ஆர்.என்.ஏ சார்ந்த ஆர்.என்.ஏ பாலிமரசு (எ+கா: போலியோ வைரஸ்)
- ஆர்.என்.ஏ சார்ந்த டி.என்.ஏ. பாலிமரசு அல்லது ரிவேர்சு ட்ரன்ஸ்கரிப்டசு (Reverse transcriptase எ+கா: எச்.ஐ.வி)
டி.என்.ஏ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு
[தொகு]நிலைகருவற்ற (நிலைக்கருவிலி), தெளிவற்ற உட்கரு உடையது. (எ.கா. பாக்டீரியா, நீல பாசிகள்) நுண்ணுயிர்களில் ஒரே ஒரு ஆர்.என்.ஏ பாலிமரசும், ஆனால் இவை பல நுண் துகளாக பகுக்கப்படுகிறது (எ+கா: ஆல்பா, பீட்டா). இவைகள் சிறு ஆர்.என்.ஏ மற்றும் பெரும் ஆர்.என்.ஏ. உற்பத்தியில் ஈடுபடுகிறது. நிலைகருவற்ற உயிர்களில் மரபணு பகுதி (exons or coding region), மரபணு அற்ற (intron or non-coding region) என்ற வேறுபாடுகள் கிடையாது.
நிலைக்கரு (மெய்க்கருவுயிரி) உயிர்களில் ஆர்.என்.ஏ பாலிமரசு மூன்று வகைகள் உள்ளன.
- ஆர்.என்.ஏ பாலிமரசு I
- ஆர்.என்.ஏ பாலிமரசு II
- ஆர்.என்.ஏ பாலிமரசு III.
அண்மையில் ஆர்.என்.ஏ பாலிமரசு IV மற்றும் ஆர்.என்.ஏ பாலிமரசு V கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விரண்டும் சிறு ஆர்.என்.எ (siRNA, short interfering RNA) உற்பத்திக்கு, தாவரங்களில் பயன்படுகிறது.
ஆர்.என்.ஏ பாலிமரசு I
[தொகு]இந் நொதி ரிபோசோமல் ஆர்.என்.எ மற்றும் 28S, 18S, 5.8S (S- என்பது ஒரு அலகு) உற்பத்தியில் ஈடுபடுகிறது. இவைகள் ரிபோசோமில் காணப்படும்.
ஆர்.என்.எ பாலிமரசு II
[தொகு]செய்தி ஆர்,என் .எ மற்றும் அதற்கு முந்திய ரிபோ கரு அமிலம் உற்பத்தி செய்கிறது. முந்திய ரிபோ கரு அமிலத்தில் மரபணு பகுதி, மரபணு அற்ற என்ற பகுதிகள் மிகுந்து காணப்படும். மரபணு அற்ற பகுதிகள் (introns or non-coding region) ஆர்.என்.எ முதிர்வாக்கம் ( RNA Splicing) என்ற நிகழ்வினால் செய்தி ஆர்.என்.எ வாக (mRNA) மாற்றப்படும்.
மேலும் இந் நொதி குறு ஆர்.என்.எ (micro RNA) உற்பத்தியிலும் ஈடுபடுகிறது. இவைகள் மரபணு அளவுகளை ( gene expression) கட்டுப்படுத்துகின்றன.
ஆர்.என்.ஏ பாலிமரசு III
[தொகு]இந் நொதி டி.ஆர்.என்.ஏ உற்பத்திக்குப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Evolution of multisubunit RNA polymerases in the three domains of life". Nature Reviews. Microbiology 9 (2): 85–98. February 2011. doi:10.1038/nrmicro2507. பப்மெட்:21233849. See also Cramer 2002: "Multisubunit RNA polymerases". Current Opinion in Structural Biology 12 (1): 89–97. February 2002. doi:10.1016/s0959-440x(02)00294-4. பப்மெட்:11839495.
- ↑ Nobel Prize in Chemistry 2006
- ↑ "Structural biology: How proteins got their close-up". Knowable Magazine. 1 March 2022. doi:10.1146/knowable-022822-1. https://knowablemagazine.org/article/living-world/2022/structural-biology-how-proteins-got-their-closeup. பார்த்த நாள்: 25 March 2022.