உள்ளடக்கத்துக்குச் செல்

இயூரோன் ஏரி

ஆள்கூறுகள்: 44°48′N 82°24′W / 44.8°N 82.4°W / 44.8; -82.4
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயூரோன் ஏரி
இயூரோன் ஏரியின் கரைத்தோற்றம்
இயூரோன் ஏரி, மற்ற பேரேரிகளின் நிலப்படம்
அமைவிடம்வட அமெரிக்கா
குழுஅமெரிக்கப் பேரேரிகள்
ஆள்கூறுகள்44°48′N 82°24′W / 44.8°N 82.4°W / 44.8; -82.4
ஏரி வகைபனிப்பாறை ஏரி
முதன்மை வரத்துமக்கினாக் நீரிணை, புனித மேரி ஆறு
முதன்மை வெளியேற்றம்புனித கிளையர் ஆறு
வடிநிலப் பரப்பு51,700 sq மை (134,100 கிமீ2)[1]
வடிநில நாடுகள்ஐக்கிய அமெரிக்கா, கனடா
அதிகபட்ச நீளம்206 mi (332 km)[1]
அதிகபட்ச அகலம்183 mi (295 km)[1]
மேற்பரப்பளவு23,007 sq மை (59,588 கிமீ2)[1]
சராசரி ஆழம்195 அடி (59 m)[1]
அதிகபட்ச ஆழம்750 அடி (229 m)[1]
நீர்க் கனவளவு850 cu mi (3,543 km3)[1]
நீர்தங்கு நேரம்22 ஆண்டுகள்
கரை நீளம்11,850 mi (2,980 km) + தீவுகளுக்காக 1,980 mi (3,190 km)[2]
கடல்மட்டத்திலிருந்து உயரம்577 அடி (176 m)[1]
Islandsமனிட்டூலின் தீவு
பிரிவுகள்/துணைப் பகுதிகள்ஜியார்ஜியன் விரிகுடா, வடக்குக் கால்வாய்
குடியேற்றங்கள்மிச்சிகன் மாநிலத்தில் பே நகரம், அல்பேனா, செபோய்கன், புனித இக்னேசு, இயூரோன் துறைமுகம்; ஒண்டாரியோவில் காட்ரிச், சார்னியா
மேற்கோள்கள்[3]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

இயூரோன் ஏரி (Lake Huron) வட அமெரிக்காவின் ஐந்து பேரேரிகளில் ஒன்றாகும் . நீரியலின்படி, இது மிச்சிகன்-ஹுரோன் ஏரியின் கிழக்குப் பகுதியாகும்; இதன் மேற்கிலுள்ள மிச்சிகன் ஏரியுடன் 5-மைல்-அகலமுள்ள (8.0 கிமீ), 20-பதாம்-ஆழமுள்ள (120 அடி; 37 மீ) மக்கினாக் நீரிணையால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியின் வடக்கிலும் கிழக்கிலும் கனடாவின் ஒன்றாரியோ மாநிலமும் தெற்கிலும் மேற்கிலும் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலமும் உள்ளது. இந்த ஏரிக்கு துவக்க கால பிரான்சிய நாடுகாண் தேடலறிஞர்கள் இப்பகுதியில் வசித்து வந்த இயூரோன் மக்கள் பெயரைச் சூட்டினர்.

இந்த ஏரிப்பகுதியில் கிடைத்த சான்றுகளை வைத்தே இயூரோன் உறைபனிப்பரவலுக்கு அவ்வாறு பெயர் சூட்டப்பட்டது. ஏரியின் வடக்குப் பகுதிகளில் வடக்குக் கால்வாயும் ஜியார்ஜியன் விரிகுடாவும் அடங்கும். தென்மேற்கே ஏரிக்கு எதிரே சாகினா விரிகுடா உள்ளது. புனித மேரி ஆறு முதன்மையான நீர் வரத்து ஆகும்; முதன்மையான வெளியேற்றுகை புனித கிளையர் ஆறாகும்.

புவியியல்

[தொகு]

மேற்புரப்பரப்பளவில் இயூரோன் ஏரி பேரேரிகளில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியாகும். இதன் மேற்பரப்பு 23,007 சதுர மைல்கள் (59,590 ச.கிமீ) ஆகும்; இதில் 9,103 சதுர மைல்கள் (23,580 கிமீ2) மிச்சிகனிலும் 13,904 சதுர மைல்கள் (36,010 கிமீ 2) ஒன்றாரியோவிலும் உள்ளன. புவியின் மூன்றாவது-மிகப்பெரிய நன்னீர் ஏரியாக (காசுப்பியன் கடல் ஏரியாகக் கருதப்பட்டால் நான்காவது மிகப்பெரிய ஏரியாக) உள்ளது.[1] ஆனால் கொள்ளளவின்படி இயூரோன் ஏரி பேரேரிகளில் மூன்றாவதாகும். இதை விட மிச்சிகன் ஏரியும் சுப்பீரியர் ஏரியும் பெரியன.[4] தாழ் நீர்நிலையை அளவிடும்போது ஏரியின் கொள்ளளவு 850 cubic miles (3,500 km3) ஆகும்; தீவுகளினுடையதும் சேர்த்து கரையோர நீளம் 3,827 mi (6,159 km).[1]

இயூரோன் ஏரியின் மேற்பரப்பு கடல் மட்டத்திலிருந்து 577 அடி (176 மீ) உயரத்தில் உள்ளது.[1] ஏரியின் சராசரி ஆழம் 32 பதொம் 3 அடியாகவும் (195 அடி (59 மீ)), மீயுயர் ஆழம் 125 பதொம்களாகவும் (750 அடி (230மீ)) உள்ளது.[1] ஏரியின் அகலம் 206 மைல்கள் (332 கிமீ; 179 க.மைல்) மற்றும் அதன் மிகப்பெரும் அகலம் 183 மைல்கள் (295 கிமீ; 159 க.மைல்கள்).[1]

இயூரோன் ஏரியை அடுத்த 10,000 மக்கள்தொகைக்கும் கூடுதலான நகரங்கள் கனடாவில் சார்னியாவும் சௌகீன் சோர்சும் ஐக்கிய அமெரிக்காவில் பே சிட்டி, போர்ட் இயூரோன், அல்பெனா ஆகியவையும் ஆகும். இதில் இயூரோன் ஏரிக்கரையில் அமைந்துள்ள நகரங்களில் மிகப்பெரியது சார்னியா ஆகும்.

இயூரோன் ஏரியிலிருந்து வடகிழக்கில் கனடாவின் ஒன்றாரியோவினுள் நீட்டிக்கொண்டிருக்கும் விரிகுடா ஜியார்ஜியன் விரிகுடா என அழைக்கப்படுகின்றது. இயூரோன் ஏரியின் முதன்மை நீர் நிலையிலிருந்து ஜியார்ஜியன் விரிகுடாவையும் வடக்குக் கால்வாயையும் பிரிக்கும் மனிட்டூலின் தீவு இந்த ஏரியின் குறிப்பிடத்தக்க கூறாக உள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய ஏரித்தீவு ஆகும். [5] ஜியார்ஜியன் விரிகுடாவிலுள்ள முதன்மையான மையங்கள் ஓவென் சவுண்டு, வசாகா கடற்கரை, காலிங்வுட், மிட்லாந்து, பெனெடங்குசென், செவெர்ன் துறைமுகம் மற்றும் பாரி சவுண்டு.

இயூரோன் ஏரியின் தென்மேற்கில் மிச்சிகன் மாநிலத்தினுள் நீட்டிக்கொண்டிருக்கும் சிறிய விரிகுடா சாகினா விரிகுடா எனப்படுகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 "Great Lakes Factsheet No. 1". U.S. Environmental Protection Agency. June 25, 2012. பார்க்கப்பட்ட நாள் March 6, 2014.
  2. பேரேரிகளின் கரைகள்
  3. Wright, John W., ed. (2006). The New York Times Almanac (2007 ed.). New York, New York: Penguin Books. p. 64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-303820-6.
  4. Annin, Peter (2006). The Great Lakes Water Wars. Island Press. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55963-087-0.
  5. "Seven Wonders of Canada-Manitoulin Island, Ontario". CBC.ca. பார்க்கப்பட்ட நாள் 8 October 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]