உள்ளடக்கத்துக்குச் செல்

இயேசுவின் பாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயேசுவின் பாடுகள் அல்லது திருப்பாடுகள் என்பது விவிலியத்தின்படி இயேசுவின் இவ்வுலகவாழ்வில் இறுதி கட்டமாகும். இது இயேசு எருசலேமில் நுழைதலில் தொடங்கி அவரின் இறப்பு மற்றும் அடக்கத்தில் நிறைவடைகின்றது. நான்கு நற்செய்தி நூல்களிலும் இந்நிகழ்வு விவரிக்கப்பட்டுள்ளது. திருமுறைக்கு வெளியே புனித தேதுருவின் நற்செய்தியில் இந்நிகழ்வு குறித்த தகவல்கள் உள்ளன. இது கிறித்தவத்தின் மைய்ய நிகழ்வாக கருதப்படுகின்றது. இது ஆண்டுதோறும் புனித வாரத்தின் இறுதியில் பாஸ்கா முந்நாட்கள் என நினைவுகூறப்படுகின்றது. கிறித்தவத்தில் மிக முக்கிய நிகழ்வுகளாக இவை கருதப்படுவதால் இவை கலையிலும் அதிகம் சித்தரிக்கப்படுகின்றன. கத்தோலிக்க திருச்சபை மற்றும் மரபுவழி சபைகள் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியில் இந்த நிகழ்வை நினைவு கூர்கின்றன.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cassell's Latin Dictionary, Marchant, J. R. V., & Charles, Joseph F., (Eds.), Revised Edition, 1928, p.396
  2. "BBC - The Passion - Articles - Judas". www.bbc.co.uk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2022-09-21. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
  3. Sheingorn, Pamela (1 January 1995). The Book of Sainte Foy. University of Pennsylvania Press. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8122-1512-5.