உள்ளடக்கத்துக்குச் செல்

உரைக்கோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரைக்கோப்பு
கோப்பு நீட்சி.txt
அஞ்சல் நீட்சிtext/plain
வகைக்குறியீடுTEXT
சீர் சரவகைக் காட்டி(UTI)public.plain-text
UTI இணக்கம்public.text
இயல்புஆவணக்கோப்பு வடிவம், எண்ணிமக்கலன் வடிவம்

உரைக்கோப்பு (Text file/flat file) என்பது கணினிவடிவக் கோப்புகளில் ஒன்றாகும். இது மின்னணு வடிவினை அடிப்படையாகக் கொண்டு, கிடைமட்ட நேர்கோட்டு வடிவில் அமைந்த வரிவடிவத்தை மட்டுமே பெற்றிருக்கும். இதில் எழுத்து வடிவமும், குறியீடுகளும், எண்களும் மட்டுமே அடங்கியிருக்கும். எவ்வித ஊடகக்கோப்புகளையும் தன்னகத்தேப் பெற்றிருக்கும் திறன் இல்லாததாக இருக்கும். கணினி தனக்குரிய தரவுத்தேக்ககத்தில், அதன் உரைக்கோப்பை, அதன் கணினிக்கோப்புக் கட்டகத்தில் சேமித்து, மறுபயன்பாட்டிற்கு நிலைநிறுத்துகிறது. அவ்விதம் நிலைநிறுத்தும் போது, எம்எஸ்-டொஸ் இயுக்குமுறைமைகளில், அக்கோப்பின் இறுதியில் நிறுத்தற்குறியீட்டை( EOF)ப் பயன்படுத்துகிறது. அந்த குறியீட்டு முறைகளை, தற்போதுள்ள புதிய இயக்குதளங்கள் பயன்படுத்துவது இல்லை. எனவே, உரைக்கோப்பு(Text file) என்பது தரவுகல(data container) வகைகளில் ஒன்றாகும். அதனுள் வரியுரைத்(plain text) தேக்கப்படுகிறது. தோற்ற அடிப்படையில் கணினிக்கோப்புகளானது இருவகைப்படும். அதில் ஒன்றே உரைக்கோப்பாகும். மற்றொன்று இருமக்கோப்பு(Binary file) ஆகும்[1]

தமிழ் உள்ளீட்டு வேறுபாடு

[தொகு]
இந்நிகழ்படமானாது லினக்சு+வின்டோசில் உரைக்கோப்பினை உருவாக்குதலை விளக்குகிறது
  • லினக்சு வகை கட்டற்ற இயக்குதளங்களில் தமிழை, ஒருங்குறியில் உள்ளீடு செய்து, சேமித்தல் எளிமையானது. வழமை போல, கோப்பில் உள்ளீடு செய்து, சேமிக்கும் பொத்தானை(Ctrl+c) அழுத்தினால் போதுமானது.
  • வின்டோசு போன்ற காப்புரிமையுள்ள இயக்குதளங்களில், தமிழை சேமித்தல், பல படி நிலைகளைக் கடந்தே செய்ய வேண்டியுள்ளது. சேமிக்கும் பொத்தானை அழுத்தியவுடன் சேமிக்காமல், சில தெரிவுகளைக் கேட்கும், உரிய தெரிவுகளை, நாம் தேர்ந்தெடுக்கா விட்டால், நாம் சேமித்த தமிழ் உள்ளீடுகள் அனைத்தும் கேள்விக்குறிகளாக மாறி, நாம் தட்டச்சு செய்த உள்ளீடுகள் அழிந்து விடும். ஏனெனில், பல வின்டோசு இயக்குதளங்கள், அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலக குறியீட்டு முறைமைகளை(ANSI encoding system) இயல்பிருப்பாகப் பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lewis, John (2006). Computer Science Illuminated. Jones and Bartlett. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7637-4149-3.

புற இணைப்புகள்

[தொகு]