ஐதரசன் சயனைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
பார்மோநைட்ரைல்
| |||
வேறு பெயர்கள்
ஐதரோசயனிக் அமிலம்
புருசிக் அமிலம் பார்மோநைட்ரைல் பார்மிக் அனமோனைடு கார்பன் ஐதரைடு நைட்ரைடு சயனேன் சைக்ளோன் | |||
இனங்காட்டிகள் | |||
74-90-8 | |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
வே.ந.வி.ப எண் | MW6825000 | ||
| |||
பண்புகள் | |||
HCN | |||
வாய்ப்பாட்டு எடை | 27.03 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற வாயு அல்லது வெளிறிய ஊதா நிற எளிதில் ஆவியாகக்கூடிய திரவம் | ||
அடர்த்தி | 0.687 கி/செமீ³, திரவம். | ||
உருகுநிலை | -13.4 °செல்சியசு (259.75 கெல்வின், 7.88 °பாரன்கீட்) | ||
கொதிநிலை | 26 °செல்சியசு (299.15 கெல்வின், 78.8 °பாரன்கீட்) | ||
முழுமையாகக் கலக்கக்கூடியது. | |||
காடித்தன்மை எண் (pKa) | 9.2 - 9.3 | ||
கட்டமைப்பு | |||
மூலக்கூறு வடிவம் | |||
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 2.98 Db | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அதிக நச்சுத்தன்மை, எளிதில் தீப்பற்றக்கூடியது. | ||
R-சொற்றொடர்கள் | R12, R26, R27, R28, R32. | ||
S-சொற்றொடர்கள் | (S1), (S2), S7, S9, S13, S16, S28, S29, S45. | ||
தீப்பற்றும் வெப்பநிலை | −17.78 °செல்சியசு (−64.004 °பாரன்கீட்) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
தொடர்புடைய சேர்மங்கள் | சயனோஜென் சயனோஜென் குளோரைடு டிரைமெதில்சிலைல் சயனைடு மெதிலிடீன்பாஸ்பேன் | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
ஐதரசன் சயனைடு (Hydrogen cyanide) அல்லது புரூசிக் அமிலம் (Prussic acid) என்பது HCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொன்ட ஒரு வேதிச்சேர்மமாகும்.[1] இச்சேர்மம், நிறமற்றதும், அதிக நச்சுத்தன்மை கொண்டதும், எளிதில் தீப்பற்றக் கூடியதுமான திரவமாகும். இத்திரவமானது, அறை வெப்பநிலைக்குச் சற்று அதிகமான வெப்பநிலையிலேயே, அதாவது, 26 °C (79 °F)கொதிக்கக் கூடியதாக உள்ளது.[2] ஐதரசன் சயனைடானது தொழில் முறையில் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது. பலபடிகளிலிருந்து மருந்தியல் பொருட்கள் வரை பல்வேறு வேதிச்சேர்மங்களின் தயாரிப்பில் மிகவும் மதிப்பு மிக்க முன்னோடிச் சேர்மமாகும்.
அமைப்பு மற்றும் பொதுவான பண்புகள்
[தொகு]ஐதரசன் சயனைடானது, கார்பன் மற்றும் நைட்ரசன் இவற்றுக்கிடையே முப்பிணைப்பைக் கொண்டுள்ள நேர்கோட்டு வடிவ சேர்மமாகும். ஐதரசன் சையனைடின் ஒரு சிறு தானொத்திய சேர்மம் ஐதரசன் ஐசோ சயனைடு (HNC) ஆகும்.
ஐதரசன் சயனைடு 9.2 என்ற குறைவான காடித்தன்மை எண்ணுடன் மிகக்குறைந்த அமிலத்தன்மை கொண்டதாக இருக்கிறது. இந்த சேர்மம் நீரில் பகுதியளவு அயனியாக்கம் அடைந்து சயனைடு எதிரயனியைத் தருகிறது. நீரில் ஐதரசன் சயனைடு கரைந்த கரைசலானது ஐதரோ சயனிக் அமிலம் என அழைக்கப்படுகிறது. சயனைடு எதிரயனியைக் கொண்ட உப்புகள் சயனைடுகள் என அழைக்கப்படுகின்றன.
கண்டுபிடிப்பின் வரலாறு
[தொகு]ஐதரசன் சயனைடானது 1704 ஆம் ஆண்டு முதலே நன்கறியப்பட்ட, மூலக்கூறு அமைப்பு அறியப்படாத பிரஷ்யன் நீலம் என்ற நிறமிப்பொருளிலிருந்து முதன்முதலில் பிரித்தெடுக்கப்பட்டது. பிரஷ்யன் நீலத்தின் அமைப்பானது நீரேற்றப்பட்ட பெர்ரிக் பெர்ரோ சயனைடின் விகிதாச்சார வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு அணைவுப் பல்லுறுப்பியின் சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது என்பது தற்பொழுது அறியப்படுகிறது. 1752 ஆம் ஆண்டில், பிரெஞ்சு வேதியியலாளர் பியரி மாக்குயெர் என்பவர் பிரஷ்யன் நீலம் என்ற நிறமியானது இரும்பு ஆக்சைடு மற்றும் ஒரு எளிதில் ஆவியாகக்கூடிய பகுதிப்பொருளுமாக மாற்றப்படலாம் என்ற முக்கியமான படிநிலையைக் கண்டறிந்தார். மேலும், இப்பகுதிப்பொருட்கள் கூடி மீண்டும் பிரஷ்யன் நீலத்தை உருவாக்க முடியும் என்பதையும் அவர் கண்டறிந்தார்.[3] அன்று அறியப்படாது இருந்த எளிதில் ஆவியாகும் தன்மையுள்ள மற்றுமொரு பகுதிப்பொருளே ஐதரசன் சயனைடாக இன்று அறியப்படுகிறது. பியரி மாக்குயெரின் கண்டுபிடிப்பினைத் தொடர்ந்து, 1782 ஆம் ஆண்டில், சுவீடன் நாட்டு வேதியியலாளர் கார்ல் வில்லியம் ஷீலே என்பவர் பிரஷ்யன் நீலத்திலிருந்து முதன் முதலில் ஐதரசன் சயனைடைத் தயாரித்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gail, E.; Gos, S.; Kulzer, R.; Lorösch, J.; Rubo, A.; Sauer, M. (2005), "Cyano Compounds, Inorganic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a08_159.pub2
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Wolfram-Alpha: Computational Knowledge Engine".
- ↑ Macquer, Pierre-Joseph (presented: 1752; published: 1756) "Éxamen chymique de bleu de Prusse" (Chemical examination of Prussian blue), Mémoires de l'Académie royale des Sciences , pp. 60–77.
- ↑ Scheele, Carl W. (1782) "Försök, beträffande det färgande ämnet uti Berlinerblå" (Experiment concerning the coloring substance in Berlin blue), Kungliga Svenska Vetenskapsakademiens handlingar (Royal Swedish Academy of Science's Proceedings), 3: 264–275 (in Swedish).
Reprinted in Latin as: "De materia tingente caerulei berolinensis" in: Carl Wilhelm Scheele with Ernst Benjamin Gottlieb Hebenstreit (ed.) and Gottfried Heinrich Schäfer (trans.), Opuscula Chemica et Physica (Leipzig ("Lipsiae"), (Germany): Johann Godfried Müller, 1789), vol. 2, pages 148–174.
வெளியிணைப்புகள்
[தொகு]- Institut national de recherche et de sécurité (1997). "Cyanure d'hydrogène et solutions aqueuses பரணிடப்பட்டது 2006-02-20 at the வந்தவழி இயந்திரம்". Fiche toxicologique n° 4, Paris:INRS, 5pp. (PDF file, in French)
- International Chemical Safety Card 0492
- Hydrogen cyanide and cyanides (CICAD 61)
- National Pollutant Inventory - Cyanide compounds fact sheet பரணிடப்பட்டது 2006-05-17 at the வந்தவழி இயந்திரம்
- NIOSH Pocket Guide to Chemical Hazards
- European Chemicals Bureau பரணிடப்பட்டது 2011-07-22 at the வந்தவழி இயந்திரம்
- Department of health review பரணிடப்பட்டது 2011-06-07 at the வந்தவழி இயந்திரம்
- OSHA: HCN Health Guidelines பரணிடப்பட்டது 2010-01-27 at the வந்தவழி இயந்திரம்