ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல்
(மலேசிய வரலாற்றின் ஒரு பகுதி) மலேசிய வரலாறு |
---|
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் (மலாய்: Skandal 1Malaysia Development Berhad; ஆங்கிலம்: 1Malaysia Development Berhad Scandal; சீனம்: 一个马来西亚发展有限公司丑闻) என்பது தற்போது மலேசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழல், லஞ்சம் மற்றும் பணமோசடி சதித்திட்டம் சார்ந்த ஊழல் வழக்கு ஆகும்.
இதில் ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் அல்லது 1எம்டிபி (மலாய்: 1Malaysia Development Berhad; (1MDB) ஆங்கிலம்: 1Malaysia Development Berhad) எனும் நிறுவனத்திற்குச் சொந்தமான நிதி; திட்டமிட்ட முறையில் மோசடி செய்யப்பட்டது; மற்றும் உலகளவிய நிலையில் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் திருப்பி விடப்பட்டன.[1]
இந்த ஊழல் வழக்கு 2009-ஆம் ஆண்டு மலேசியாவில் தொடங்கினாலும், உலகளாவிய நிலையிலான அரசியல்வாதிகள், வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை உட்படுத்தியது, மேலும் பல நாடுகளில் குற்றவியல் விசாரணைகளுக்கும் வழிவகுத்துக் கொடுததது.
பொது
[தொகு]1எம்டிபி ஊழல் என்பது "உலகின் மிகப்பெரிய நிதி ஊழல்களில் ஒன்று" என விவரிக்கப்படுகிறது.[2][3] அத்துடன், ஐக்கிய அமெரிக்க நீதித் துறையால் (United States Department of Justice), 2016-ஆம் ஆண்டு தொடங்கி "இன்றைய வரையில் மிகப்பெரிய அதிகார வர்க்க ஊழல் வழக்கு" (Largest Kleptocracy Case) என அறிவிக்கப்பட்டது.[4]
2015-ஆம் ஆண்டு தொடக்கம் 1எம்டிபி நிறுவனத்திற்குப் பிரச்சினைகள் தொடங்கின. சந்தேகத்திற்கு உரிய பண பரிவர்த்தனைகள்; சந்தேகத்திற்கு உரிய பணமோசடி நடவடிக்கைகள்; பணச் சலவைகள்; ஊழல்கள் போன்ற நடவடிக்கைகளில் அந்த நிறுவனம் ஈடுபட்டதாகச் செய்திகள் கசியத் தொடங்கின.
சரவாக் ரிப்போர்ட்
[தொகு]இலண்டன் மாநகரில் இருந்து வெளிவரும் சரவாக் ரிப்போர்ட் இணையத் தளம் தான் முதன் முதலில் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து தி எட்ஜ் மலேசியா எனும் செய்தி இதழும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் இரகசியங்களை வெளி உலகத்தில் கசிய விட்டது. அதனால் 1எம்.டி.பி. நிறுவனம் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.
2015-ஆம் ஆண்டு (The Edge), சரவாக் ரிப்போர்ட் (Sarawak Report) மற்றும் தி வால் இஸ்ட்ரீட் ஜர்னல் (The Wall Street Journal) ஆகிய ஊடகங்களில் ஆவணக் கசிவு பதிவாகின. மலேசியாவின் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தன் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் 1எம்டிபி-யில் இருந்து ரிங்கிட் RM 2.67 பில்லியன் (சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலுத்தப் பட்டதாக ஆவணக் கசிவுகள் பதிவாகின.[5]
ஜோ லோ
[தொகு]இந்தத் திட்டத்தின் மூளை என அறியப்படும் ஜோ லோ (Jho Low), மோசடி அல்லது வரி ஏய்ப்பு நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் பன்னாட்டு அளவில் 1எம்டிபி நிதியை நகர்த்துவதில் மையமாக இருந்தார்.
2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேசியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகள்; மற்றும் பிற சதிகாரர்கள் 1எம்டிபியில் இருந்து அமெரிக்க டாலர் US $4.5 பில்லியனுக்கும் அதிகமான தொகையைத் திருப்பி விட்டதாக அமெரிக்க நீதித்துறை கண்டறிந்துள்ளது.[6]
ஆடம்பரமான வாழ்க்கை
[தொகு]அவ்வாறு திசை திருப்பப்பட்ட 1எம்டிபி நிதி, ஆடம்பரப் பொருட்கள் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்பட்டுள்ளது. மேலும், இக்குவானிமிட்டி (Equanimity) எனும் அதிநவீன சொகுசுக் கப்பல் வாங்குவதற்கும்; அமெரிக்க திரைப்பட நிறுவனமான ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (Red Granite Pictures) நிறுவனத்தின் தி ஊல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் (The Wolf of Wall Street) எனும் திரைப்படத்தைத் தயாரிப்பதற்கும்; மற்றும் பிற படங்களைத் தயாரிப்பதற்கும் 1எம்டிபி நிதியில் இருந்து நிதியளிக்கப்பட்டது.[7]
1எம்டிபி நிதியானது ஜோ லோ, நஜீப் ரசாக் மற்றும் நஜீப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் (Rosmah Mansor) மற்றும் நஜீப் ரசாக்கின் வளர்ப்பு மகன் ரிசா அசீஸ் (Riza Aziz) ஆகியோரின் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பயன்படுத்தப்பட்டது. ரிசா அசீஸ், ரோஸ்மாவின் முதல் கணவர் அப்துல் அஜிஸ் நோங் சிக் (Abdul Aziz Nong Chik) என்பவரின் மகன் ஆவார்.
அத்துடன் மலேசியாவில் அரசியல் நன்கொடைகள் வழங்குவதற்கும்; மற்றும் ஐக்கிய அமெரிக்காவில் பரப்புரைக்ள் செய்வதற்கும் மோசடி செய்யப்பட்ட நிதிகள் பயன்படுத்தப்பட்டன.[8]
விளைவுகள்
[தொகு]ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் மோசடி இரகசியங்கள் வெளியே கசியத் தொடங்கியதும் மலேசியாவில் ஒரு பெரிய அரசியல் ஊழலாக மாறியது; அவையே எதிர்ப்புகளையும் பின்னடைவுகளையும் தூண்டி விட்டன.
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவன ஊழல் தொடர்பாக மலேசியாவில் விசாரணைகள் தொடங்கப்பட்ட பின்னர், நஜீப் ரசாக்கை விமர்சித்த பலர், அரசாங்கப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்களில் முன்னாள் மலேசிய துணைப் பிரதமர் முகிதீன் யாசின்; மற்றும் அட்டர்னி ஜெனரல் அப்துல் கனி பட்டேல் (Abdul Gani Patail); ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள் ஆவார்கள். நஜீப் ரசாக் மீதான குற்றச்சாட்டுகள் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டன.[9]
மலேசிய குடிமக்கள் பிரகடனம்
[தொகு]நஜீப் ரசாக்கின் விமர்சகர்களில், அவரின் முன்னாள் நண்பரும் மலேசியாவின் நான்காவது பிரதமருமான மகாதீர் முகமதுவும் ஒருவர் ஆவார்.[10] அந்தக் கட்டத்தில் அவர் மலேசிய குடிமக்கள் பிரகடனத்திற்குத் (Malaysian Citizens' Declaration) தலைமை தாங்கினார். அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளை ஒன்றிணைந்து, நஜீப் ரசாக் பதவி துறப்பு செய்ய வேண்டும் அல்லது பதவியில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தனர்.
மலேசிய ஆட்சியாளர்களின் பேரவை, இந்த ஊழல் குறித்து உடனடி விசாரணைக்கு அழைப்பு விடுத்தது; இது மலேசியாவில் நம்பிக்கை நெருக்கடியை ஏற்படுத்துவதாகவும் கூறியது.[11][12]
ஆறு நாடுகளில் நடவடிக்கைகள்
[தொகு]மலேசியாவிற்கு வெளியே, 1எம்டிபி தொடர்பான நிதி மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் மீதான விசாரணைகள் ஆறு நாடுகளில் தொடங்கப்பட்டன.[7] பகிரங்கமாகத் தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின்படி, 1எம்டிபி 2015-ஆம் ஆண்டுக்குள் ரிங்கிட் RM 42 பில்லியன் (அமெரிக்க டாலர் US$ 11.73 பில்லியன்) கடனில் இருந்தது.[13]
1எம்டிபி மோசடியில் சிக்கிக் கொண்ட வெளிநாட்டு வங்கிகளில் முதலிடம் வகித்தது ஐக்கிய அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் (Goldman Sachs) எனும் வங்கியாகும். இந்த வங்கியின் தலைமையிலான அமெரிக்க டாலர் $3 பில்லியன் அரசு உத்தரவாதம் பெற்ற பத்திர வெளியீட்டின் விளைவாக ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்காக அமெரிக்க டாலர் $300 மில்லியன் வரை கட்டணம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கோல்ட்மேன் சாஸ் வங்கி
[தொகு]இருப்பினும் கோல்ட்மேன் சாஸ் வங்கி மறுப்பு தெரிவித்தது.[14] இருந்தபோதிலும், கோல்ட்மேன் சாஸ் வங்கி மீது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது; மற்றும் ஐக்கிய அமெரிக்க நீதித் துறையிடம் அமெரிக்க டாலர் 2.9 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்த ஒப்புக்கொண்டது.[15]
1எம்டிபி மோசடி தொடர்பாக ஐக்கிய அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் அமெரிக்க கோல்ட்மேன் சாக்ஸ்வங்கியின் தலைவர் டிம் லீஸ்னர் (Tim Leissner); மற்றும் நிதி திரட்டுபவர் எலியட் பிராய்டி (Elliott Broidy) ஆகியோர் அடங்குவர்.
12 ஆண்டுகள் சிறைத்தண்டனை
[தொகு]மலேசியப் பொதுத் தேர்தல், 2018-க்குப் பிறகு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மகாதீர் முகமது, ஊழல் குறித்த மலேசிய விசாரணைகளை மீண்டும் தொடங்கினார்.[16] மலேசிய குடிவரவு துறை, நஜீப் ரசாக் மற்றும் 11 பேர் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்தது. அதே வேளையில் நஜீப் ரசாக்குடன் தொடர்புடைய சொத்துக்களில் இருந்து 270 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான 500-க்கும் மேற்பட்ட கைப்பைகள்; மற்றும் 12,000 நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மலேசிய வரலாற்றில் அதுவே மிகப்பெரிய பறிமுதல் ஆகும்.[17][18]
பின்னர் நஜீப் ரசாக் மீது நம்பிக்கை மீறல், பணமோசடி மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே வேளையில் தலைமறைவாக இருந்த ஜோ லோ மீதும் குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டது. பன்னாட்டு பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.[19] 1எம்டிபியின் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேசனலுடன் (SRC International) தொடர்புடைய ஏழு குற்றச்சாட்டுகளில் நஜீப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.[20]
மலேசிய அரசாங்க அறிக்கை
[தொகு]செப்டம்பர் 2020-இல், 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் தொகை அமெரிக்க டாலர் US $4.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டது; மற்றும் 1எம்டிபியின் நிலுவையில் உள்ள கடன்கள் அமெரிக்க டாலர் US $7.8 பில்லியன் என்று மலேசிய அரசாங்க அறிக்கை பட்டியலிட்டுள்ளது.[21] 2039-ஆம் ஆண்டு வரையில் 30 ஆண்டு காலத்திற்கு கட்ட வேண்டிய 1எம்டிபி கடன்களை மலேசிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. 2018-ஆம் ஆண்டில் இருந்து அந்தக் கடன்கள் மலேசிய அரசாங்கத்தால் கட்டப்பட்டு வருகின்றன.
ஆகத்து 2021-இல், ஐக்கிய அமெரிக்கா தனது அதிகார வரம்பிற்குள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட 1எம்டிபி நிதியில் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை மீட்டு மலேசியாவிடம் திருப்பிக் கொடுத்தது,[22][23] சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளும் தவறாகப் பயன்படுத்தப்பட்ட 1எம்டிபி நிதியை மீட்டுக் கொடுக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன்.[24]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kelleher, Dennis (2019-05-14). "Goldman Sachs and the 1MDB Scandal". The Harvard Law School Forum on Corporate Governance (in English). Archived from the original on 23 August 2024. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Chen, Heather; Ponniah, Kevin; Mei Lin, Mayuri (2019-08-09). "1MDB: The playboys, PMs and partygoers around a global financial scandal. It has been one of the world's greatest financial scandals." இம் மூலத்தில் இருந்து 21 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200721081321/https://www.bbc.com/news/world-asia-46341603.
- ↑ "Shorenstein Journalism Award Winner Tom Wright Recounts Story of Global Financial Scandal". The Freeman Spogli Institute For International Studies, Stanford University. 2020-11-06. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
- ↑ "International Corruption - U.S. Seeks to Recover $1 Billion in Largest Kleptocracy Case to Date". Federal Bureau of Investigation. 2016-06-20 இம் மூலத்தில் இருந்து 2 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190802134941/https://www.fbi.gov/news/stories/us-seeks-to-recover-1-billion-in-largest-kleptocracy-case-to-date..
- ↑ "Malaysian taskforce investigates allegations $700m paid to Najib". The Guardian. 6 July 2015 இம் மூலத்தில் இருந்து 22 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200422204302/https://www.theguardian.com/world/2015/jul/06/malaysian-task-force-investigates-allegations-700m-paid-to-pm-najib.
- ↑ "US DOJ says pursuing investigations related to Malaysia's 1MDB". The Star. Archived from the original on 7 July 2018. பார்க்கப்பட்ட நாள் 22 May 2018.
- ↑ 7.0 7.1 Latiff, Rozanna (2020-07-26). "EXPLAINER-Malaysia's mega 1MDB scandal that brought down a prime minister" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220620094845/https://www.reuters.com/article/malaysia-politics-najib-idUSL3N2EU1O6.
- ↑ "1MDB scandal: former Trump fundraiser charged with allegedly lobbying US to drop inquiry". The Guardian (in ஆங்கிலம்). Agence France-Presse. 2020-10-09. Archived from the original on 23 August 2024. பார்க்கப்பட்ட நாள் 2022-06-21.
- ↑ Jenkins, Nash (27 January 2016). "Dismissal of Corruption Charges Against Malaysian Prime Minister Prompts Scorn". Time (magazine). Archived from the original on 28 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2021-08-27.
- ↑ "Former Malaysia PM Mahathir calls for removal of PM Najib Razak". BBC News. 30 August 2015 இம் மூலத்தில் இருந்து 22 September 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220922110442/https://www.bbc.com/news/world-asia-34100659.
- ↑ "Malaysia's royal rulers urge quick completion of 1MDB probe". The Straits Times. 6 October 2015. Archived from the original on 9 November 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
- ↑ "Royal rulers deplore Malaysia's 'crisis of confidence'". Al Jazeera. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
- ↑ "1MDB faces fresh debt payment test". Free Malaysia Today. 27 February 2015. Archived from the original on 1 March 2015.
- ↑ Ellis, Eric (1 April 2015). "Jho says it ain't so: Malaysian tycoon denies role in 1MDB 'heist of the century'". Euromoney Magazine இம் மூலத்தில் இருந்து 6 February 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170206172456/http://www.euromoney.com/Article/3442824/Jho-says-it-aint-so-Malaysian-tycoon-denies-role-in-1MDB-heist-of-the-century.html.
- ↑ "Goldman Sachs Charged in Foreign Bribery Case and Agrees to Pay Over $2.9 Billion". en:United States Department of Justice. 22 October 2020 இம் மூலத்தில் இருந்து 18 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220118182642/https://www.justice.gov/opa/pr/goldman-sachs-charged-foreign-bribery-case-and-agrees-pay-over-29-billion.
- ↑ Raghu, Anuradha; Shukry, Anisah (12 May 2018). "Mahathir Picks Lim as Finance Minister, Returns Zeti to Council" (in en). Bloomberg.com இம் மூலத்தில் இருந்து 22 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200422203741/https://www.bloomberg.com/news/articles/2018-05-12/malaysian-pm-mahathir-names-lim-guan-eng-as-finance-minister.
- ↑ "Former Malaysia PM Najib Razak banned from leaving country". BBC News. 12 May 2018 இம் மூலத்தில் இருந்து 14 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210414225302/https://www.bbc.com/news/world-asia-44092143.
- ↑ "12 people on Malaysia's travel blacklist over 1MDB probe" (in en). 2018-05-18 இம் மூலத்தில் இருந்து 21 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210821115919/https://www.straitstimes.com/asia/se-asia/12-people-on-malaysias-travel-blacklist-over-1mdb-probe.
- ↑ "Malaysia's former first lady Rosmah Mansor's seized handbags damaged and government should pay, lawyer tells court". en:South China Morning Post. 10 June 2020. Archived from the original on 23 August 2024. பார்க்கப்பட்ட நாள் 24 November 2020.
- ↑ "Fugitive Malaysian Jho Low charged with money-laundering". en:The Standard (Hong Kong). 24 Aug 2018 இம் மூலத்தில் இருந்து 22 April 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220422003903/https://www.thestandard.com.hk/breaking-news/section/1/112785/Fugitive-Malaysian-Jho-Low-charged-with-money-laundering.
- ↑ Latiff, Rozanna (2020-11-06). Davies, Ed (ed.). "Malaysia's 1MDB state fund still $7.8 billion in debt - government report". [[:en:Reuters|]]. பார்க்கப்பட்ட நாள் 2021-07-11.
- ↑ Chew, Elffie (2020-11-06). "How 'Insolvent' 1MDB's Debt Stacks Up and Who's Saddled With It". [[:en:Bloomberg News|]] இம் மூலத்தில் இருந்து 26 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210826100535/https://www.bnnbloomberg.ca/how-insolvent-1mdb-s-debt-stacks-up-and-who-s-saddled-with-it-1.1084733.
- ↑ "Over $1.6 billion in misappropriated 1MDB funds repatriated to Malaysia so far". 2021-08-06 இம் மூலத்தில் இருந்து 6 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210806113954/https://www.straitstimes.com/asia/se-asia/over-us1-billion-in-misappropriated-1mdb-funds-repatriated-to-malaysia.
- ↑ "Singapore to return $11 million in 1MDB-linked funds to Malaysia". [[:en:Reuters|]]. 2018-09-10 இம் மூலத்தில் இருந்து 7 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210807142148/https://sg.news.yahoo.com/singapore-return-11-million-1mdb-linked-funds-malaysia-055606976--sector.html.
நூல்கள்
[தொகு]- Recastle Brown, Clare (2018). The Sarawak Report: The Inside Story of the 1MDB Exposé. Gerak Budaya. p. 496. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-967-0311-16-6. Archived from the original on 2018-09-17.
- Wright, Tom; Hope, Bradley (2018). Billion Dollar Whale: The Man Who Fooled Wall Street, Hollywood, and the World. Hachette UK. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-316-43648-9.
வெளியிணைப்புகள்
[தொகு]- The Guardian, "1MDB: The inside story of the world's biggest financial scandal", 28 July 2016.
- Global Witness:
- Bloomberg News, "A Guide to the Worldwide Probes of Malaysia's 1MDB Fund", 8 March 2018.