உள்ளடக்கத்துக்குச் செல்

கணினியுருப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியுருப்படம் (Computer Generated Imagery – CGI) என்பது செயற்கையாக ஒரு பொருளை அல்லது காட்சியை இருபரிமாண வடிவிலோ அல்லது முப்பரிமாண வடிவிலோ உருவாக்க பயன்படுகிறது. இது கணினி வரைகலையில் ஒரு அங்கமாகவோ அல்லது செயலியாகவோ உபயோகிக்கப்படுகிறது. சினிமாதுறை மட்டுமல்லாது வெவ்வேறு துறைகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக:

  • விமானப்படையில் விமானிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்காக செயற்கையாக ஒரு சூழலை இதன் மூலம் உருவாக்கி பயற்சியளிப்பர்.
  • இணையவழி விளையாட்டுக்களான பப்ஜி, ஜிடிஏ போன்றவற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சூழலை அவதானிக்கலாம்.
  • முப்பரிமாண அச்சாக்கம் மற்றும் காட்சி விளைவுகள் போன்றவற்றிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]

உருவாக்கமும் பரிணாம வளர்ச்சியும்

[தொகு]

கணினியுருப்பட தொழில்நுட்பத்தின் வரலாறானது 1950களின் தசாப்தத்திற்கு அழைத்துச்செல்கிறது. அக்காலங்களில் இயந்திரக் கணினிகள் மூலம் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

முதன்முறையாக ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் திரைப்படமான "வேர்ட்டிகோ (Vertigo (1958)) வில் இருபரிமாண முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1972 வரை இருபரிமாணத்திற்காகவே பயன்படுத்தப்பட்டது. 1972 களில் "எட்வின் காட்மல் மற்றும் பிரட் பார்க்கால் தயாரிக்கப்பட்ட குறும்படமான "எ கொம்பியூட்டர் அனிமேட்டட் ஹான்ட் இல் முப்பரிமாண கை ஒன்ற தோன்றுவதை அவதானிக்கலாம். இப்படத்தின் மூலமே "முப்பரிமாண கணினிவரைகலை" முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1973 இல் ஹாலிவூட் திரையுலகத்தின் உதவியுடன் "கன்ஸ்லிங்கர் விஷன் - (Gunslinger Vision)" எனும் படத்தில் இரு பரிமாணக்காட்சி ஒன்று உருவாக்கப்பட்டது. அக்காட்சியில், ஒரு இயந்திரமனிதன் (Robot) கண்களால் பார்க்கும் போது அவன் கண்ணில் எவ்வாறு விம்பங்கள் தோன்றும், என்பதை அக்காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 1976 இல் "ஃப்பியூச்சர்வேல்ட் - (Future World)" எனும் முழுநீளத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் "முப்பரிமாணக்கை" ஒன்று தோன்றுவதை அவதானிக்கலாம். இக்காட்சிக்காக ஆஸ்கார் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கதாகும். கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகு " விஞ்ஞானம் மற்றும் பொறியியல் (Scientific and Engineering Academy Award)" விருதும் இதற்கு கொடுக்கப்பட்டது.

1977 இல் "ஸ்டார் வார்ஸ்" திரைப்படத்தில் "டெத் ஸ்டார்-Dead Star" உருவாக்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இத்திரைப்படத்தி ல் டெத் ஸ்டார் ஆனது "வயர் ஃப்பிரேம் - Wire Frame" மூலம் உருவாக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.

மேலும், கணினியுருக்கலையுருத்தொழில்நுட்பத்தில் எப்பொழுது மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டதென்றால், 1993 இல் வெளிவந்த திரைப்படமான "ஜுராசிக் பார்க்-Jurassic Park" இன் மூலமே ஏற்பட்டது. பிற்காலங்களில் மிகப்பெரிய திரைப்படங்களான காட்ஸில்லா, டெர்மினேட்டர், எக்ஸ் மான், அவேஞ்சர்ஸ் போன்றவற்றில் அபரிவிதமாக செல்வாக்கு செலுத்தி வளர்ச்சியடைந்து இருப்பதை அவதானிக்கலாம். இது ஆங்கில திரையுலகமான ஹாலிவூட்டில் மட்டுமன்றி இந்திய திரையலகங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தமிழ் திரையுலகம்

[தொகு]

தமிழ்த்திரையுலகில் 1992 இல் வெளியாகிய படமாகிய "ஜென்டில் மான்" மூலம் இத்தொழில்நுட்பம் தமிழ்த்திரையுலகில் பிரவேசித்தது. அதுமட்டுமன்றி, இதுவே இந்தியாவில் கணினியுருக்கலை பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம், என்பது குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பாகும். இவற்றை தொடர்ந்து "காதலன், ஜீன்ஸ், இந்தியன் மற்றும் முதல்வன் போன்ற படங்களில் இயக்குநர் ஷங்கரால் பிரசித்தப்படுத்தப்பட்டது.

இத்தொழில்நுட்பம் தற்கால தமிழ் திரைப்படங்களிலும் தாக்கம் செலுத்தியுள்ளதை அவதானிக்கலாம். உதாரணமாக :- எந்திரன், சிவாஜி, ஐ, ரெமோ, 2.0 போன்றவற்றைக்கூறலாம்.

தெலுங்குத்திரையுலகம்

[தொகு]

தெலுங்கில் கோடி இராமக்கிருஷ்ணா என்னும் இயக்குனரால் இயக்கப்பட்டு 1995 இல் வெளிவந்த "அம்மொரு" வில் முதல் முறையாக உபயோகிக்கப்பட்டது. இதை தமிழில் "அம்மன்" என்னும் பெயரில் திரையிட்டனர்.

தற்காலங்களில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற திரைப்படங்களான பாகுபலி 1 மற்றும் 2, சாகோ போன்ற திரைப்படங்களில் அதிகப்படியான காட்சிகளுக்கு இத்தொழில்நுட்பம் உபயோகிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம். இதற்காக பல விருதுகளும் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

இந்தி திரையுலகம்

[தொகு]

2008 ஆம் ஆண்டில் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான "லவ் ஸ்டோரி 2050 - Love Story 2050" மூலம் கணினியுருப்படம் ஹிந்தித்திரையுலகில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1200 காட்சிகள் இத்தொழில்நுட்பம் மூலமே தயாரிக்கப்பட்டன.

4 சர்வதேச நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை இத்திரைப்படத்திற்கு கணினியுருப்படமாக வழங்கியிருந்தன. நியூசிலாந்திலிருந்து "வெற்றா வேர்க்சொப் - Weta Workshop" நிறுவனமும் மற்றும் அவுஸ்திரேலியா, பிறிஸ்போனிலிருந்து "ஜோன் கொக்ஸ் - John Cox" நிறுவனமுமே இதற்காக "அக்காடமி விருதுகளையும்" பெற்றுக்கொண்டன.

மேற்கோள்கள்

[தொகு]

https://computeranimationhistory-cgi.jimdofree.com/

https://www.nyfa.edu/student-resources/cgi-animation-history-defining-and-awesome-moments-in-cinema/

https://nofilmschool.com/History-of-CGI

https://www.indiatoday.in/technology/news/story/animators-video-shows-humans-as-masters-of-solar-system-goes-viral-229620-2014-12-03

https://www.analyticsinsight.net/computer-generated-imagery-cgi-the-magic-wand-of-cinema-industry/

https://www.dinamalar.com/news_detail.asp?id=463007

https://www.sciencedaily.com/terms/computer-generated_imagery.htm

https://www.forbes.com/pictures/59d7f4ee31358e542c036e8a/computer-generated-imager/

https://www.skillshare.com/search?query=cgi - இதை கற்பதற்கான இணையத்தளம்.

  1. Ozturk, Selen (March 15, 2023). "Vicious Circle: John Whitney and the Military Origins of Early CGI". Bright Lights Film Journal. பார்க்கப்பட்ட நாள் May 11, 2023.
  2. "14 groundbreaking movies that took special effects to new levels". Insider.com.
  3. Halverson, Dave (December 2005). "Anime Reviews: The Professional Golgo 13". Play (United States of America) (48): p. 92.