காட்டுவகை
காட்டுவகை (Wild type) என்பது இயற்கையில் இனவிருத்திக்கு உட்படும் ஒரு இனத்தின், மாதிரிச் சிறப்பியல்புகளையுடைய தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் உயிரினம் ஆகும். மாற்றங்களுக்கு உட்படாமல், இயற்கையில் தனது இயல்புமாறா நிலையிலேயே இவை காணப்படும். இவற்றின் மரபணுக்கள் இவற்றின் ஆரம்ப இயற்கை நிலையிலிருந்து மாறுதலற்றதாக இருக்கும்.
காட்டுவகைகள் பற்றிய அறிவு மரபியல், மரபணு திடீர்மாற்றம் தொடர்பான ஆய்வுகள் பற்றிய அறிவியலில் மிகவும் உதவியாக இருக்கும். விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்ட காட்டுவகை தாவரங்களிலிருந்து, பயிர்ச்செய்கை மூலம், குறிப்பிட்ட இயல்புகளைத் தெரிவு செய்து, தொடர்ந்து வரும் சந்ததிகளில், பயிரிடும்வகையைப் பெறலாம். பழ ஈ இனமான டுரோசோபிலா மெலனோகாசுடர் (Drosophila melanogaster) பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிற்றினமாகும். இவற்றில் கண் நிறம், உருவம், சிறகுகளின் அமைப்பு போன்ற சில வெளித்தோற்ற இயல்புகள், குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் மாற்றப்படக் கூடியனவாக இருக்கும்.[1][2][3]
படத்தொகுப்பு
[தொகு]-
காட்டுவகை கத்தரி
-
முட்டைக்கோசு இனத்தின் காட்டுவகை
-
காட்டுவகை காதல் குருவிகள் (Love birds)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wild Type vs. Mutant Traits". Miami College of Arts and Sciences. பார்க்கப்பட்ட நாள் March 2, 2016.
- ↑ Chari, Sudarshan; Dworkin, Ian (2013). "The Conditional Nature of Genetic Interactions: The Consequences of Wild-Type Backgrounds on Mutational Interactions in a Genome-Wide Modifier Screen". PLOS Genetics 9 (8): e1003661. doi:10.1371/journal.pgen.1003661. பப்மெட்:23935530.
- ↑ Jones, Elizabeth; Hartl, Daniel L. (1998). Genetics: principles and analysis. Boston: Jones and Bartlett Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7637-0489-6.