கார்பேத்திய மலைகள்
கார்ப்பேத்தியம் | |
---|---|
போலந்திலுள்ள மேற்கு கார்ப்பேத்தியத்தின் உயர் தாத்ராசு மலையில் மோர்சுக்கை ஒகோ ஏரி | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | கெர்லஹொவ்ஸ்கி ஸ்டீட் |
உயரம் | 2,655 m (8,711 அடி) |
பரிமாணங்கள் | |
நீளம் | 1,700 km (1,100 mi) |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | கார்ப்பதி (உரு) கார்பேத்தி (செக், சுலோ, போலிய) Карпати (உக்) Karpaten (செரு) Kárpátok (அங்) Карпати/Karpati (செரு) Error {{native name checker}}: parameter value is malformed (help) |
புவியியல் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Mapcarpat.png" does not exist.
| |
நாடுகள் | செக் குடியரசு, போலந்து, ஆஸ்திரியா, சிலோவாக்கியா, அங்கேரி, உக்ரைன், உருமேனியா and செர்பியா |
தொடர் ஆள்கூறு | 47°00′N 25°30′E / 47°N 25.5°E |
எல்லைகள் | ஆல்ப்சு |
கார்ப்பேத்திய மலைகள் (Carpathian Mountains) அல்லது கார்ப்பேத்தியம் (Carpathians, /kɑːrˈpeɪθiənz/) நடுவ, கிழக்கு ஐரோப்பாவில் ஏறத்தாழ 1,500 km (932 mi) நீளமான வட்டவில்லையாகவுள்ள மலைத் தொடர் அமைப்பாகும். இவை ஐரோப்பாவில், 1,700 km (1,056 mi) நீளமுள்ள எசுக்காண்டினாவிய மலைகளை அடுத்து) இரண்டாவது-நீளமான மலைத்தொடராகும்.
ஐரோப்பாவின் பெருமளவிலான பழுப்புநிறக் கரடிகள், ஓநாய்கள், ஐரோப்பிய மான்கள், லின்க்ஸ் பூனைகள் இம்மலைத்தொடர்களில், மிகக் கூடுதலாக உருமேனியாவில், வாழ்கின்றன.[1][2][3] தவிரவும் ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு தாவரவினங்கள் இங்குள்ளன.[4] கார்ப்பேத்தியத்திலும் அதன் மலையடிவாரங்களிலும் பல வெந்நீர், கனிம நீரூற்றுகள் உள்ளன; உருமேனியாவில் மட்டுமே ஐரோப்பாவின் மூன்றில் ஒருபங்கு நீரூற்றுகள் உள்ளன.[5][6] இதேபோல உருமேனியாவில், உருசியாவை அடுத்து, இரண்டாவது பெரிய புவிப்பரப்பு கன்னிக் காடுகள் அமைந்துள்ளன; 250,000 எக்டேரில் (65%) பரந்துள்ள இவற்றில் பெரும்பாலானவை கார்ப்பத்தேயத்தில் அமைந்துள்ளன.[7] தெற்கு கார்ப்பேத்தியத்தில் ஐரோப்பாவின் பிளவுபடாத மிகப் பெரிய வனப்பகுதி உள்ளது.[8]
கார்ப்பத்தியம் வடமேற்கில் செக் குடியரசில் (3%) தொடங்கி சிலோவாக்கியா (17%), போலந்து (10%), அங்கேரி (4%), உக்ரைன் (10%) செர்பியா (5%) மற்றும் தென்கிழக்கிலுள்ள உருமேனியா (50%) வரை வட்டவிலையாக அமைந்துள்ளது.[9][10][11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peter Christoph Sürth. "Braunbären (Ursus arctos) in Europa". Archived from the original on 15 August 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2011.
- ↑ Peter Christoph Sürth. "Wolf (Canis lupus) in Europa". Archived from the original on 15 August 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2011.
- ↑ Peter Christoph Sürth. "Eurasischer Luchs (Lynx lynx) in Europa". Archived from the original on 15 August 2008. பார்க்கப்பட்ட நாள் 10 March 2011.
- ↑ "Carpathian montane conifer forests - Encyclopedia of Earth". www.eoearth.org. Archived from the original (மீடியாவிக்கி) on 2010-04-04. பார்க்கப்பட்ட நாள் 4 August 2010.
- ↑ Bucureşti, staţiune balneară – o glumă bună? பரணிடப்பட்டது 2012-03-14 at the வந்தவழி இயந்திரம் in Capital, 19 January 2009. Retrieved: 26 April 2011
- ↑ Ruinele de la Baile Herculane si Borsec nu mai au nimic de oferit in Ziarul Financiar, 5 May 2010. Retrieved: 26 April 2011
- ↑ Salvaţi pădurile virgine! பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் in Jurnalul Național, 26 October 2011. Retrieved: 31 October 2011
- ↑ Europe: New Move to Protect Virgin Forests in Global Issues, 30 May 2011. Retrieved 31 October 2011.
- ↑ [1] "The Carpathians" European Travel Commission, in The Official Travel Portal of Europe, Retrieved 15 November 2016
- ↑ [2] The Carpathian Project: Carpathian Mountains in Serbia, Institute for Spatial Planning, Faculty of Geography, University of Belgrade (2008), Retrieved: 15 November 2016
- ↑ [3] பரணிடப்பட்டது 2019-08-01 at the வந்தவழி இயந்திரம் Bulletin of the Natural History Museum, pg. 54, Valuing the geological heritage of Serbia (UDC: 502.171:55(497.11), Aleksandra Maran (2010), Retrieved 15 November 2016
- ↑ Paun es Durlic (2011). Sacred Language of the Vlach Bread. Balkankult. பார்க்கப்பட்ட நாள் 15 November 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ukrainian Carpathian Mountains photos பரணிடப்பட்டது 2020-11-24 at the வந்தவழி இயந்திரம்
- http://www.carpati.org/
- http://www.alpinet.org/
- Orographic map highlighting Carpathian mountains
- Hiking trails in Ukrainian Carpathian Mountains
- Carpathian Mountains Images
- Ukrainian Carpathian Mountains panoramic photos பரணிடப்பட்டது 2018-07-22 at the வந்தவழி இயந்திரம்
- Green Ukraine - guide in the Ukrainian Carpathians