கின்சி அளவுகோல்
Appearance
தன்பால் ஈர்ப்பாளர்கள் , எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சில பாலியல் நாட்டங்கள் உள்ளன என்பதை விளக்குவது கின்சி அளவுகோல் (Kinsey Scale).[1] அதாவது தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் எதிர்பால் ஈர்ப்பாளர்களும் இடையே ஐந்து வகையான பாலியல் நாட்டங்கள் இருப்பதாக கூறும் இவ் அளவுகோல் , பாலுறவு முறைகளை 0 – 6 வரை பிரிக்கின்றது.கருப்பு அல்லது வெள்ளை என்பது போல் தன்பால் ஈர்ப்பு உடையவர்கள் அல்லது எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள் என்று மேலோட்டமாக பிரிக்கமுடியாது . கருப்புக்கும் வெள்ளைக்கும் இடையே பல வண்ணங்கள் இருப்பது போல் தன்பால் ஈர்ப்பாளர்கள் எதிர்பால் ஈர்ப்பாளர்களுக்கு இடையே சிலர் இருக்கிறார்கள் என்பதையே இது சுட்டிக் காட்டுகிறது.[2]
அளவுகோல் முறை
[தொகு]வரையளவு | விவரிப்பு |
---|---|
0 | தன்பால் ஈர்ப்பற்ற எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் |
1 | பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக தன்பால் ஈர்ப்புடையவர்கள் |
2 | பெரும்பாலும் எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு தன்பால் ஈர்ப்பு உடையவர்கள் |
3 | தன்பால் மேலும் எதிர்பால் மேலும் சம அளவில் ஈர்ப்புடையவர்கள் |
4 | பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் அரிதாக எதிர்பால் ஈர்ப்புடையவர்கள் |
5 | பெரும்பாலும் தன்பால் ஈர்ப்புடையவர்கள் ஓரளவு எதிர்பால் ஈர்ப்பு உடையவர்கள் |
6 | எதிர்பால் ஈர்ப்பற்ற தன்பால் ஈர்ப்பு உடையவர்கள். |
X | No socio-sexual contacts or reactions |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kinsey's Heterosexual–Homosexual Rating Scale". The Kinsey Institute. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.
- ↑ புதிய பரிதி (7 பெப்ரவரி 2014). "ஓரினச் சேர்கையாளர்-சில கேள்விகளும் பதில்களும்!". மாற்று. பார்க்கப்பட்ட நாள் 10 பெப்ரவரி 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)