உள்ளடக்கத்துக்குச் செல்

கிராம ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் உள்ளாட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளின் மூன்றடுக்கு வரிசை

கிராம ஊராட்சி (Gram panchayat) தமிழ்நாட்டில் 500 எண்ணிக்கைக்கு அதிகமான மக்கள் தொகை உள்ள கிராமங்களில் 12,524 கிராம ஊராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாடுகள் முறையே:[1][2]

  • கிராம ஊராட்சியின் உறுப்பினர்கள் மக்களால் தேர்தல் மூலமாக நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
  • கிராம ஊராட்சியின் தலைவர் உறுப்பினர்கள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
  • ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 7 உறுப்பினர்களுக்கு குறையாமல் 15 உறுப்பினர்களுக்கு மிகாமல் உள்ளனர்.
  • உறுப்பினர்கள் மற்றும் தலைவர் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
  • கிராம ஊராட்சியின் ஆய்வாளராக மாவட்ட ஆட்சியாளர் செயல்படுகிறார்.

கிராம ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள் கடமைகள்:

[தொகு]
  • படிப்பகங்கள் ஏற்படுத்துதல், வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் நிறுவுதல் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துதல்
  • தெரு விளக்குகள் அமைத்தல
  • சிறுபாலங்கள் கட்டுதல்
  • ஊர்ச்சாலைகள் அமைத்தல் ,சாலை பராமரிப்பு
  • குடிநீர்க் கிணறு தோண்டுதல்
  • கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல்
  • சிறிய பாலங்கள் கட்டுதல்
  • வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்
  • கிராம நூலகங்களைப் பராமரித்தல்
  • தொகுப்பு வீடுகள் கட்டுதல்
  • இளைஞர்களுக்கான பொழுது போக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
  • வீட்டு வரி, குழாய் வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற வரிகள் வசூலிக்கப்படுகின்றன. அந்நிதியிலிருந்து பணிகளுக்குச் செலவிடப்படுகிறது.

கிராம ஊராட்சியின் வருவாய்

[தொகு]
  • வீட்டுவரி,தொழில் வரி,கடைகள் மீது விதிக்கப்படும் வரி அபாரதக் கட்டணங்கள்
  • குடிநீர்க்குழாய் இணைப்புக் கட்டணம்
  • நிலவரியிலிருந்து ஒரு குறிப்பிட்ட பங்கு
  • சொத்துரிமை மாற்றத்தின் மீதான வரியிலிருந்து ஒரு பங்கு
  • சொத்துரிமை மாற்றத்தின் மீதான தீர்வையில் இருந்து ஒரு பங்கும் கிராம ஊராட்சிக்கு வருவாயாக கிடைக்கிறது.
  • இவைகளால் வரும் வருவாய் மட்டுமே போதாது. எனவே மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்ட நிதிகளையும் ,மானியங்களையும், உதவித் தொகைகளையும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக ஊராட்சிகளுக்கு வழங்குகின்றன.
  • மத்திய மாநில அரசுகள்வழங்கும் மானியங்கள் தான் முதன்மையானவருவாய் ஆகும்.

கிராம சபை / ஊர்மன்றக் கூட்டம்

[தொகு]
  • ஒவ்வொரு கிராமத்திலும் கிராம சபை ஊர் மன்றக் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
  • கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
  • கிராம சபைக் கூட்டத்திற்கு கிராம ஊராட்சித் தலைவர் தலைமை வகிப்பார்.
  • ஊர்மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு (ஏப்ரல் 2022 முதல் ஆண்டிற்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 - உலக தண்ணீர் தினம், நவம்பர் 1- உள்ளாட்சி தினம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது) முறை கூடுகின்றன. அந்நாட்கள்: ஜனவரி 26 குடியரசு நாள், மே 1 தொழிலாளர் நாள், ஆகத்து 15 இந்திய விடுதலை நாள், அக்டோபர் 2 மகாத்மா காந்தி பிறந்த நாள்.[3]

கிராமத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தல். ஆண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கு ஒப்புதல், திட்டங்களின்பயனாளிகள் யார் என்பது போன்றவற்றிற்கு ஒப்புதல் அளித்தல் ஆகியவை கிராம சபையின் பணிகள் ஆகும்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Grama Sabha
  2. Gram Panchayat
  3. கிராம சபைக் கூட்டம்

வெளி இணைப்புகள்

[தொகு]