உள்ளடக்கத்துக்குச் செல்

கிரீசசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தற்காலத் துருக்கியில் கிடைத்த கிரீசசின் தங்க நாணயம். ஏறத்தாழ கிமு 550 ஐச் சேர்ந்தது.

கிரீசசு (Croesus),[1] லிடியாவின் அரசனாக இருந்தவன். ஈரோடோட்டசின் குறிப்பின்படி கிமு 560 இலிருந்து கிமு 546ல் பாரசீக அரசன் சைரசினால் தோற்கடிக்கப்படும் வரை பதினான்கு ஆண்டுகள் அரசாண்டான்.[2] கிரீசசு அவனது செல்வத்துக்காகப் பெயர்பெற்றவன். ஈரோடோட்டசும், போசானியாசும் இவனது கொடைகள் டெல்பியில் பாதுகாக்கப்பட்டு வந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.[3] கிரீசசின் வீழ்ச்சி கிரேக்கர்களிடம் ஆழமான தாக்கத்தை உண்டாக்கி அவர்களது நாட்காட்டியில் ஒரு நிலையான இடத்தையும் உருவாக்கியது. ஜே. ஏ. எசு. இவான்சு குறிப்பிட்டபடி, ஐந்தாம் நூற்றாண்டளவிலாவது கிரீசசு ஒரு தொன்மம் சார்ந்த பாத்திரம் ஆகி, வழமையான காலவரிசையின் கட்டுப்பாடுகளுக்கு அப்பால் நிற்பவனானான்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The English name Croesus comes from the Latin transliteration of the Greek Κροῖσος, in Arabic and Persian قارون, Qârun.
  2. "Croesus". Encyclopædia Britannica. Encyclopædia Britannica Online
  3. Among them a lion of gold, which had tumbled from its perch upon a stack of ingots when the temple at Delphi burned but was preserved and displayed in the Treasury of the Corinthians, where Pausanias saw it (Pausanias 10.5.13). The temple burned in the archonship of Erxicleides, 548-47 BC.
  4. J.A.S. Evans, "What Happened to Croesus?" The Classical Journal 74.1 (October 1978:34-40) examines the legend and the date 547 BC.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]