உள்ளடக்கத்துக்குச் செல்

கே. சுதாகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கே. சுதாகர்
அமைச்சர்
கர்நாடக அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
6 பிப்ரவரி 2020
சுகாதாரம் & குடும்பநலம்12 அக்டோபர் 2020 - பதவியில்
மருத்துவக் கல்வி அமைச்சர்6 பிப்ரவரி 2020 - அக்டோபர் 12
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு27 சூன் 1973 (1973-06-27) (அகவை 51)
சிக்பல்லபபூர், கருநாடகம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2019–முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு
(2019 வரை)
துணைவர்பிரீத்தி
பிள்ளைகள்3
வாழிடம்(s)சதாசிவநகர், பெங்களூர்

கேசவ ரெட்டி சுதாகர் (K. Sudhakar) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் கருநாடக சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார். சுதாகர் 6 பிப்ரவரி 2020 முதல் கர்நாடகாவின் மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார அமைச்சராகப் பணியாற்றுகிறார். இவர் இந்தியத் தேசிய காங்கிரசின் சார்பில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் சிக்கபல்லப்பூரிலிருந்து கர்நாடக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக 2019-ல் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

நான்காவது பி. எஸ். எடியூரப்பா அமைச்சரவையில் அமைச்சர்களில் இளையவர் ஆவார். இவர் மீண்டும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில் மருத்துவக் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

கர்நாடகாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலத்தில், இவர் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு மற்றும் சிலருடன் கர்நாடகாவிற்கான கோவிட்-19 குழுவில் இடம்பெற்றிருந்தார். இவர் முக்கிய கொள்கை உருவாக்கம் மற்றும் தொற்றுநோய்க்கான விரைவான நடவடிக்கையில் முக்கிய பங்கேற்பாளராக இருந்தார்.[4]

சர்ச்சைகள்

[தொகு]

கமலா செயல்திட்டம்

[தொகு]

கமலா செயல்திட்டம் என்பது 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட திட்டமாகும். முன்னாள் அமைச்சர் ஜி. ஜனார்த்தன ரெட்டி, கட்சித் தாவல் தடைச் சட்டத்தைத் தவிர்த்து, சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கான செயல்படுத்திய நடைமுறை இதுவாகும்.[5][6][7][8][9] கமலா செயல் திட்டத்தில் 2019ஆம் ஆண்டில் எச்.டி.குமாரசாமி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கூட்டணி அரசாங்கம் வீழ்ச்சியடையக் காரணமான சட்டப்பேரவை உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "PRATAP GOUDA PATIL(Bharatiya Janata Party(BJP)):Constituency- Maski(RAICHUR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  2. Madhuri (2018-05-15). "Karnataka MLA's List 2018: Full List of Winners From BJP, Congress, JDS and More". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  3. "Rebel Karnataka MLAs barring Roshan Baig to join BJP after SC allows them to contest bypolls". Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-13.
  4. "Karnataka government forms rapid response teams to contain coronavirus". 4 March 2020.
  5. Aji, Sowmya (16 May 2018). "After falling short of numbers, BJP revisits 'Operation Kamala' of 2008". The Economic Times. Retrieved 11 October 2019.
  6. "DH Deciphers | What is Operation Kamala 2.0?". Deccan Herald. 15 January 2019. Retrieved 5 August 2021.
  7. "What is Operation Kamala ? Will BJP manage a repeat of 2008?". The Statesman. 16 May 2018. Retrieved 5 August 2021.
  8. "'Operation Kamala' 2.0 in Karnataka: Union Minister behind efforts to bring down Congress-JDS government, claim sources". The New Indian Express. Retrieved 5 August 2021.
  9. Aji, Sowmya (15 May 2009). "BJP's 'poach-all' operation in Karnataka". India Today. Retrieved 5 August 2021
  10. "The 15 MLAs who brought down Kumaraswamy government". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/galleries/nation/2019/jul/24/the-15-mlas-who-brought-down-kumaraswamy-government-102416.html. பார்த்த நாள்: 28 July 2019.