உள்ளடக்கத்துக்குச் செல்

சஃபி கோல்ட்வாசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஃபி கோல்ட்வாசர்
பிறப்புசஃபிரிரா கோல்ட்வாசர்
1958
நியூயார்க் நகரம், NY, அமெரிக்க ஐக்கிய நாடு
தேசியம்Israeli American
துறைகணினியியல், குறியாக்கவியல்
பணியிடங்கள்
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடுProbabilistic Encryption: Theory and Applications (1984)
ஆய்வு நெறியாளர்மானுவல் புளூம்[1]
முனைவர் பட்ட 
மாணவர்கள்
  • ஜொகன் ஆஸ்டட்
  • யால் தௌமன் கலை
  • அமித் சகல்
  • சலீல் வதன்[1]
அறியப்படுவது
  • புளூம்–கோல்ட்வாசர் குறியாக்கம்
  • கோல்ட்வாசர்-மிக்காலி குறியாக்கம்[2]
விருதுகள்
  • கிரேஸ் முர்ரே ஹோப்பர் விருது (1996)
  • தங்கப்பரிசு (1993, 2001)
  • IEEE இம்மானுவேல் ஆர். பியோரி விருது (2011)
  • தூரிங்கு விருது (2012)[3]
இணையதளம்

சஃப்ரிரா "சஃபி" கோல்ட்வாசர் (Shafi Goldwasser, எபிரேயம்: שפרירה גולדווסר‎ ) ஒரு அமெரிக்க - இஸ்ரேலிய கணினிஅறிவியலாளர் மற்றும் 2012 இல் டூரிங் விருது பெற்றவர். அவர் எம்ஐடியின் மின் பொறியியல் மற்றும் கணினி அறிவியலின் RSA பேராசிரியர் ஆவார்.[4] இஸ்ரேலில் உள்ள வேய்ஸ்மன் அறிவியல் நிறுவனம், கணித அறிவியல் பேராசிரியரும், துயலிட்டி டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானியும்,[5] பெர்க்லியில் உள்ள கணிதக் கோட்பாடுகளுக்கான சைமன்ஸ் நிறுவனத்தின் இயக்குநரும் ஆவார்.[6][7][8][9]

சுயசரிதை

[தொகு]

சஃபி 1958 இல் நியூயார்க் நகரத்தில் பிறந்தார். கோல்ட்வாஸர் அவளை பெற்று (1979) கார்னகி மெலன் பல்கலைக்கழகத்தில் 1979 ஆம் ஆண்டு இருந்து கணிதம் மற்றும் அறிவியலில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் 1981 ஆண்டு கணினி அறிவியல் துறையில் முதுகலை அறிவியல் பட்டமும் 1984 இல் கணினி அறிவியல் துறையில் ஆய்வாளர்களுக்கான சிறந்த ஆலோசனை வழங்குவதில் நன்கறியப்பட்ட மானுவல் புளூம் என்பவரின் மேற்பார்வையில் முனைவர் பட்டமும் பெற்றார். சஃபி 1983 இல் எம்ஐடியில் சேர்ந்தார். 1997 இல் பன்னாட்டுப் பிராந்திய அறிவியல் சங்கத்தின் (RSA) முதலாவது பேராசிரியர் என்ற நிலையை அடைந்தார். அவர் 1993 ஆம் ஆண்டில் எம்ஐடியின் பேராசிரியராகவும், வேய்ஸ்மன் அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியராகவும் பணியாற்றினார். அவர் எம்ஐடி கணினி அறிவ்யல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகத்தில் கணக்கீட்டு குழுவில் உறுப்பினராக உள்ளார்.[10] கோல்ட்வேசர் 2012 இல் டூரிங் விருதினை இணைந்து பெற்றார்.[11] ஜனவரி 1, 2018 இல், பெர்க்லீயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் கணக்கீட்டுக் கோட்பாட்டிற்கான சைமன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக ஆனார்.[12]

நவம்பர் 2016 முதல், கோல்ட்வாசர் துயலிட்டி தொழில்நுட்ப நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி மற்றும் இணை நிறுவனர் ஆவார், இது இஸ்ரேலிய-அமெரிக்க நிறுவனமாகும். இந்நிறுவனம் மேம்பட்ட குறியாக்க நுட்பங்களைப் பயன்படுத்தி பாதுகாப்பான தரவு பகுப்பாய்வுகளைக் வழங்குகிறது.[5] அவர் QED- it, தனிச்சிறப்பாக ஜீரோ நாலெட்ஜ் பிளாக்செயின் , மற்றும் அலோகாரண்ட், ப்ரூஃப்-ஆஃப்- ஸ்டேக் பிளாக்செயின் ஆகியவை அடங்கிய பாதுகாப்பு குறித்த பல தொழில்நுட்பத் துவக்கங்களுக்கான விஞ்ஞான ஆலோசகராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 கணித மரபியல் திட்டத்தில் சஃபி கோல்ட்வாசர்
  2. Shafi Goldwasser; Silvio Micali; Ron Rivest (1988). "A Digital Signature Scheme Secure Against Adaptive Chosen-Message Attacks". SIAM Journal on Computing 17 (2): 281. doi:10.1137/0217017. 
  3. Savage, N. (2013). "Proofs probable: Shafi Goldwasser and Silvio Micali laid the foundations for modern cryptography, with contributions including interactive and zero-knowledge proofs". Communications of the ACM 56 (6): 22. doi:10.1145/2461256.2461265. 
  4. "Shafi Goldwasser | MIT CSAIL" (in ஆங்கிலம்).
  5. 5.0 5.1 "About - Duality Technologies".
  6. Exponent: Shafi Goldwasser பரணிடப்பட்டது செப்டெம்பர் 27, 2010 at the வந்தவழி இயந்திரம்
  7. வார்ப்புரு:ACMPortal
  8. சஃபி கோல்ட்வாசர்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  9. Probabilistic encryption. 
  10. Shafi Goldwasser Biography.
  11. AbAbazorius, CSAIL (13 March 2013). "Goldwasser and Micali win Turing Award". MIT News.
  12. "Shafi Goldwasser appointed director of the Simons Institute for the Theory of Computing". News.berkeley.edu. 10 October 2017.