சித்தம் எழுத்துமுறை
சித்தம் 𑖭𑖰𑖟𑖿𑖠𑖽 | |
---|---|
சித்தம் என்ற சொல் சித்தம் எழுத்துமுறையில் | |
எழுத்து முறை வகை | |
காலக்கட்டம் | இந்தியாவில் ~கி.பி 700 முதல் ~ கி.பி 1200 , ஜப்பானில் இன்றுவரை |
திசை | Left-to-right |
பிராந்தியம் | இந்தியா, சீனா, ஜப்பான் |
மொழிகள் | சமஸ்கிருதம் |
தொடர்புடைய எழுத்து முறைகள் | |
மூல முறைகள் | பிராமி
|
பிராமி |
---|
பிராமி எழுத்துமுறையும் அதன் வழித்தோன்றல்களும் |
சித்தம்(𑖭𑖰𑖟𑖿𑖠𑖽;சமஸ்கிருதம்:सिद्धं.) என்பது சமஸ்கிருதத்தை எழுத பயன்படுத்தப்படும் ஒரு வரிவடிவம் ஆகும். இவ்வெழுத்துமுறை பிராமியில் இருந்து தோன்றிய குப்த எழுத்துமுறையின் வழித்தோன்றலாகும். சித்தம் எழுத்துமுறையில் இருந்தே தேவநாகரி , திபெத்திய எழுத்துமுறை முதலிய பல ஆசிய எழுத்துமுறைகள் தோன்றின.
சித்தம் அபுகுடா வகையை சார்ந்த எழுத்துமுறையாகும். இந்த சித்தம் எழுத்துமுறை மற்ற பிராமி குடும்ப எழுத்துமுறைகளுக்கு உண்டான அனைத்து குணாதியங்களையும் கொண்டது. இது தற்கால தேவநாகரி எழுத்துமுறையினை ஒத்த வடிவத்தை கொண்டது.
தற்காலத்தில், சித்தம் எழுத்துமுறை ஜப்பானில் மட்டுமே வழக்கில் உள்ளது. ஜப்பானில் ஷிங்கோன் பௌத்த மந்திரங்களை எழுதுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதை ஜப்பானிய மொழியில் போன்ஜி என அழைக்கின்றனர். இந்த எழுத்துமுறையினை கூக்காய் தான் முதன்முதலில் ஜப்பானில் அறிமுகப்படுகித்தினார். இந்தியாவில் இருந்து சீனாவில் மொழிப்பெயர்க்கப்பட்ட சூத்திரங்கள் சித்தம் எழுத்துமுறையினை பயன்படுத்தியே செய்யப்பட்டன. அங்கிருந்து, இந்த சூத்திரங்கள் ஜப்பானுக்கு சென்றன. சீனாவில் ஒன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஆட்சியாளர்களால், அந்நிய மதங்கள் நசுக்கப்பட்டன. மேலும் இந்தியாவில் சித்தம் எழுத்துமுறையில் இருந்து தோன்றிய தேவநாகரி வழக்கத்தில் வரத்துவங்கியது. எனவே காலப்போக்கில், சித்தம் எழுத்துமுறை' யினை பயன்படுத்தும் ஒரே நாடாக ஜப்பான் ஆனது. இன்று கூட ஜப்பானில் மந்திரங்களை எழுதவும் சூத்திரங்களை பிரதியெடுக்கவும் சித்தம் எழுத்துமுறை பயன்படுத்தப்படுகிறது.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆம்னிகிலாட் இணையதளத்தில் சித்தம் பக்கம்
- சித்தம் மந்திரங்கள்
- சில சித்தம் மந்திரங்கள் (சீன மொழி)
- இந்திய மொழிகள் மற்றும் எழுத்துமுறைகள்
- Bonji சித்தம் எழுத்துக்களும் உச்சரிப்பும் பரணிடப்பட்டது 2009-06-27 at the வந்தவழி இயந்திரம்
- சித்தம்-கீ - சித்தம் எழுத்துக்களை உள்ளீடு செய்வதற்கான மென்பொருள்
மூலம்
[தொகு]- John Stevens. Sacred Calligraphy of the East. (Boston: Shambala, 1995)
- Taikō Yamasaki. Shingon: Japanese Esoteric Buddhism. (Fresno: Shingon Buddhist International Institute, 1988)