உள்ளடக்கத்துக்குச் செல்

சுப்பையா நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மை. வெ. சுப்பையா நாயுடு
பிறப்புமைசூர் வெங்கடப்பா சுப்பையா நாயுடு
1896[1]
மாதப்புரா, ஹெக்கடதேவனகோட்டே, மைசூர் அரசு
இறப்பு21 சூலை 1962(1962-07-21) (அகவை 65–66)
மண்டியா, மைசூர் மாநிலம், இந்தியா
பணிநடிகர், திரைப்பட இயக்குநர்
வாழ்க்கைத்
துணை
முனிவெங்கட்டம்மாள்
பிள்ளைகள்கன்னட நடிகர் லோகேஷ் உட்பட நால்வர்

மைசூர் வெங்கடப்பா சுப்பையா நாயுடு (Mysore Venkatappa Subbaiah Naidu) (1896-21 ஜூலை 1962) ஓர் இந்திய நாடக மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். கன்னடத்தின் முதல் பேசும் படமான சதி சுலோச்சனா (1934) தெலுங்கு மொழியில் பூகைலாஷ் (1940) மற்றும் கன்னடத்தில் பக்த பிரகலாதா (1958) போன்ற படங்களில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டார்.[1] இவர் முதல் கன்னட பேசும் படத்தில் நடித்தார். கன்னடத் திரைப்படத்துறைக்கு தனித்துவத்தைக் கொண்டு வந்தார்.[2] இவர் கன்னட நடிகர் லோகேஷின் தந்தையும், கன்னட தொலைக்காட்சி ஆளுமை சிருஜன் லோகேஷின் தாத்தாவும் ஆவார்.[2] நாடகத்தில் இவரது பணியை அங்கீகரித்து, 1961 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது.[3]

தொழில்

[தொகு]

நாயுடு தனது நடிப்பு வாழ்க்கையை மேடை நாடகங்களில் துணை வேடங்களில் தோன்றத் தொடங்கினார். பின்னர், இவர் விரைவில் ஒரு நடிகராக வளர்ந்து முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் கன்னட நாடக வட்டங்களில் “கணிசமான ரசிகர்களைப்” பெற்றார்.[4] மற்றொரு புகழ்பெற்ற மேடை மற்றும் திரைப்பட ஆளுமை ஆர். நாகேந்திர ராவுடன் அடிக்கடி இணைந்து நடித்து வந்தார். வசந்தசேனா (1941), சத்ய ஹரிச்சந்திரா (1943) மற்றும் மஹாத்மா கபீர் (1947) போன்ற ஆரம்பகால கன்னடப் படங்களை இவர்கள் தயாரித்தனர். நாயுடு 1958 ஆம் ஆண்டு பக்த பிரகலாதா என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் இவரது விரல்கள் எரிந்து போனது. இச்சம்பவத்திற்குப் பிறகு இவர் திரைப்படங்களில் நடிப்பதைத் தவிர்த்துவிட்டு நாடகங்களில் கவனம் செலுத்தினார்.[4]

இறப்பு

[தொகு]

நாயுடு தனது குழுவுடன் மண்டியாவில் அம்பரீசன் என்ற நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது 21 ஜூலை 1962 அன்று மாரடைப்பால் இறந்தார். தனது மரணத்திற்கு சில வாரங்களுக்கு மின்பு தனது குழுவான சாகித்ய சாம்ராஜ்ய நாடக மண்டலியுடன் நாடகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இவர் இறந்த செய்தி கேள்விப்பட்ட இவரது மனைவி முனிவெங்கடம்மா அதே நாளில் இறந்தார்.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "M.V. Subbaiah Naidu". IMDB. IMDB. பார்க்கப்பட்ட நாள் 21 March 2014.
  2. "Actor Lokesh is dead". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 மார்ச் 2005 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050327102227/http://www.hindu.com/2004/10/15/stories/2004101508280400.htm. பார்த்த நாள்: 21 March 2014. 
  3. "Sangeet Natak Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. sangeetnatak.gov.in. பார்க்கப்பட்ட நாள் 21 April 2017.
  4. 4.0 4.1 "Subbaiah Naidu Passes Away". The Indian Express: pp. 5. 22 July 1962. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19620722&printsec=frontpage. பார்த்த நாள்: 11 April 2017. "Subbaiah Naidu Passes Away".
  5. "Subbaiah Naidu Passes Away". https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19620722&printsec=frontpage. 

வெளி இணைப்புகள்

[தொகு]