உள்ளடக்கத்துக்குச் செல்

செதன் சண்டை (1940)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செதன் சண்டை
பிரான்சு சண்டையின் (இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின்) பகுதி

மே 15, 1940ல் மியூசே ஆற்றைக் கடக்கும் ஜெர்மானிய படைகள்
நாள் மே 12-15, 1940
இடம் செதன் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்
தெளிவான ஜெர்மானிய வெற்றி.
பிரிவினர்
பிரான்சு பிரான்சு
பிரித்தானிய விமானப்படை
நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
பிரான்சு மாரீஸ் காமெலின்
பிரான்சு சார்லஸ் ஹண்ட்சிகர்
பிரான்சு ஆன்ரி கிராட்
பிரான்சு ஆன்ரி-ஜான் லாஃபோண்டேன்
பிரான்சு மார்சல் டேட்டு
ஐக்கிய இராச்சியம் பாட்ரிக் பிளேஃபேர்
நாட்சி ஜெர்மனி கெர்டு வான் ரண்ட்ஸ்டட்
நாட்சி ஜெர்மனி ஹெயின்ஸ் குடேரியன்
நாட்சி ஜெர்மனி வொல்ஃப்ராம் வான் ரிக்தோஃபன்
நாட்சி ஜெர்மனி புரூனோ லோர்செர்
நாட்சி ஜெர்மனிஹெயின்ரிக் கிராம்ஃப்
நாட்சி ஜெர்மனி கார்ல் வெய்சன்பெர்கர்
பலம்
துவக்கத்தில் ~10,000 பேர்
டாங்குகள் ஏதுமில்லை
174 பீரங்கிகள்

152 குண்டுவீசி விமானங்கள்
250 சண்டை விமானங்கள்

60,000 பேர்

22,000 வண்டிகள்
771 டாங்குகள்
1,470 விமானங்கள்
141 பீரங்கிகள்
96 ரப்பர் படகுகள்

இழப்புகள்
தெரியவில்லை 120 (மாண்டவர்)
400 காயமடைந்தவர் (12–14 மே)
81 ரப்பர் படகுகள்

செதன் சண்டை (Battle of Sedan) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 12-14, 1940ல் நடந்த இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் படைகள் பிரெஞ்சுப் படைகளை முறியடித்து மியூசே ஆற்றைக் கடக்க செடான் நகரின் பாலங்களைக் கைப்பற்றின. இது இரண்டாம் செதன் சண்டை என்றும் அழைக்கப்படுகிறது. 1870ல் இதே இடத்தில் பிரான்சு-பிரஷ்யா போரின் போது நடந்த இன்னொரு சண்டையிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மே 10, 1940ல் ஜெர்மானியப் படைகள் பெல்ஜியம் மற்றும் பிரான்சின் மீது தங்களது தாக்குதலைத் தொடங்கின. பெல்ஜியத்தின் மீதான தாக்குதல் திசைதிருப்பும் தாக்குதலாகும். பெல்ஜியப் படைகளின் உதவிக்கு விரையும் நேச நாட்டுப் படைகளைப் பொறி வைத்துப் பிடிக்க ஜெர்மானிய தளபதிகள் திட்டமிட்டனர். நேச நாட்டுப் படைகள் பெல்ஜியத்துக்குச் சென்றவுடன், அவற்றின் பின்பகுதியில் ஆர்டென் காடு வழியாக ஜெர்மனியின் ஆர்மி குரூப் ஏ விரைந்து சென்று ஆங்கிலக் கால்வாய் கடற்கரையை அடைந்து விட வேண்டுமென்பது ஜெர்மானியர்களின் திட்டம். அதற்கு மியூசே ஆற்றைக் கடக்க வேண்டும். இத்திட்டம் நிறைவேற செடான் நகரின் அருகில் மியூசே ஆற்றின் மீதமைந்துள்ள பாலங்களைக் கைப்பற்றுவது அவசியமானது. மே 12ல் ஜெர்மானியப் படைகள் செடானைத் தாக்கின. ஜெர்மானிய வான்படையான லுஃப்ட்வாஃபே செடான் பாதுகாப்பு நிலைகளின் மீது விடாது குண்டு வீசித் தாக்கியது. இந்த குண்டுவீச்சு பிரெஞ்சுப் படைகளின் மன உறுதியைக் குலைத்தது. இதனால் அவர்களால் ஜெர்மானிய கவசப் படைகளின் அதிரடித் தாக்குதலை (பிளிட்ஸ்கிரெய்க்) சமாளிக்க முடியவில்லை. இரு நாட்கள் சண்டைக்குப் பிறகு செடான் நகரப் பாலங்கள் ஜெர்மானியர் வசமாகின. அவை வழியாக ஆற்றைக் கடந்து கடற்கரை நோக்கி ஜெர்மானிய படைப்பிரிவுகள் வேகமாக முன்னேறத் தொடங்கின. இந்தப் பாலங்களை குண்டு வீசி அழிக்க பிரித்தானிய வான்படையும் பிரெஞ்சு வான்படையும் பல முறை முயன்று தோற்றன. அதேபோல பாலங்களை மீண்டும் கைப்பற்ற பிரெஞ்சு தரைப்படைகள் மேற்கொண்ட பல எதிர்த்தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை. பாலங்கள் ஜெர்மானியர் வசமே இருந்தன.

மே 20ல் ஜெர்மானியப் படைகள் கடற்கரையை அடைந்தன. பெல்ஜியத்துக்கு சென்ற நேச நாட்டுப் படைகள் முழுதும் சுற்றி வளைக்கப்பட்டன. அவற்றில் பல டன்கிர்க் துறைமுகத்திலிருந்து தப்பிச் சென்றாலும் பிரான்சின் வீழ்ச்சி உறுதியானது.

அடிக்குறிப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]