டால்பி டிஜிட்டல்
டால்பி டிஜிட்டல் அல்லது டால்பி ஏ.சி-3 என்பது டால்பி ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட ஒலி அமுக்கத் தொழில்நுட்பமாகும். இன்று பரவலாக ஒலிபரப்ப டால்பி தொழில்நுட்பமே மிகுதியாகப் பயன்படுகிறது.[1]
உருவாக்கம் | 1986 |
---|---|
வகை | ஒலி அமுக்கம் |
தலைமையகம் | |
உரிமையாளர் | டால்பி ஆய்வகங்கள் |
வலைத்தளம் | professional |
பதிப்புகள்
[தொகு]டால்பி டிஜிட்டல் என்பது ஒலிபரப்பப் பொதுவாக பயன்படும் பதிப்பாகும். ஆறு ஒலி அலைவரிசைகள் கொண்ட இப்பதிப்பில் இரண்டு பயன்முறைகள் உள்ளன. 20 Hz முதல் 20000 Hz வரையிலான அதிர்வெண் ஒலிகளை சாதாரண ஒலிவாங்கிகளில் இடது, வலது, மையம், இடஞ்சூழ் மற்றும் வலஞ்சூழ் பகுதிகளில் ஒலி கேட்குமாறு அலைவரிசையை ஒலிபரப்புதல் ஒரு பயன்முறை. ஒரே அலைவரிசையில் 20 Hz முதல் 20000 Hz வரையிலான அதிர்வெண் ஒலிகளை அப்படியே ஒலிபரப்புதல் மற்றொரு பயன்முறை. தனியொலி மற்றும் சூழொலி ஆகியவைகளும் மிண்ணனு பயன்முறைகளாக உள்ளன. டால்பி டிஜிட்டல் 48 Hz அதிர்வெண் ஒலியை மாதிரி விகிதமாகக் கொண்ட ஒலிபரப்பையும் ஆதரிக்கிறது.
டால்பி டிஜிட்டலின் பிற பெயர்கள் டிடி, டால்பி டிஜிட்டல் 5.1, ஏசி-3, ஏ.டி.எஸ்.சி ஏ/52 ஆகியவை ஆகும். டால்பி டிஜிட்டல் பெறுவதினூடே கீழ்வருமாறு நீட்டிப்புகளையும் உடன்பெற முடியும்.
டால்பி டிஜிட்டல் எக்ஸ்
[தொகு]டால்பி டிஜிட்டல் எக்ஸ் எனப்படுவது டால்பி டிஜிட்டலின் ஊடே வரும் நீட்டிப்பாகும். அதாவது டால்பி டிஜிட்டலின் மூலம் ஐந்து அலைவரிகள் வழியே 5.1 சூழொலியில் ஒலிபரப்புவதையே, டால்பி டிஜிட்டல் எக்ஸ் பயன்படுத்தி 6.1 அல்லது 7.1 ஆகிய அலைவரிசைகளில் ஒலிபரப்ப முடியும்.[2]
டால்பி டிஜிட்டல் சரௌண்ட் எக்ஸ்
[தொகு]இது டால்பி டிஜிட்டல் எக்ஸ் நீட்டிப்பின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இதன் மூலம் 6.1 மற்றும் 7.1 ஆகிய அலைவரிசைகளில் கூடுதல் சூழொலி மூலம் ஒலிப்பரப்ப முடியும். இந்த சூழொலி ஆனதை மற்ற அலைவரிசைகளில் இருந்து தனியாய்க் கேட்டணுர முடியும். பெரும்பாலான இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகளில் இந்த நீட்டிப்பை விருப்பமாகத் தேர்வு செய்ய முடியும்.[3]
டால்பி டிஜிட்டல் லைவ்
[தொகு]டால்வி டிஜிட்டல் லைவ் என்பது நேரலையில் ஒலியை டால்பி வடிவத்தில் ஒலிபரப்பப் பயன்படும் தொழில்நுட்பமாகும். இது காணொலி விளையாட்டு உருவாக்கத்தில் பெரும்பாலும் பயன்படுகிறது. கணினியில் இருந்து பெறப்படும் எந்தவொரு ஒலியையும் டால்பி டிஜிட்டல் 5.1 ஆக மாற்றும் திறன் பெற்ற இந்த பதிப்பால், தரவுகளை ஒரு நொடிக்கு 640 கிலோபைட்டுகள் வீதம் பரிமாற்றிக் கொள்ள முடியும்.[4]
டால்பி டிஜிட்டல் ப்ளஸ்
[தொகு]இ-ஏசி-3 என்று அழைக்கப்படும் இப்பதிப்பினால் ஏசி-3 பதிப்பைக்காட்டிலும் துரிதமாகச் செயல்படவும் மிகுதியான தரவு பரிமாற்றத்தைக் கையாளவும் (நொடிக்கு 6.144 மெகாபைட்டுகள் வரை) 15.1 வரையிலான அலைவரிகளை ஏற்பிக்கவும் முடியும். இ-ஏசி-3 கோடெக்கினால் ஏசி-3 கோடக்கில் வேயப்பட்ட ஒலிகளை அமுக்கவும் மாற்றி அமைக்கவும் முடியும்.[5]
டால்பி ஏசி-4
[தொகு]டால்பி ஏசி-3 மற்றும் டால்பி டிஜிட்டல் பிளஸ்ஸின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக வெளியானது டால்பி ஏசி-4. 5.1 முதல் 7.1.4 ஆகிய அலைவரிசைகள் வரைக் கையாளும் திறன் பெற்ற இப்பதிப்பு முன்சொன்ன பதிப்புகளைக் காட்டலும் 50 விழுக்காடு திறமையானது.[6]
டால்பி ட்ரூ ஹெச்டி
[தொகு]டால்பி ட்ரூ ஹெச்டி எனப்படுவது அனைத்திலும் மேம்பட்ட பதிப்பாகும். இது மெரிடியன் லால்லெஸ் பேக்கேஜிங் என்ற தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளதால் தரவு பரிமாற்றத்தின் போது இழப்பே இல்லாமல் மேம்பட்ட ஒலி கோடெக்கைப் பயன்படுத்தி ஒலியைப் பரப்புகிறது. 24 பிட்டு ஆழம் வரை ஒலியை ஊடுருவிப் பரப்பும் இதனால் 192 kHz வரையிலான ஒலி அதிர்வெண் மாதிரி விகிதம் வரை ஏற்றுக் கொள்ள முடியும். ஒரு நொடிக்கு 18 மெகாபைட்டுகள் வரை தரவு பரிமாற்றக் கூடிய இது, 16 அலைவரிசைகள் வரை பயன்படுத்துகிறது.[7]
அமைத்தல்
[தொகு]டால்பி டிஜிட்டலில் தேவைக்கேற்ப அலைவரிசைகளை பொருத்த கீழுள்ள தகவல் பயன்படும். இணைத்தல் கம்பிவடங்கள் மூலம் நிகழ்த்தப்பட வேண்டும்.
- டால்பி டிஜிட்டல் 1/0 - தனியொலி (மையத்தில் மட்டும் கேட்கும்)
- டால்பி டிஜிட்டல் 2/0 - 2 அலைவரிசைகளில் சூழொலி (இடதிலும் வலதிலும் கேட்கும்)
- டால்பி டிஜிட்டல் 3/0 - 3 அலைவரிசைகளில் சூழொலி (இடதிலும் வலதிலும் மையத்திலும் கேட்கும்)
- டால்பி டிஜிட்டல் 2/1 - 2 அலைவரிசைகளில் சூழொலியும் 1 அலைவரிசையில் தனியொலியும் கேட்கும் (இடதிலும் வலதிலும் சுற்றிலும் கேட்கும்)
- டால்பி டிஜிட்டல் 3/1 - 3 அலைவரிசைகளில் சூழொலியும் 1 அலைவரிசையில் தனியொலியும் கேட்கும் (இடதிலும் வலதிலும் மையத்திலும் சுற்றிலும் கேட்கும்)
- டால்பி டிஜிட்டல் 3/2 - 5 அலைவரிசைகளில் சூழொலி (இடம், வலம், மையம், இடஞ்சூழ் மற்றும் வலஞ்சூழ் பகுதிகளில் கேட்கும்)
இவற்றுடன் குறையதிர்வெண் தாக்கம் என்கிற விருப்பப் பயன்பாடும் உள்ளது. இது டால்பி டிஜிட்டல் எக்ஸ் நீட்டிப்பைப் பயன்படுத்தி சூழொலி அலைவரிசையின் மூலம் (பின்னால் கேட்கும்) ஒலி பரப்பிடும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "டால்பி டிஜிட்டல் விவரங்கள் - டால்பி ஆய்வகங்களில் இருந்து ஆங்கிலத் தகவல்".
- ↑ "டால்பி எக்ஸ் என்றால் என்ன? - டால்பி ஆய்வகங்களில் இருந்து ஆங்கிலத்தகவல்". Archived from the original on 2009-02-27. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
- ↑ "டால்பி டிஜிட்டல் சரௌண்ட் எக்ஸ் என்றால் என்ன? - டால்பி ஆய்வகங்களில் இருந்து ஆங்கிலத்தகவல்". Archived from the original on 2014-06-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
- ↑ "டால்பி டிஜிட்டல் லைவ் - டால்பி ஆய்வகங்கள் ஆங்கிலக் கட்டுரை". Archived from the original on 2009-02-10. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
- ↑ "டால்பி டிஜிட்டல் ப்ளஸ் - ஆங்கிலக் கட்டுரை - டால்பி ஆய்வகங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2019-05-02. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
- ↑ "அடுத்த தலைமுறைக்கான பொழுதுபோக்கு - டால்பி ஏசி4 - ஆங்கிலச் செய்தி - டால்பி ஆய்வகங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2019-05-30. பார்க்கப்பட்ட நாள் 2021-03-07.
- ↑ "டால்பி ட்ரூ ஹெச்டி - டால்பி.காம் - ஆங்கிலச் செய்தி".