உள்ளடக்கத்துக்குச் செல்

தவ்ராத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திறக்கப்பட்டபட்ட தோரா பெட்டியுடன் தோரா சுருள்

தவ்ரத் (அரபு மொழி: توراة‎) (அரபு மொழி : தவ்ரா அல்லது தவ்ராத் என்பது யூத புனித நூலான தோராவின் அரபு பெயர். இசுரயேலர் மக்களுக்கு இறைவனால் மூசா மூலம் வழங்கப்பட்ட வேதமாகும். மேலும் இஸ்லாமிய புனித நூல்களில் ஒன்றாகும்.குர்ஆனில், 'தவ்ராத்' என்னும் சொல் 18 முறை சொல்லப்படுகிறது. தவ்ராத் மரபுகளைக் குறிப்பிடும் போது, முஸ்லிம்கள் அதை பெண்டாட்டூச்(மோசேயின் ஐந்து புத்தகங்கள்) மட்டுமின்றி, எபிரேய வேதாகமம் மற்ற புத்தகங்களுடனும் தல்மூத் மற்றும் மிட்ராஷிம் எழுத்துக்களுடனும் அடையாளப்படுத்தியுள்ளனர்.[1]

நிச்சயமாக நாம் தாம் “தவ்ராத்”தை யும் இறக்கி வைத்தோம்; அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன. (அல்லாஹ்வுக்கு) முற்றிலும் வழிப்பட்ட நபிமார்கள், யூதர்களுக்கு அதனைக் கொண்டே (மார்க்கக்) கட்டளையிட்டு வந்தார்கள்; இறை பக்தி நிறைந்த மேதை (ரப்பனிய்யூன்)களும், அறிஞர் (அஹ்பார்)களும் - அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்க கட்டளையிடப்பட்டவர்கள் என்பதனாலும், இன்னும் அவ்வேதத்திற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தமையாலும் அவர்கள் (அதனைக் கொண்டே தீர்ப்பளித்து வந்தார்கள்; முஃமின்களே!) நீங்கள் மனிதர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள். என்னுடைய வசனங்களை அற்பக் கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்; எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பளிக்கவில்லையோ, அவர்கள் நிச்சயமாக காஃபிர்கள்தாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Isabel Lang Intertextualität als hermeneutischer Zugang zur Auslegung des Korans: Eine Betrachtung am Beispiel der Verwendung von Israiliyyat in der Rezeption der Davidserzählung in Sure 38: 21-25 Logos Verlag Berlin GmbH, 31. திசம்பர் 2015 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783832541514 p. 98 (German)
  2. திருக்குர்ஆன் 5:44