திறநிலை வடிவம்
Appearance
திறநிலை வடிவம் (Open format) என்பது கோப்பு வடிவங்களுள் ஒன்றாகும். இநில் கணியத் தரவுகளைச் சேமிக்கப் பயனாகிறது. அத்தரவானது, வரையறுக்கப்பட்டத் தனிக் குறிப்பீடுகளைக் கொண்டவையாகும். அக்குறிப்பீடுகளை, உரிய சீர்தர அமைப்பகம் கட்டிக்காக்கிறது. மேலும், அக்குறிப்பீடுகளை யார் வேண்டுமானலும், பின்பற்றவும், நடைமுறைப்படுத்தவும் செய்ய இயலும் என்பது முக்கியக் கூறாகும். எடுத்துக்காட்டாக, இதன் சீர்தரக் குறிப்பீடுகளைத் திறநிலை, கட்டற்ற, தனியுடைமை மென்பொருள் உருவாக்குனர்களால் பின்பற்ற இயலும். அத்துடன், பல்வேறு வகை மென்பொருள் உரிமங்களையும் தர இயலக்கூடியதாகக் கட்டமைக்கப் பட்டுள்ளது. ஒரு மென்பொருள் உருவாக்குனர், தமது விருப்பத்திற்கு ஒப்ப, இந்த திறநிலை வடிவங்களைப் பயன்படுத்தும் போது, அதற்கு நிதியோ, கட்டணமோ தர வேண்டியதில்லை. [1]
திறநிலை வடிங்களில் குறிப்பிடத்தக்கவை
[தொகு]- Portable Network Graphics|PNG— a raster image format standardized by ISO/IEC
- FLAC— இழப்பில்லி ஒலி வடிவகம்
- வெப்பெம் (WebM) — நிகழ்பட / ஒலி பேணக வடிவம்
- HTML —உலாவிகளில் காணக்கூடியப் பக்கங்களையும், ஒரு இணையப் பக்கத்தையும் உருவாக்கவல்லது.
- gzip — கோப்பு அளவைச் சுருக்கிக் குறைக்கப் பயனாகிறது.
- விழுத்தொடர் பாணித் தாள்கள் (CSS) — உலகளாவிய வலைச் சேர்த்தியம் கட்டுப்படுத்தும் ஒரு வலையப் பக்கத்தின் வடிவம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Free File Format Definition". LINFO.org. பார்க்கப்பட்ட நாள் 2018-சூலை-09.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)