உள்ளடக்கத்துக்குச் செல்

நார்ப்பொருள் (உணவு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோயா போன்றஇருபுற வெடிக்கனிகளால் உருவாகும் பருப்பு வகைகளில் உயர்தரமான நார்ப்பொருள் உணவு கிடைக்கிறது.

நார்ப்பொருள் உணவு (Dietary fiber) என்பது, உணவில் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய, முக்கிய உணவுப் பொருளாகும். இதனை ஊட்ட நார்பொருள் அல்லது செரிக்கா உணவு என்றழைக்கலாம். ஏனெனில், இதிலிருந்து எவ்வித சத்தும், மனித உடம்புக்கு கிடைப்பதில்லை. ஆனால், உடல் நலத்திற்கு, இப்பொருள் மிகவும் இன்றியமையாதது ஆகும். இது தாவர உணவு வழியே, கிடைக்கிறது. இதனை நீரில் கரையக்கூடிய உணவு நார்ப்பொருள், நீரில் கரையா உணவு நார்ப்பொருள் என இருவகையாகப் பிரிக்கலாம். வேதியியல் கூறுகளின் படி, மாப்பொருள் அல்லாத மாவியம் போன்ற கூட்டுச்சர்க்கரைகளும், கைட்டின், பெக்டின், டெக்சுடிரின், இனுலின், லிக்னைன் போன்ற பிற தாவர வேதியியல் கூறுகளும் கொண்டதாக உள்ளன.[1]

உணவிலுள்ள நார்ப்பொருளின் அளவு

[தொகு]

முழுதானியங்களிலும், காய்கறிகளிலும், பழங்களிலும் நார்ப்பொருள்கள் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்க உணவு நிறுவனத்தால் கண்டறியப்பட்ட நார்ப்பொருளின் அளவு, கீழே தனித்தனியே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.[2] அனைத்து தாவர உணவுகளிலும் நார்ப்பொருள்கள் உள்ளன. இருப்பினும், சிலவற்றில் தான் அதிகம் உள்ளன. பல்வேறு வகை நார்ப்பொருள்களை உண்ணுமாறு, உலகின் முன்னணி உணவியல் ஆய்வு அறிஞர்கள் கூறிகின்றனர்.

உணவுத் தொகுதி எடுத்தளிக்கும் அளவு நார் அளவு கிராம்
பழங்கள் 0.5 கோப்பை 1.1
கரும்பச்சை காய்கறிகள் 0.5 கோப்பை 6.4
ஆரஞ்சுநிற காய்கறிகள் 0.5 கோப்பை 2.1
சமைத்த அவரை (பீன்சு) 0.5 கோப்பை 8.0
மாவுச்சத்து காய்கறிகள் 0.5 கோப்பை 1.7
பிற காய்கறிகள் 0.5 கோப்பை 1.1
தானியங்கள் 28 g (1 அவுன்சு) 2.4
மாமிசம் 28 g (1 அவுன்சு) 0.1

ஊட்டநார்களின் வகைகள்

[தொகு]
ஊட்டச்சத்து உணவுச் சேர்க்கை தயாரிப்பு
நீரில் கரையா உணவுநார்ப் பொருள்கள்
β-glucans (a few of which are water-soluble)
   மாவியம் E 460 cereals, fruit, vegetables (in all plants in general)
   கைட்டின் in fungi, exoskeleton of insects and ஓடுடைய இனங்கள்s
Hemicellulose cereals, bran, மரம் (கட்டிடப் பொருள்), legume
   Hexosan கோதுமை, வாற்கோதுமை
   ஐங்கரிச்சர்க்கரை ராய் (புல்வகை), காடைக்கண்ணி
Lignin stones of fruits, vegetables (filaments of the garden bean), cereals
Xanthan E 415 production with Xanthomonas-bacteria from sugar substrates
நீரில் கரையும் உணவுநார்ப் பொருள்கள்
Fructans replace or complement in some தாவரம் taxa the மாப்பொருள் as storage carbohydrate
   Inulin in diverse plants, e.g. topinambour, சிக்கரி, etc.
Polyuronide
   Pectin E 440 in the fruit skin (mainly ஆப்பிள்s, quinces), vegetables
   Alginic acids (Alginates) E 400–E 407 in பாசி
      Natriumalginat E 401
      Kaliumalginat E 402
      Ammoniumalginat E 403
      Calciumalginat E 404
      Propylenglycolalginat (PGA) E 405
      அகார் E 406
      carrageen E 407 சிவப்புப் பாசி
Raffinose இருபுற வெடிக்கனிகள்
சைலோசு மோனாசாக்கரைடு,பென்டோசு
பாலிடெக்சுட்டுரோசு E 1200 synthetic polymer, ca. 1kcal/g
லாக்டுலோஸ் synthetic இரட்டைச்சர்க்கரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dietary Reference Intakes for Energy, Carbohydrate, fibre, Fat, Fatty Acids, Cholesterol, Protein, and Amino Acids (Macronutrients) (2005), Chapter 7: Dietary, Functional and Total fibre" (PDF). US Department of Agriculture, National Agricultural Library and National Academy of Sciences, Institute of Medicine, Food and Nutrition Board. Archived from the original (PDF) on 2012-02-27. பார்க்கப்பட்ட நாள் 2015-11-28.
  2. Fiber data derived from USDA National Nutrient Database for Standard Reference, Release 17.