உள்ளடக்கத்துக்குச் செல்

பங்குச்சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒரு பங்குச் சந்தை (Stock market) என்பது ஒரு பொதுச் சந்தை (பொருளாதார பரிமாற்றங்களின் தளர்த்தப்பட்ட நெட்வொர்க். ஆனால் ஒரு நிஜ அமைப்போ அல்லது தனித்தியங்கும் அமைப்போ அல்ல), அதில் நிறுவனங்களின் பங்கு மற்றும் தொடர்பான கூறுகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விலையில் வியாபாரம் செய்யப்படும்; இவை பங்கு பரிமாற்றகத்தில் பட்டியலிடப்பட்ட கடனீட்டு ஆவணங்கள் ஆகும், அதோடு அவை தனிப்பட்ட விதத்தில் மட்டும் விற்பனை செய்யப்படும்.

அக்டோபர் 2008இன் தொடக்கத்தில் உலக பங்குச் சந்தையின் அளவு ஏறக்குறைய 36.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கணக்கிடப்பட்டுள்ளது.[1] மொத்த உலக பங்கு தொடர்பான பொருட்களின் சந்தை 791 டிரில்லியன் டாலர்களுக்கு முகப்பு அல்லது பண மதிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது,[2] அது உலக பொருளாதாரத்தின் மொத்த அளவை விட 11 மடங்கு பெரியதாகும்.[3] பங்கு தொடர்பான பொருட்களின் மதிப்பு, குத்துமதிப்பான மதிப்புகளைக் கொண்டு குறிப்பிடப்படுவதால், அதனை ஒரு பங்குக்கோ அல்லது நிரந்தர வருமான பாதுகாப்பு ஆவணத்துக்கோ இணையாக ஒப்பிட முடியாது, அது காலாகாலமாக ஒரு நிஜ மதிப்பாக குறிப்பிடப்பட்டு வருகிறது. அதிகப்படியாக, பல அதிகமான 'பங்கு தொடர்பான பொருட்கள்' ஒன்றை ஒன்று 'ரத்து' செய்து கொள்ளும் (அதாவது, ஒரு நிகழ்வில் நிகழ்த்தப்படும் தொடர்புப் பொருளின் 'பந்தயம்' அதனுடன் தொடர்புடைய மற்றொரு நேராத நிகழ்வின் 'பந்தயத்தால்' வீழ்த்தப்பட்டுவிடும்). அது போன்ற இழப்பு நேரக்கூடிய பாதுகாப்பு பத்திரங்கள் ஒரு நிஜ சந்தை மதிப்பாக இல்லாமல் மாதிரியாகக் குறிக்கப்பட்டவை என மதிப்பிடப்படும்.

பங்குகளையும் பாதுகாப்புப் பத்திரங்களையும் ஒன்றாகப் பட்டியலிடப்பட்ட இடத்துக்கு நிறுவனங்களின் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் கொண்டுவரும் தொழிலில் சிறப்பு வாய்ந்த நிறுவனங்களின் உறுப்புகள் அல்லது சமபங்கு நிறுவனங்கள் கொண்ட பங்குச் சந்தைகளில் பங்குகள் பட்டியலிடப்பட்டு வியாபாரம் செய்யப்படும். அமெரிக்காவில் NYSE என்ற பங்குச் சந்தை, கனடாவில் டொரண்டோ பங்குச் சந்தை. பல முக்கிய ஐரோப்பிய பங்குச் சந்தைகளாக எடுத்துக்காட்ட லண்டன் பங்குச் சந்தை, பாரீஸ் போர்ஸ், மற்றும் டச் போர்ஸைக் குறிப்பிடலாம். ஆசிய சந்தைகளாக டோகியோ பங்குச் சந்தை, ஹாங்காங் பங்குச் சந்தை, மற்றும் பாம்பே பங்குச் சந்தையைக் குறிப்பிடலாம். லத்தீன் அமெரிக்காவில், BM&F போவஸ்பா மற்றும் BMV சந்தைகள் உள்ளன.

வியாபாரம்

[தொகு]

பங்குச் சந்தையில், சிறிய தனிநபர் பங்கு முதலீட்டாளர்கள் முதல் மிகப்பெரும் பழுத்த பணக்கார வியாபாரிகள் வரை, எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து பங்குபெறலாம். அவர்களது ஆர்டர்கள் பங்குச் சந்தையில் உள்ள ஒரு நிபுணரிடம் போய்ச் சேரும், அவர் தான் ஆர்டரை செயல்படுத்துவார்.

சில சந்தைகள் ஒரு வியாபார கட்டிடத்தில் பரிமாற்றம் செய்யக்கூடிய நிஜ இடங்களாக செயல்படும், அம்முறைக்கு திறந்த கூக்குரல் (ஓபன் அவுட்கிரை) என்று பெயர். இந்த வகை ஏலங்கள் பங்குச் சந்தைகளிலும் பொருள் சந்தைகளிலும் பயன்படுத்தப்படும், அதில் வியாபாரிகள் தங்கள் ஏலங்களையும் விலைகளையும் ஒரே நேரத்தில் "கூவி" விற்பார்கள். ஒரு மாயத் தோற்றமுள்ள மற்றொரு வகையான பங்குச்சந்தை உண்டு, அதில் கணினிகள் நிறைந்த நெட்வொர்க்கில் வியாபாரங்கள் மின்விற்பனைகளாக நடைபெறும்.

நிஜ வியாபாரங்கள் அனைத்தும் ஓர் ஏலச் சந்தை மாதிரியில் நடைபெறும், அங்கு வாங்கும் சக்தி கொண்ட வாங்குபவர்கள் ஒரு பங்கின் குறிப்பிட்ட விலையைச் சொல்லி ஏலம் கேட்பார், அதனை விற்கும் விருப்பமுள்ள ஒரு விற்பனையாளர் பங்கின் ஒரு குறிப்பிட்ட விலையைச் சொல்லி விலையைக் கேட்பார். (சந்தையில் வாங்குதல் அல்லது விற்றல் என்பது பங்குக்கான ஏதாவது ஒரு விலையை நீங்கள் கேட்பீர்கள் அல்லது விலையைச் சொல்வீர்கள்.) கேட்ட விலையும் ஏல விலையும் பொருந்தும் போது விற்பனை நடைபெறுகிறது, ஒரு கொடுக்கப்பட்ட விலைக்கு பல ஏலம் கேட்பவர்களும் விடுபவர்களும் இருந்தால் இது முதலில்-வருபவர்க்கு-முதலில்-சேவை என்ற அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.

ஒரு பங்குச் சந்தையின் நோக்கமானது வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே பாதுகாப்பு பத்திர பரிவர்த்தனைகளை ஏற்படுத்தும் ஒரு சந்தையிடத்தை (மாய அல்லது நிஜமானதை) ஏற்படுத்துவதாகும். பட்டியலிடப்பட்ட பாதுகாப்பு பத்திரங்கள் பற்றிய நிகழ்-நேர வியாபாரத் தகவலை சந்தைகள் வழங்கி, விலை கண்டறியும் வசதியை ஏற்படுத்தித் தருகிறது.

நியூயார்க் பங்குச் சந்தை

நியூயார்க் பங்குச் சந்தை ஒரு நிஜ சந்தையாகும், அது பட்டியலிடப்பட்ட சந்தை என்றும் அழைக்கப்படும் — சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் மற்றும் விற்பனை செய்யப்பட முடியும். ஆர்டர்கள் சந்தை உறுப்பினர்கள் மூலம் கட்டிடத் தள புரோக்கரைச் சென்றடைந்து, அவர் அதனை கட்டிடத்தள வியாபார பதிவு நிபுணரிடம் எடுத்துச் செல்வார், அங்கிருந்து ஆர்டர் பங்கின் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படும். கூவப்படும் விற்றல் மற்றும் வாங்கல் ஆர்டர்களை பொருத்துவதே நிபுணரின் பணியாகும். ஒரு பரப்பல் நிலவினால், எந்த விற்பனையும் உடனடியாக செயல்படுத்தப்படாது-- இந்த விஷயத்தில் தன் சொந்த ஆதாரங்களை (பணம் அல்லது பங்கு) மனதில் கொண்டு தனக்கு கொடுக்கப்பட்ட தீர்மானிக்கும் நேரத்தில் அதன் வித்தியாசத்தை வைத்து நிபுணர் முடிவு செய்வார். ஒரு வியாபாரம் செய்து முடிந்தவுடன், "டேப்பில்" பதியப்பட்டு, புரோக்கர் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும், அதன் மூலம் ஆர்டர் வழங்கிய முதலீட்டாளரை அறிந்து கொள்வார்கள். இந்த செயல்முறையில் குறிப்பிட்ட அளவு மனித தொடர்பு இருந்தாலும், கணினிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன, குறிப்பாக "புரோகிராம் டிரேடிங்" என அழைக்கப்படும்.

NASDAQ என்பது ஒரு மாயமான பட்டியலிடப்பட்ட சந்தை, அங்கே எல்லா வர்த்தகங்களும் ஒரு கணினி நெட்வொர்க்கில் தான் செய்யப்படும். நியுயார்க் பங்குச் சந்தையைப் போன்றே இதன் செயல்பாடுகள் இருக்கும். வாங்குபவர்களும் விற்பவர்களும் மின்முறையாகவே பொருத்தப்படுவார்கள். ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட NASDAQ சந்தையாளர்கள் 'தாங்கள்' விற்க அல்லது வாங்க விரும்பும் பங்கின் விலையை ஏலம் கேட்பார்கள் அல்லது விடுவார்கள். [1]

பாரீஸ் போர்ஸ், இப்பொழுது யூரோநெக்ஸ்டின் அங்கமாக உள்ளது, ஓர் ஆர்டர் மூலம் செயல்படும், மின் பங்குச் சந்தை. இது 1980-களின் பிற்பகுதியில் தானியங்கியாக்கப்பட்டது. 1980-களுக்கு முன்பு, இது ஒரு திறந்த நிலை கூவுதல் சந்தையாகவே இருந்தது. பங்கு புரோக்கர்கள் பாலைஸ் புரோங்கினார்டின் வர்த்தகக் கட்டிடத்தளத்தில் சந்தித்தனர். 1986 இல், CATS வர்த்தக முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது, அதன்பின் ஆர்டர் பொருத்துதல் பணி முழுமையாக தானியங்கியாக்கப்பட்டது.

காலம் செல்லச் செல்ல தொடர் வர்த்தகம் (குறிப்பாக பெரிய தொகை பாதுகாப்பு பத்திரங்கள்) 'தொடர் செயல்பாட்டு' சந்தைகளில் இருந்து கடந்து சென்றுவிட்டது. UBS AG, கோல்டுமேன் சாக்ஸ் குரூப் இங்க், மற்றும் கிரெடிட் சூஸ் குழு ஆகிய பாதுகாப்பு பத்திர நிறுவனங்கள், ஏற்கெனவே அமெரிக்க பாதுக்காப்பு பத்திர வர்த்தகங்களின் 12 சதவிகிதத்தை சந்தைகளில் இருந்து தங்கள் சொந்த அமைப்புகளுக்கு எடுத்துச் சென்றுவிட்டன. பாஸ்டனைச் சேர்ந்த அயிட் குரூப் LLC என்ற புரோகரேஜ்-தொழில் ஆலோசனை நிறுவனம் தொகுத்துள்ள தரவுப்படி, பல முதலீட்டு வங்கிகள் NYSE மற்றும் NASDAQ மற்றும் பாதுகாப்பு பத்திர விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் அனைவரையும் தாண்டிச் செல்வதால், அந்த பங்கு 2010 இல் 18 சதவிகிதமாக அதிகரித்து விடுமாம்.

இப்போது பிக் போர்டுகள் போன்ற வர்த்தகக் கட்டிடத் தளங்களின் தேவைகளை கணினிகள் குறைத்துவிட்டதால், பங்குச் சந்தைகளின் மீதமுள்ள சக்தி நகர்த்தப்படுகிறது. அதிகமான ஆர்டர்களை தங்களுக்குச் சொந்த நிறுவனத்துக்குள் எடுத்துச் சென்று, அங்கே பல பெரிய பங்குகளை யாரென்று தெரியாமலே வாடிக்கையாளர்கள் எடுத்துச் செல்லும்படிக்கு, மிகக் குறைந்த கட்டணத்தை சந்தைகளுக்கு செலுத்தியபடி புரோக்கர்கள், ஒரு வருடத்துக்குரிய மிகப்பெரும் பங்கான 11 பில்லியன் டாலர்களை கைப்பற்றி விடுகின்றனர், அது நிறுவனங்கள் செலுத்தும் வர்த்தக கமிஷன்களாக இருக்கிறது, அதுவே நூற்றாண்டின் மிகப்பெரும் தொகையாகவும் மாறிவிட்டது.[மேற்கோள் தேவை].

சந்தையில் பங்குபெறுவோர்

[தொகு]

சில பத்தாண்டுகளுக்கு முன்பு, உலகளவில், குறிப்பிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நீண்ட குடும்ப வரலாறுகள் கொண்ட (உணர்ச்சிகளடிப்படையில் பிணைக்கப்பட்டவர்) பெரும் பணக்கார தொழிலதிபர்கள் மட்டுமே வாங்குபவர்களாகவும் விற்பவர்களாகவும் தனிநபர் முதலீட்டாளர்களாக இருந்தனர். காலப்போக்கில், சந்தைகள் "நிறுவன ரீதியில்" மாறிவிட்டன; வாங்குபவர்களும் விற்பவர்களும் மிகப்பெரும் நிறுவனங்களாக இருந்தன (எடு., பென்சன் நிதிகள், காப்பீட்டு நிறுவனங்கள், சமச்சீர் நிதிகள், அடைவு நிதிகள், சந்தை-வர்த்தக நிதிகள், பெருந்தொகை நிதி, முதலீட்டாளர் குழுக்கள், வங்கிகள் மற்றும் மற்ற பல்வேறு நிதி நிறுவனங்கள்). நிறுவன முதலீட்டாளராக மாறியதால் சந்தை செயல்பாடுகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, 'சிறிய' முதலீட்டாளருக்கு குறைக்கப்பட்ட 'நிரந்தர' (மற்றும் அளவுகடந்த) கட்டணத்துக்கு அரசாங்கமே பொறுப்பு, ஆனால் பெரிய நிறுவனங்கள் புரோக்கர்களுக்கான திடமான முன்னணிக் கட்டணத்தை முறிப்பதில் சமாளித்துவிடுகிறார்கள். (அவர்கள் கட்டணத்தைக் குறைக்க 'பேரம் பேசினார்கள்' ஆனால் அதுவும் பெரிய நிறுவனங்களுக்காகத்தான்.[மேற்கோள் தேவை])

இருந்தாலும், நிறுவன நிர்வகிப்பு (மேற்கத்திய நாடுகளில் மட்டுமாவது) 'நிறுவன' 'முதலாளிகளின்' (பெருமளவில் 'வராதவர்கள்') எழுச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.[மேற்கோள் தேவை]

வரலாறு

[தொகு]

12 ஆம் நூற்றாண்டில், பிரான்சின் கோர்டெடியர்ஸ் டி சேஞ்ச் என்பது வங்கியின் சார்பாக விவசாய மக்களின் கடன்களை நிர்வகிப்பதிலும் சீரமைப்பதிலும் அக்கறை கொண்டிருந்தது. இவர்களும் கடன்களையே வியாபாரம் செய்ததால், இவர்கள் தான் முதல் புரோக்கர்கள். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் புரூக்ஸ் என்ற பொருள் வாணிபர்கள் வேண் டர் பியூர்ஸ் என்ற இடத்தில் கூடினார்கள் என்றொரு அவநம்பிக்கை ஒன்று உண்டு. 1309இல் அவர்கள் "புரூக்ஸ் பியூர்ஸ்" என பெயர் பெற்று, அது வரைக்கும் ஒரு சாதாரண கூட்டமாக இருந்ததை நிறுவனப்படுத்தியுள்ளதாகவும், ஆனால் ஆண்ட்வெர்பில் வேண் டர் குடும்பத்துக்கு ஒரு கட்டிடம் இருந்துள்ளது, அதில் கூடி செயல்பட்டுள்ளனர் [2]; வேண்டர் பியூர்சுக்கு ஆண்ட்வெர்ப் இருந்ததால், அக்காலகட்ட வணிகர்கள் வியாபாரத்திற்கான முதன்மை இடமாக அதனை பயன்படுத்தியுள்ளனர். இந்த விஷயம் பிளாண்டர்ஸ் மற்றும் அண்டை நாடுகளுக்கும் பரவி, பின் "பியூர்சன்" விரைவில் கெண்ட் மற்றும் ஆம்ஸ்டர்டேமில் திறக்கப்பட்டது.

13வது நூற்றாண்டின் மத்தியில், வெனீசிய வங்கிகள் அரசாங்க பத்திரங்கள் மூலம் வர்த்தகம் செய்தன. 1351இல் அரசின் நிதி பற்றிய விலைகளைக் குறைக்க பரப்பப்படும் புறளிகளை தண்டித்தது. பைசா, வெரோனா, ஜெனோவா மற்றும் புளோரன்ஸ் ஆகிய நாடுகளின் வங்கிகளும் 14ஆம் நூற்றாண்டின் போது அரசு பத்திரங்களை வைத்து வர்த்தகம் செய்யத் தொடங்கின. இவைகள் அரசனால் ஆளப்படாமல் ஆதிக்கம் கொண்ட குடிமகன்கள் அடங்கிய குழுவால் ஆட்சி செய்யப்பட்ட தன் நகர மாகாணங்கள் என்பதால் இது தான் செய்ய முடிந்தது. டச் நாட்டில் பின்னர் கூட்டு பங்கு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன, அவற்றில் பங்குதாரர்கள் தொழில் நிறுவனங்களில் முதலீடூ செய்து அவர்களுக்கான லாப நஷ்டங்களைப் பெற்றுக் கொண்டனர். 1602இல், டச்சு கிழக்கு இந்திய கம்பெனி ஆம்ஸ்டர்டேம் பங்குச் சந்தையின் முதல் பங்கை வெளியிட்டது. அதுதான் முதன் முதலில் பங்குகளையும் பாண்டுகளையும் வெளியிட்ட நிறுவனமாகும்.

ஆம்ஸ்டர்டேம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (அல்லது ஆம்ஸ்டர்டேம் பியூர்ஸ்) என்பது தான் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தொடர் வர்த்தகத்தில் நடத்திய முதல் சந்தையாகும். நமக்கு தெரிந்த வகையிலான வர்த்தகங்களான விரைவு விற்பனை, விருப்ப வர்த்தகம், கடன்-பங்கு மாற்றங்கள், வணிகர் வங்கி, கூட்டு நம்பிக்கைகள் மற்றும் மற்ற யூக வியாபாரங்கள், அனைத்திலும் டச்சுக்காரர்கள் சிறந்து விளங்கினர்[4]. இப்பொழுது ஒவ்வொரு வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளிலும், பங்குச் சந்தைகள் உள்ளன, உலகின் மிகப்பெரிய சந்தைகள் அமெரிக்க நாடுகள், யுனைடட் கிங்டம், ஜப்பான், இந்தியா, சீனா, கனடா, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ளன.[5]

டோகியோ பங்குச் சந்தையின் முக்கிய வர்த்தக அறை, அங்கு தற்போது வர்த்தகம் கணினிகள் மூலம் செய்யப்படுகின்றன.

பங்குச் சந்தையின் முக்கியத்துவம் என்ன

[தொகு]

செயல்பாடும் நோக்கமும்

[தொகு]

பங்குச் சந்தை என்பது நிறுவனங்கள் தங்கள் பணத்தை அதிகரிக்கும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். இது பொதுச் சந்தையில் தொழில்களை பொதுவில் வியாபாரப்படுத்தவும், நிறுவனத்தின் உரிமத்துவ பங்குகளை விற்று கூடுதல் முதலீட்டுத் தொகையை பெறவும் வழிவகுக்கிறது. சந்தை வழங்கும் எளிதில் பணமாக்கும் முறை பங்குப்பத்திரங்களை விரைவாக எளிதாகவும் விற்க முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. இது ரியல் எஸ்டேட் போன்று குறைவான பணமாக்கும் வாய்ப்பு கொண்டவற்றோடு ஒப்பிடுகையில், பங்குகளில் முதலீடு செய்வது ஓர் அட்டகாசமான அம்சம்.

பங்குகள் மற்றும் மற்ற சொத்துகளின் விலை பொருளாதார நடவடிக்கையின் மாற்றங்களின் முக்கிய பங்கு வகிக்கிறது, அதுவே சமூக நிலவரத்தின் தாக்கமாக அல்லது குறியீடாக இருக்கும் என்பதை வரலாறு காட்டியுள்ளது. பங்குச் சந்தை அதிகரிக்கும் ஒரு பொருளாதாரத்தில் அது பொருளாதாரம் வளர்ந்து முன்னேறுவதைக் காட்டுகிறது. உண்மையில், பங்குச் சந்தை எப்போதும் ஒரு நாட்டின் பொருளாதார வலிமை மற்றும் வளர்ச்சியின் முதல்நிலைக் குறிப்பானாக கருதப்படுகிறது. உயரும் பங்கு விலைகள், உதாரணத்திற்கு, அவை அதிகரிக்கும் தொழில் முன்னேற்றம் மற்றும் பலவற்றுடன் தொடர்புடையதாக இருக்கும். பங்கு விலைகள் வீட்டு வசதிகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் போன்றவற்றைப் பாதிக்கிறது. அதனால், மத்திய வங்கிகள் பங்குச் சந்தையின் நடைமுறை மற்றும் செயல்பாட்டின் மீது ஒரு கண் வைத்து, பொதுவாக பொருளாதார அமைப்புச் செயல்பாடுகளின் சுமூகமான இயக்கத்தில் கருத்தாய் இருப்பதுண்டு. பொருளாதார நிலைத்தன்மை என்பது மத்திய வங்கிகளின் நீடித்து இருத்தலைக் குறிக்கிறது.

பங்குச் சந்தைகள் ஒவ்வொரு பரிமாற்றத்தின் வெளியேற்றிடமாகவும் செயல்படுகின்றன, அதாவது அவை பங்குகளை வாங்கி வெளியிட்டு, ஒரு பாதுகாப்பு பத்திரத்தை விற்பவருக்கு பணத்துக்கான உத்தரவாதத்தையும் அளிக்கின்றன. இது ஒரு தனிநபராக வாங்குபவருக்கு அல்லது விற்பவருக்கு உள்ள ஆபத்தை அகற்றுகிறது, அதனால் அதற்கு ஒத்த நிலையுள்ளவர் அதற்குரிய பரிமாற்றத்தில் நிலைத்திருக்கலாம்.

இந்தச் செயல்களின் சுமூகமான செயல்பாடு பொருளாதார வளர்ச்சியை குறைந்த செலவில் ஏற்படுத்தி நிறுவனத்தின் முயற்சிகள் சரக்குகள், சேவைகள் மற்றும் வேலை வாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும். இப்படியாக பொருளாதார அமைப்பு செழிப்படைய உதவுகிறது. பங்குச் சந்தைகள் உட்பட நவீன பொருளாதார சந்தைகளில் முக்கியமான கருத்தாக இருப்பது, சுதந்திரமாக தீர்மானிப்பதுதான். உதாரணத்திற்கு, எல்லா துறையிலும் அமெரிக்க பங்குச் சந்தைகள் அதிகமாக சிறிய சந்தைகளை விட கட்டுப்படுத்தாத ஏற்புத்தன்மையை சந்திக்கின்றன. உதாரணத்திற்கு, அமெரிக்க சமுதாயத்துடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய அல்லது மதிப்பே அல்லாத சீன நிறுவனங்கள் வால் ஸ்ட்ரீட்டில் அமெரிக்க வங்கிகளுக்கு லாபமீட்டித் தருகின்றன, அவை இருந்த இடத்தில் பெரும் கமிஷன்களைப் பெற்றுத் தருவதோடு, சீனாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்களையும் பெறுகின்றன. இந்த நிறுவனங்கள் அமெரிக்க பொருளாதாரத்துக்கு எந்த விதத்திலும் நீண்ட கால நிலைத்தன்மையை வழங்கப் போவதில்லை என்றாலும், அமெரிக்க தொழிலதிபர்களுக்கு மற்றும் சீனர்களுக்கு குறைந்த கால லாபங்களைப் பெற்றுத் தருகின்றன; புதிய சந்தையில் ஒரு வெளிநாட்டு நிறுவனம் வந்தாலும், அது சந்தையின் குடிமக்களுக்குத் தான் நன்மை புரியும். தலைகீழாக, கனடாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான டொரண்டோ பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பெரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மிகக் குறைவுதான். இந்த சுதந்திர சிந்தனை கனடாவை உலக பொருளாதாரச் சூழல்களில் இருந்து கொஞ்சம் தவிர்த்துவிட்டது. பங்குச் சந்தைகள் மிகக் குறைந்த செலவில் பொருளாதார வளர்ச்சியைப் பெறவும், நல்ல வேலை வாய்ப்பை அடையவும், வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் உள்ளே வரும்படி சிறப்பான கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நவீன பொருளாதார அமைப்புக்கும் பங்குச் சந்தைக்கும் உள்ள உறவு

[தொகு]

பல மேற்கத்திய நாடுகளில் பொருளாதார அமைப்புகள் மிகப்பெரும் அளவில் மாற்றம் பெற்றுவிட்டன. இந்த வளர்ச்சியின் ஓர் அம்சம் இடைகுறுக்கிடாததன்மை சேமிப்பு மற்றும் பொருளாதார நிதியின் ஓட்டம் வழக்கமாக செலுத்தப்படக்கூடிய வழியான வங்கிக் கடன் மற்றும் வைப்புச் செயல்களுக்குச் செல்லாமல் நேரடியாக பொருளாதார சந்தைகளுக்குச் செல்கிறது. பொது மக்களின் பங்குச் சந்தை முதலீடு மீதான அளவுகடந்த ஆர்வ அதிகரிப்பு, நேரடியாக இருந்தாலும், மியூச்சுவல் நிதிகள் மூலமானாலும், அவை இந்தச் செயல்பாடுகளின் முக்கிய கூறாக உள்ளது. பல நாடுகளில் குடும்பங்களின் பொருளாதார சொத்துக்களில் பெரும் பங்காக பங்குகள் இடம்பெறுவது கடந்த பத்து ஆண்டுகளாக அதிகரித்துள்ளதாக புள்ளியியல் விவரங்கள் காட்டுகின்றன. 1970-களில் ஸ்வீடனின் வைப்பு நிதிகள் மற்றும் மற்ற எளிய ஆபத்துணர்வோடு பணமாக்கக்கூடிய சொத்துகள் குடும்பங்களின் பொருளாதார சொத்துகளில் 60 சதவிகிதத்தை நிறைத்திருந்ததாகவும், அது 2000-களில் உள்ளதைவிட 20 சதவிகிதம் குறைவாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. பொருளாதார பங்குத்தொகுதிகளின் பெரும்பங்கு மாற்றியமைப்புகள் நேரடியாக பங்குகளுக்கு போய்விட்டன, ஆனால் நிறுவனங்களின் முதலீட்டின் பல வகைகள் பல தனிநபர் குழுக்களுக்காக இப்போது உருவெடுத்துள்ளன, எடு., பென்சன் நிதிகள், மியூச்சுவல் நிதிகள், பெரும்பண நிதிகள், பிரிமியங்களின் காப்பீட்டு முதலீடு போன்றவை. அதிகப்படியான ஆபத்துடன் சேமிக்கக்கூடிய முறைகள் பல நிதிகளுக்கும் காப்பீட்டுக்கும் புதிய விதிகளால் புத்துயிர் அளித்து, பங்குகளை பெரிய மதிப்பு கொண்ட பத்திரங்களாக மாற்றி விடுகின்றன. இதே போன்ற எண்ண அலைகள் மற்ற தொழில் ரீதியான நாடுகளிலும் காணப்படுகிறது. ஐரோப்பிய யூனியன், ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான் மற்றும் மற்ற வளர்ந்த நாடுகளில் உள்ள வளர்ந்த பொருளாதார அமைப்புகளில், ஒரேமாதிரியான எண்ண அலைதான் நிலவுகிறது: பாரம்பரியமாக (அரசு சார்பு) வங்கிகளில் வைப்பு நிதி சேமிப்பு செய்தல் என்பது ஒன்றைப் போல் ஒன்றிராத அதிக ஆபத்து நிறைந்த பாதுகாப்பு பத்திரங்களாக மாறிவிட்டன.

பங்குச் சந்தை, தனிநபர் முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார ஆபத்து

[தொகு]

ஆபத்து நிறைந்த நீண்ட கால சேமிப்பில் அதனுடன் தொடர்புடைய அதிகரிக்கும் ஆபத்துகளை நிர்வகிக்கும் திறனும் ஒரு தனிநபருக்குத் தேவை. பங்கு விலைகள் மிகப்பெரிய அளவில், வங்கி (அரசு சார்பு) வைப்பு நிதிகள் அல்லது பத்திரங்களின் நிலைத்தன்மையின் குறிப்பிட்ட ஏற்ற இறக்கத்துடன் மாற்றமளிக்கும். இது தனிநபர் முதலீட்டாளரையோ குடும்பத்தையோ பாதிப்பது மட்டுமல்ல, ஒரு பொருளாதாரத்தைப் பெரும் அளவில் பாதிக்கிறது. அதனைத் தொடர்ந்து ஏற்படுவது பொருளாதாரத் துறையில் பொதுவான சில ஆபத்துகளோடும் குறிப்பாக பங்குச் சந்தையோடும் ஈடுபடுத்தப்படும். பல புதிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் இணைந்திருப்பது, அல்லது 'ஆபத்தான' முதலீட்டுகளில் கலந்து கொள்வது இப்போது மிக முக்கியமானவைகள் ஆகும் ('முதலீட்டு' சொத்து, அதாவது ரியல் எஸ்டேட் மற்றும் சேகரிக்கக்கூடியவை).

ஒவ்வொரு வருடம் கடக்கும் போதும், பங்குச் சந்தையின் சத்தம் அதிகரிக்கிறது. முதலீட்டாளரின் கவனத்தைத் திருப்ப தொலைக்காட்சி வர்ணனையாளர்கள், பொருளாதார எழுத்தாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சந்தை வியூகிப்பாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம், தனிநபர் முதலீட்டாளர்கள், அரட்டை அறைகள் மற்றும் செய்திப் பலகங்களில் மூழ்கி, கேள்வி நிறைந்த மற்றும் எப்போது தவறாக இருக்கும் உதவிக் குறிப்புகளை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், இந்த இருக்கக்கூடிய தகவலைத் தாண்டி, முதலீட்டாளர்கள் லாபம் சம்பாதிக்க பெரிதும் சிரமப்படுகிறார்கள். சிறிய காரணங்களால் பங்கு விலைகள் வான்வழி ராக்கெட் போல உயர்வதும், பின் விரைவாக சறுக்குவதும், குழந்தைகளின் கல்விக்காக மற்றும் சொந்த ஓய்வுக்காக முதலீடு செய்தவர்கள் பயந்து போவதும் நடந்து கொண்டே இருக்கின்றன. சில நேரம் சந்தையில் எந்த அசைவோ காரணமோ இல்லாமல், முட்டாள்தனம் மட்டும் இருக்கும்.

இது வாரன் பஃபட் என்னும் நீண்ட கால மதிப்புமிக்க பங்கு முதலீட்டாளரின் பிரசுரிக்கப்பட்ட வாழ்க்கைக் குறிப்பின் முகவுரையில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோளாகும்.[6] பஃபட் தன் தொழிற்பயணத்தை 100 டாலர்கள் மற்றும் பஃபட்டின் குடும்பம் மற்றும் நண்பர்கள் அடங்கிய ஏழு லிமிடெட் பங்குதாரர்களிடம் இருந்து 105,000 டாலர்களுடன் தொடங்கினார். இத்தனை வருடங்களில் தன்னை ஒரு பல-லட்சம்கோடி-டாலர் பணக்காரராக உருவாக்கியுள்ளார். இந்த மேற்கோள் 20-வது நூற்றாண்டின் இறுதியிலும் 21-வது நூற்றாண்டின் தொடக்கத்திலும் பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

பங்குச் சந்தையின் நடவடிக்கை

[தொகு]
டைம்ஸ் ஸ்குயரில் உள்ள NASDAQ, நியூயார்க் நகரம்.

முதலீட்டாளர்கள் தங்கள் பொருளாதார விலைகளை நீண்ட கால மொத்தவிலை மனநிலையில் இருந்து 'தற்காலிக ரீதியானதாக' நகர்த்தலாம் என்பதை நாம் நம் அனுபவத்தில் அறிவோம். (லாபகரமான அல்லது மேலோங்கும் சூழ்நிலைகள் எருதுச் சந்தைகள் எனக் குறிப்பிடப்படும்; நஷ்டமான அல்லது கீழ் நோக்கிய சூழ்நிலைகள் கரடிச் சந்தைகள் எனக் குறிப்பிடப்படும்.) மிகையான-விளைவுகள் ஏற்படலாம்—அதனால் அதிகப்படியான லாபநோக்கு (யூபோரியா) உருவாகி விலைகள் இயக்கப்படலாம், எதிர்பாராத அதிக அல்லது மிகையான நஷ்டபோக்கு அதற்கேற்றபடி விலைகளை குறைவான போக்கில் இயக்கச் செய்யும். பொருளாதார சந்தைகள் 'பொதுவாகவே' திறமையானவை என (அதாவது., ஒட்டுமொத்த சூழலில் பங்கு விலைகள் ஒரு காசியன் விநியோகத்தைப் பின்பற்றுகின்றன) ஒரு தவறான எண்ணம் புதிய கோட்பாடு மற்றும் ஆளக்கூடிய விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தீவிர சந்தை கருதுகோளின்படி (EMH), எல்லைகளுக்கான வெளிப்பார்வை, இலாபங்கள் அல்லது லாப பங்குகள் போன்ற அடிப்படை காரணிகள் மட்டுமே மாற்றம் பெற்று, குறுகிய காலத்தையும் தாண்டி பங்கு விலைகளை பாதிக்கலாம், அதனால் அமைப்பில் ரேண்டம் 'ஒலி' நிலவக்கூடும். ('கடுமையான' EMH என அழைக்கப்படும்—இந்த பெரியளவான கோட்பாடுமிக்க கல்விரீதியான புள்ளி—விலைகள் ஏற்கெனவே உள்ள அளவில் அல்லது அருகில் உள்ள விசையில், நிஜத்துக்கு முரணாக, கொஞ்சமும் இல்லாமல், அல்லது வியாபாரமே சுத்தமாக நடக்கக்கூடாது என்பதைக் காட்டுகிறது, அது எல்லா பொதுமக்களுக்கும் தெரிந்தபடியே விலை நிர்ணயிக்கப்பட்டது ) 'கடுமையான' தீவிர சந்தை கருதுகோள் சில நிகழ்வுகளால் மொத்தமாக சோதிக்கப்படுகிறது டோ ஜோன்ஸ் அட்டவணை 22,6 சதவிகிதத்துக்கு இறங்கியபோது 1987 பங்குச் சந்தை வீழ்ச்சி ஏற்பட்டது—அது தான் அமெரிக்காவின் எப்போதுமே இல்லாத அளவு ஒரு நாளின் அதிக அளவு வீழ்ச்சியாகும். இந்த சம்பவம் நடந்தது முதல் பங்குவிலைகள் எப்படி வேண்டுமானாலும் விழலாம் என்பது தெரியவந்தது, இது நாள் வரை, ஒரு குறிப்பிட்ட காரணத்தால் தான் பங்கு விலைகள் விழுகின்றன என்பதை கணிப்பது இயலாதது: ஒரு முழுமையான தேடல் கண்டுபிடிக்கத் தவறிவிட்டது எந்த 'அர்த்தமுள்ள' வளர்ச்சியும் வீழ்ச்சிக்குக் காரணமாக முடியவில்லை. (இது போன்ற சம்பவங்கள் தற்செயலாக, அதுவும் அரிதாக நடக்கும்படி முன்கணிக்கப்பட்டுள்ளது.) பல விலை நிகழ்வுகள் மிகப் பொதுவாக நேர்வது ('ரேண்டமாக' நடப்பதாக முன்கணிக்கப்பட்டதையும் தாண்டி) புதிய தகவலால் ஏற்படவில்லை; அமெரிக்காவின் போர் காலத்துக்குப் பிந்தைய சூழலில் ஐம்பது மிகப்பெரிய ஒரு-நாள் பங்கு விலை நிகழ்வுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டது.[7]

இந்த விலைகள் நிற்கவேண்டிய அல்லது மாறக்கூடியதாக இருத்தல் தேவைப்படாத ஒரு 'மென்மையான' EMH வந்து விட்டது, ஆனால் இது சந்தை பங்கேற்பாளர்கள் மாறக்கூடிய சந்தை 'இயலாமைகளில்' இருந்து முறையாக லாபமடையாமல் போகலாம். போகப்போக, எல்லா விலை மாற்றமும் ரேண்டம் தான் என EMH (அடிப்படை தகவலில் மாற்றம் இல்லாத போது) கணிக்கிறது (அதாவது., மனநிலை சாராது), பல வாரங்கள் அல்லது அதையும் தாண்டி பல காலத்துக்கு குறிப்பிட்ட மனநிலை பங்குச் சந்தைக்கென நிலவுவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. அதுபோன்ற மிகப்பெரிய மற்றும் ரேண்டம் அல்லாத விலை மாறுதல்களுக்கான பல்வேறு விளக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, எதிர்பார்க்கப்பட்ட ஆபத்தில், அது போன்ற வியூகங்களை பயன்படுத்துகையில், நஷ்டம்-நிறுத்த வரையறைகள் மற்றும் ஆபத்தின் மதிப்பு வரையறைகள், போன்றவை கோட்பாடு ரீதியாக பொருளாதாரச் சந்தைகளில் கூடுதல் விளைவை ஏற்படுத்தலாம். ஆனால் சிறந்த விளக்கத்தின் மூலம் அறியப்படுவது என்னவென்றால், பங்குச் சந்தை விலைகள் விநியோகிக்கப்படுவது காசியன்-அல்லாத நிலைமையாகும் (அதில் EMH என்பது, அதன் நடப்பு வடிவங்கள் எதிலும் கடுமையாக பயன்படுத்தப்படாது).[8][9]

மற்றொரு ஆராய்ச்சியில் உளவியல் காரணிகள் மிகைப்படுத்தப்பட்ட (புள்ளியியல் ரீதியாகத் தெரியாத வகையில்) பங்கு விலை மாற்றங்களை ஏற்படுத்தலாம் (அப்படிப்பட்ட செயல்கள் கொண்ட EMHக்கு முரணாக 'ரத்தாவது') உளவியல் ஆராய்ச்சியில் மக்கள் வடிவங்களை 'பார்ப்பதற்கு' பழக்கப்பட்டுள்ளார்கள், எப்போதும் அப்படியொரு வடிவத்தைப் பெறுவார்கள், அது பெரும்பாலும் சத்தமாக இருக்கும். (அது மேகங்கள் அல்லது மை படிதல்களை ப் பார்ப்பது போன்றது.) தற்போதைய சூழலில் இது ஒரு நிறுவனத்தைப் பற்றிய நல்ல செய்தி உருப்புகளுக்கு அடுத்த நிலையில் இருக்கும், அது முதலீட்டாளர்களை மிகவும் லாபநோக்கில் வெளிப்பட வைக்கும் (அது கிரகிக்கமுடியாத அளவில் விலையை ஏற்றக்கூடியது). நல்ல லாபங்கள் கிடைக்கும் காலமும் முதலீட்டாளர்களின் தன்னம்பிக்கையை அதிகரித்து, அவரது (உளவியல்) ரீதியான ஆபத்து மனப்பான்மையை குறையச் செய்யும்.[10]

உளவியலில் இருந்து—மற்றொரு கோட்பாடு— நோக்கம் நிறைந்த மதிப்பீட்டுக்கு நேராக செயல்படுவது குழுவாக சிந்தித்தல் தான். சமுதாய விலங்குகளாகிய நமக்கு, ஒரு கருத்துடன் ஒன்றித்தபின், அது மிகப்பெரிய குழுவில் இருந்து குறிப்பிட்ட அளவு வேறுபடுவதாகவே இருக்கும். இதற்கான உதாரணமாக சொன்னால், காலியாக உள்ள ஓர் உணவுக் கடைக்குள் செல்ல ஒருவர் தயங்குவார், மக்கள் தங்கள் கருத்தை ஒரு குழுவின் மற்றவர்களால் மதிப்பிடப்பட்டதாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள்.

ஓர் ஆராய்ச்சியில் அதன் எழுத்தாளர்கள் சூதாடுதல் பற்றிய ஓர் ஒப்புமையைக் காட்டியுள்ளார்கள்.[11] சாதாரண சூழல்களில் சந்தையானது ரவுலட் விளையாட்டு போலவே செயல்படும்; சாத்தியக்கூறுகள் அனைத்தும் தெரிந்த வண்ணம், பல்வேறு வகையான முதலீட்டாளரின் தீர்மானங்கள் மிகப்பெரிய அளவில் சுதந்திரமாக இருக்கும். சந்தை அழுத்தமான நிலையில் இருக்கையில், ஆட்டம் போக்கர் போல் மாறிவிடும் (மந்தைபோன்ற போக்கு நிலவத் தொடங்கும்). பங்கேற்பாளர்கள் மற்ற முதலீட்டாளர்களின் உளவியலின் அதிக பலத்தைப் பெற்று, அவர்கள் உளவியல் ரீதியாக எப்படி செயல்படுகிறார்கள் என்பதற்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

பங்குச் சந்தை என்பது எந்தத் தொழிலையும் போல் இல்லாமல், எப்போதும் கற்றுக் கொண்டிருக்க தவறுகளுக்கு மன்னிப்பு பெறுவதாக இருக்கும். அனுபவமற்ற முதலீட்டாளர்களுக்கு அரிதாகவே உதவியும் ஆதரவும் கிடைக்கும். 1987 வீழ்ச்சி ஏற்படும் வரை, 1 சதவிகிதத்துக்கும் குறைவான பகுந்தாய்வாளர்களின் பரிந்துரைகள் விற்பனைக்கு முன்னேறின (அது 2000-2002 கரடி சந்தையின் போதும், சராசரியே 5%ஐ தாண்டவில்லை). 2000 வரையான ஓட்டத்தில், மீடியா தேவையான லாபப்போக்கை ஏற்படுத்திக் கொண்டிருந்தன, பங்கு விலைகள் அதிகரிக்கக்கூடிய அறிக்கைகள், ஒரு குறிப்பிட்ட புதிய பொருளாதார பங்குச் சந்தையில் அதிகளவு பணத்தை மிக விரைவாக சம்பாதிக்கலாம் என்றொரு எண்ணம் போன்றவற்றை பரப்பிவிடும். (அதன்பின் 2000-2002 கரடிச் சந்தை ஏற்பட்ட போது அந்த பிரமிப்பு குறையத் தொடங்கியது, அதனால் 2002 கோடையில், DOWயின் முன்கணிப்புகள் சராசரி 5000க்கும் குறைவாக செல்வது சாதாரணமாகிவிட்டது.)

அறிவுக்கு பொருந்தாத நடத்தை

[தொகு]

சிலநேரங்களில் பொருளாதார மற்றும் நிதிநிலைச் செய்திகளுக்கு சந்தை அறிவுக்கு பொருந்தாத விதத்தில் வினை செய்யும், பத்திரங்களின் தொழில்நுட்ப மதிப்பு மீது கூட அதில் நிஜ விளைவு காட்டாத செய்திகளுக்கும் அது அப்படி செயல்படும். ஆனால் அது நிஜத்தை விட அதிகம் மாறுபட்டது, அப்படிப்பட்ட ஒரு செய்தி வந்ததும், அது நல்ல செய்தியோ (கெட்ட செய்தியோ) எதிர்பார்த்ததையும் விட எதிர்விளைவுகளை அது நேரிடச் செய்யும். எனவே பங்குச் சந்தையை எப்படி வேண்டுமானாலும் செய்தி வெளியீடு, புரளிகள், மகிழ்ச்சி நோக்கம் மற்றும் அதிகளவு பயம் போன்றவற்றால் இயக்கலாம்; ஆனால் பொதுவாக சுருக்கமாக, பல அனுபவமிக்க முதலீட்டாளர்கள் போல, (குறிப்பாக பெரிய அளவு நிதிகள்) கொண்ட முதலீட்டாளர்கள் அது போன்ற மெல்லிய, சூழ்நிலை இஸ்டீரியாவால் பயனடைய முற்படுவார்கள்.

குறுகிய-காலத்தில், எவ்வளவு அதிகமான சந்தை-மாற்ற சூழ்நிலைகளின் எண்ணிக்கையாலும் பங்குகளும் மற்ற பத்திரங்களும் அடிக்கப்பட்டு மாற்றிவிடப்படலாம், எனவே பங்குச் சந்தையை முன்கணிப்பது சிரமமானது. உணர்ச்சிகள் விலைகளை ஏற்றி இறக்கலாம், மக்கள் தாங்கள் நினைப்பது போல் பகுத்தறிவானவர்கள் அல்ல, அவர்கள் வாங்கும் விற்கும் காரணங்களும் தெளிவற்றவை. மூதலீட்டு தீர்மானங்களை எடுக்கும் போது முதலீட்டாளர்கள் 'அறிவற்ற விதத்தில்' செயல்படுவதாக நடத்தையாளர்கள் குறைகூறுகிறார்கள், அதனால் சரியற்ற பத்திர விலைகள், சந்தை இயலாமைகள், ஏற்படுகின்றன, அதன் மூலம் பணம் உண்டாக்கும் வாய்ப்பும் ஏற்படுகின்றன [12]. EMHஇன் முழு கணிப்பு இப்படியாக இருக்கையில் பகுத்தறிவுமிக்க விளைவுகளின் தகவல் அடிபட்டுப் போகும், அதனால் அறிவுபூர்வமாக நிர்ணயித்த விலைகளும் அப்படியே விடப்படும்.

டோவ் ஜோன்சின் தொழில்துறை சராசரியாக ஒரே நாளில் அதிகம் பெற்றது 936.42 புள்ளிகள் அல்லது 11 சதவிகிதம், இது அக்டோபர் 13, 2008இல் நடைபெற்றது.[13]

வீழ்ச்சிகள்

[தொகு]
ராபர்ட் ஷில்லரின் S&P தொகுப்பு நிஜ விலை குறியீடு, சம்பாத்தியங்கள், லாப பங்குகள் மற்றும் வட்டி விகிதங்கள், அறிவுசாரா மிகைஎதிர்பார்ப்பு, 2d ed.[14] இந்த பதிப்பின் முகப்பில் ஷில்லர், "பங்குச் சந்தைகள் இன்னும் வரலாற்று நிலைகளுக்கு வநதுவிடவில்லை, இந்த எழுத்தில் உள்ளது போல் விலை-திரட்டல் விகிதம், மத்திய 20களில், வரலாற்று சராசரியைவிட அதிகமாக இருக்கலாம்..... என எச்சரிக்கிறார்.தங்கள் முதலீடுகளில் கவனம் செலுத்துவதால் ஒருநாள் பணக்காரர்கள் ஆவார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் இன்னும் பங்குச் சந்தைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள், அதனால் ஆக்கப்பூர்வ முடிவுகளை எடுத்து தவறான விளைவுகளையே அடையப் போகிறார்கள்."
விலை திரட்டல் விகிதம் ராபர்ட் ஷில்லர் அமைத்த களத்தின் அடிப்படையில் இருபது வருட பலன்கள் குறிக்கப்பட்டுள்ளன (படம் 10.1,[14] source). கிடைமட்ட அச்சு S&P மொத்த பங்குச் சந்தைக் குறியீடை அறிவுசாரா மிகை எதிர்பார்ப்பாக நிஜ விலை-சேகரிப்பு விகிதத்தைக் குறிக்கிறது (பணவீக்கம் மாற்றம் செய்த விலை முந்தைய பத்து ஆண்டின் பணவீக்க சேகரிப்பு மாற்றங்களின் சராசரியால் வகுக்கப்படுதல்).செங்குத்து அச்சு நிஜ வருடாந்திர பலனை S&P மொத்த பங்குச் சந்தைக் குறியீடை, மறுமுதலீட்டு லாப பங்குகளை மற்றும் இருபது வருடங்கள் கழித்து விற்பதன் பலனைக் காட்டுகிறது.விடையில் காட்டப்பட்டுள்ளது போல் வெவ்வேறு இருபது வருட காலங்களின் தரவு வண்ணம் தீட்டப்பட்டு காட்டப்பட்டுள்ளது.பத்துவருட பலன்களையும் பாருங்கள்.இந்த படம் "நீண்ட கால முதலீட்டாளர்கள்—தங்கள் பணத்தை பத்து முழு ஆண்டுகளில் முதலீடு செய்து கிடைத்த அளவு—பத்துவருட தொடக்கத்தில் வந்த வருமானங்களுடன் ஒப்பிடுகையில் நல்லபடியாகவே செயல்பட்டன.நீண்ட கால முதலீட்டாளர்கள் நன்கு அறிவுறுத்தப்படுவது என்னவென்றால், பங்குச் சந்தை உயர்வில் இருக்கும் போது உங்கள் ஈடுபாடைக் குறைத்து, சமீபத்தில் கண்டறிந்தபடி, சந்தை குறைவாக இருக்கும் போது நுழையவும்."[14]

பட்டியலிடப்பட்ட பங்குச் சந்தைகளில் ஏற்படும் பங்குகளின் பங்கு விலையில் கடுமையான வீழ்ச்சி ஏற்படுவது ஒரு பங்குச் சந்தை வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது. பல்வேறு பொருளாதார காரணிகளுக்கு இணையாக, ஒரு பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதன் காரணம் பீதியால் மற்றும் முதலீடு செய்ய பொதுவாக எழும் தன்னம்பிக்கை குறைவு போன்றவற்றால் பங்குச் சந்தை வீழ்ச்சி ஏற்படுகின்றன. அடிக்கடி, பங்குச்சந்தை வீழ்ச்சிகள் சந்தேகத்துக்குரிய பொருளாதார சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவந்து விடும்.

பிரபலமான பங்குச் சந்தை வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன, அவற்றால் பல பில்லியன் டாலர்கள் இழப்பாகி மிகப் பெரிய அளவில் சொத்துகள் அழிக்கப்பட்டுள்ளன. சமூகப் பாதுகாப்பு மற்றும் ஓய்வுத் திட்டங்கள் வந்ததில் இருந்து அவை அதிகமாக தனியாராக்கப்படதில் இருந்து, பங்குகள் மற்றும் பத்திரங்கள் மற்றும் சந்தையின் பல உருப்புகள் இணைக்கப்பட்டதில் இருந்து பங்குச் சந்தையில் பல மக்கள் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. 1929இன் வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சி 1973–4 பங்குச் சந்தை வீழ்ச்சி, 1987 இன் கருப்புத் திங்கள், 2000த்தின் டாட்-காம் பப்புள், மற்றும் 2008 இன் பங்குச் சந்தை வீழ்ச்சி என பல பிரபலமான பங்குச் சந்தை வீழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

பங்குச் சந்தையின் மிக பிரபலமானவற்றில் ஒன்று அக்டோபர் 24 1929இல் கருப்பு வியாழனில் தொடங்கியது. இந்த பங்குச் சந்தை வீழ்ச்சியின் போது டோவ் ஜோன்ஸ் இன்டர்நேஷனல் 50% இழப்பை சந்தித்தது. அதுவே மாபெரும் வீழ்ச்சிக்கு துவக்கம். அக்டோபர் 19, 1987இல் - கருப்பு திங்களில் மற்றொரு பிரபல வீழ்ச்சி ஏற்பட்டது. கருப்பு திங்களில், ஐந்து வருடம் தொடர்ந்து வளர்ந்ததை அடுத்து டோ ஜோன்ஸ் 22.6% வீழ்ச்சியுற்றது. இந்த நிகழ்ச்சி அமெரிக்காவை மட்டும் உலுக்கவில்லை, உலகம் முழுவதையும் விரைவாக பரவி பாதித்தது. அதனால் அக்டோபர் இறுதியில், ஆஸ்திரேலியாவில் உள்ள பங்குச் சந்தைகள் 41.8%, கனடாவில் 22.5%, ஹாங்காங்கில் 45.8% மற்றும் கிரேட் பிரிட்டனில் 26.4% வீழ்ச்சியை சந்தித்தன. "பிளாக் மண்டே" மற்றும் "பிளாக் டியூஸ்டே" ஆகிய பெயர்கள் அக்டோபர் 28-29, 1929 க்கும் பயன்படுத்தப்பட்டன, அதனைத் தொடர்ந்து 1929இன் பங்குச் சந்தை வீழ்ச்சி பெற்ற முதல் நாளில் டெரிபிள் தேஸ்டே ஏற்பட்டது. 1987இல் ஏற்பட்ட வீழ்ச்சியால் சில புதிர்கள் ஏற்பட்டன - அந்த மாபெரும் அடியை எந்த செய்தியோ சம்பவமோ முன்னறிவிக்கவில்லை, அந்த சிதைவுக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் நவீன பொருளியல் பற்றிய முக்கியமான சந்தேகங்களை ஏற்படுத்தியது, குறிப்பாக, மனித நடத்தை பற்றிய பகுத்தறிவுக் கோட்பாடு, சந்தை மாற்றம் பற்றியக் கோட்பாடு மற்றும் சந்தை தீவிரம் குறித்த கருத்துக்கோள். வீழ்ச்சியடைந்து சில காலம் கழித்து, பங்குச் சந்தைகளில் வர்த்தகங்கள் உலகளவில் நிறுத்திவைக்கப்பட்டன, ஒரே நேரத்தில் சந்தையின் கணினிகள் பல வகையான வர்த்தகங்களை பெற்றதால் செயல்படவில்லை. இந்த நிறுத்தம் பெடரல் ரிசர்வ் அமைப்பு மற்றும் பல நாடுகளின் மத்திய வங்கிகள் நிதிச் சிக்கல் உலகெங்கும் பரவாதபடி கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தன. அமெரிக்காவில் SEC ஐ அனுமதித்து புதிய கட்டுப்பாடுகளையும் பங்குச் சந்தையில் புகுத்தி கருப்பு திங்களின் நிகழ்வு மீண்டும் நிகழாதபடி முயற்சித்தது. அதிக துல்லியத்டுடனும் கட்டுப்பாடுள்ள விதத்திலும் பங்குச் சந்தைகளின் மிகப்பெரிய வர்த்தக தொகுதிகளைக் கையாளக் கூடிய விதத்தில் கணினி அமைப்புகள் மேம்படுத்தப்பட்டன. மார்ஜின் தேவைகளை SEC புதுப்பித்து அதன் மூலம் பொதுவான பங்குகளின் கரைதல்தன்மை, பங்கு தேர்வுகள் மற்றும் எதிர்கால சந்தை ஆகியவற்றை மாற்றியமைத்தது. நியுயார்க் பங்குச் சந்தை மற்றும் சிகாகோ மெர்கண்டைல் எக்ஸ்சேஞ்ச் ஆகியவை சர்கியூட் பிரேக்கர் என்ற விஷயத்தை அறிமுகப்படுத்தின. ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு புள்ளிகள் சருக்கினால் சர்கியூட் பிரேக்கர் வர்த்தகத்தை நிற்கச் செய்யும்.

  • நியுயார்க் பங்குச் சந்தை (NYSE) சர்கியூட் பிரேக்கர்கள்[15]
% இறக்கம் இறங்கிய நேரம் வர்த்தகம் மூடப்படுவது
10% இறக்கம் 2PM மணிக்கு முன் ஒரு மணி நேர நிறுத்தம்
10% இறக்கம் 2PM - 2:30PM அரை-அரை மணிநேர நிறுத்தம்
10% இறக்கம் 2:30PM மணிக்கு மேல் சந்தை தொடர்ந்து திறந்துள்ளது
20% இறக்கம் 1PMமணிக்கு முன் இரண்டு மணிநேரங்களுக்கு மூடப்படுகிறது
20% இறக்கம் 1PM - 2PM ஒரு மணிநேரத்துக்கு மூடப்படுகிறது
20% இறக்கம் 2PM மணிக்கு மேல் இந்த நாள் முடிவடைந்தது
30% இறக்கம் நாளின் எந்த நேரத்திலும் இந்த நாள் முடிவடைந்தது

பங்குச் சந்தை குறியீடு

[தொகு]

சந்தையில் விலைகளின் மாற்றங்கள் அல்லது சந்தையின் ஒரு பகுதியின் மாற்றம் விலைக் குறியீடுகளில் பிடிக்கப்பட்டு அது பங்குச் சந்தை குறியீடூகள் என அழைக்கப்படுகிறது, எடு., S&P, FTSE மற்றும் Euronext குறியீடுகள். பங்கு குறியீட்டுக்கு எந்த அளவுக்கு பங்காற்றியுள்ளது என்பதன் எடையைக் குறிப்பிடும் சந்தை முதலீடு எப்போதும் குறியீடாக கணக்கிடப்படும். குறியீட்டின் அங்கங்களாக உள்ளவை அடிக்கடி பரிசீலிக்கப்பட்டு மாறும் தொழில் சூழலில் பிரதிபலிக்கும் பங்குகளாக சேர்க்கப்படும்/விலக்கப்படும்.

துணை இயக்கக்கூறுகள்

[தொகு]

நிதிக் கண்டுபிடிப்புகள் பல புதிய நிதி இயக்கங்களை கொண்டுள்ளது, அதனால் அளிக்கப்படும் பணங்கள் அல்லது மதிப்புகள் பங்குகளின் விலைகளைச் சாரும். வர்த்தக நிதி பரிமாற்றங்கள் (ETFகள்), பங்குக் குறியீடு மற்றும் பங்குத் தேர்வுகள், [[பங்கு மாற்று/0}கள், ஒற்றை-பங்கு எதிர்காலங்கள், மற்றும் பங்குக் குறியீட்டு எதிர்காலங்கள்|பங்கு மாற்று/0}கள், ஒற்றை-பங்கு எதிர்காலங்கள், மற்றும் பங்குக் குறியீட்டு எதிர்காலங்கள்]] ஆகியவை சில உதாரணங்களாகும். இந்த இறுதி இரண்டும் எதிர்காலச் சந்தைகளில் வர்த்தகம் செய்யப்படலாம், (அவை பங்குச் சந்தைகளிலும் முதன்மையானவை—அவற்றின் வரலாறு பொருட்கள் எதிர்காலச் சந்தைகளில் பின் பதிவு செய்யப்படும்), அல்லது விற்பனைக்கு நேராக வர்த்தகம் செய்யப்படும். இந்த தயாரிப்புகள் அனைத்தும் பங்குகளில் இருந்து வழி தோன்றுவதால் , அவை சிலநேரங்களில் (கருத்துக்கோளாக) துணைப் பொருட்கள் சந்தையில் வர்த்தகம் செய்யப்படும், அவை (கருத்துக்கோளாக) பங்குச் சந்தையில் விற்பனை செய்யப்பட வேண்டியவை.

ஊக்கப்படுத்தப்பட்ட வியூகங்கள்

[தொகு]

ஒரு வர்த்தகர் தன்னிடம் இல்லாத பங்கை விற்பது விரைவு விற்பனை எனப்படும்; மார்ஜின் கொள்முதல் என்பது கடன் வாங்கப்ப்பட்ட நிதியுடன் பங்கை வாங்க பயன்படுத்தப்படலாம்; அல்லது துணை பொருட்கள் பங்குகளின் பெருமளவைக் கட்டுப்படுத்தி ஒரு கொள்முதல் அல்லது விற்பனைக்கு தேவையான குறைந்த அளவு பணத்தை வாங்குவதாகும்.

விரைவு விற்பனை (ஷார்ட் செல்லிங்)

[தொகு]

விரைவு விற்பனையில் வியாபாரி பங்கை கடன்வாங்கி, (வழக்கமாக தன் வாடிக்கையாளரின் பங்கை வைத்திருக்கும் புரோக்கர் நிறுவனத்திடம் வாங்கி, அல்லது விரைவு விற்பனையாளர்களிடம் தன் பங்குகளை கொடுத்து வைத்திருப்பது) அதனை சந்தையில் விற்பது, அதாவது விலை குறையும் என்கிற எண்ணத்தில் செய்தல். வர்த்தகர் அதே பங்கை மீண்டும் வாங்கி, அந்த குறிப்பிட்ட இடைப்பட்ட நேரத்தில் விலை குறைந்திருந்தால் அல்லது அது ஏறியிருந்தால் பணம் கூடியிருக்கும். பங்கை மீண்டும் வாங்கும் விரைவு நிலைக்கு "ஒரு விரைவு நிலையைப் பிடித்தல்" எனப் பெயர். இந்த யுக்தி பங்கின் விலையை வேண்டும் என்றே குறைக்க வியாபாரிகள் செய்யும் தந்திரமாகவும் பயன்படும். எனவே பல சந்தைகள் விரைவு விற்பனையைத் தடுத்து அல்லது எப்போது ஒரு பங்கு விரைவு விற்பனை செய்யப்பட வேண்டும் எப்ன்பதையும் கட்டுப்படுத்தும். குறுட்டுத்தனமாக விரைவு விற்பனை செய்வது சட்டத்துக்கு எதிரானது, அது (எல்லா) பங்குச் சந்தைகளிலும் இல்லை.

மார்ஜின் வாங்கல்

[தொகு]

மார்ஜின் வாங்கலில், வர்த்தகர் பணத்தை கடனுக்கு (வட்டிக்கு) ஏற்பாடு செய்து, ஒரு பங்கை வாங்கி அது உயரும் என நம்புவதாகும். பல தொழில் ரீதியான நாடுகளில் கடன்வாங்குதல் பரவலான பங்குகள் மீது என்றால் அதிலும் வர்த்தகர் ஏற்கனவே சிலவற்றை வைத்திருக்கிறார் என்றால், அது மற்ற பங்கு மதிப்பின் குறிப்பிட்ட சத்விகிதத்தின் அதிகப்படி அளவுக்கு ஏற்படலாம். அமெரிக்காவில், பல ஆண்டுகளாக மார்ஜின் தேவைகள் 50%ஆக இருந்தது, (அதாவது, நீங்கள் $1000 முதலீடூ செய்யவேண்டும் என்றால், நீங்கள் $500ஐ செலுத்த வேண்டும், இந்த பராமரிப்பு மார்ஜினில் $500க்கு கீழ் எப்போதும் ஒரு அளவு உண்டு). முதலீட்டாளரின் மொத்த கணக்கு வர்த்தகத்தின் இழப்பை தாங்க முடியவில்லை என்றால் ஒரு மார்ஜின் அழைப்பு ஏற்படுத்தப்படும். (மார்ஜின் பாதுகாப்புகளில் கூடுதல் நிதியில் குறிப்பிட்ட அளவு குறைந்தால், கணக்கின் பங்கை பராமரிக்கத் தேவைபடலாம், அந்நேரத்தில் மார்ஜின் பாதுகாப்பு அல்லது அந்த கணக்குக்கு உட்பட்ட யாருடையதையும் புரோக்கர் நிறுவனம் விற்றுக் கொள்ளலாம், அது கடன் நிலைமையைப் பாதுகாப்பதற்காகச் செய்யப்படுவதாகும். அது போன்ற எந்த திணிக்கப்பட்ட விற்பனைக்கும் முதலீட்டாளரே பொறுப்பு.) மார்ஜின் தேவைகள் சீரமைப்பு (பெடரல் ரிசர்வால் செய்யப்படுவது 1929 வீழ்ச்சிக்கு பின் செயல்படுத்தப்பட்டது. அதற்கு முன் வரை, வாங்கப்படும் பங்குகளின் மொத்த முதலீட்டில் 10 சதவிகிதத்திற்கும் மிகக் குறைவான தொகையை போட்டு வைத்தால் போதும். மற்ற விதிகள் இலவச ரைடிங்: கின் தடையை அது உள்ளிட்டு இருக்கலாம், அதன்மூலம் பங்குகளை முதலில் பெறுவதோடு (அதில் ஒரு மூன்று நாள் கிரேஸ் பீரியட் வழங்கப்பட்டு அதற்கு பங்கு விநியோகிக்கப்பட வேண்டும்), ஆனால் அவற்றை விற்க, (மூன்று நாட்கள் முடிந்தவுடன்) அவற்றின் சிலவற்றை பயன்படுத்துதல், அதன் மூலம் அசல் பணம் வந்து சேர்ந்துவிடும் (பங்குகளின் மதிப்பு இடைக்காலத்தில் அகற்றப்படலாம்).

புதிய வழங்கல்

[தொகு]

பங்கின் உலகளாவிய வழங்கல் மற்றும் பங்கு தொடர்பான விதிகள் மொத்தம் 2004 இல் 505 பில்லியன் டாலர்களாகும், 2003இல் 389பில்லியன் டாலர்களாக 29.8% அதிகரித்தது. அமெரிக்க வழங்குநர்களின் ஆரம்பநிலை பொது விநியோகங்கள் (IPOகள்) 221% அதிகரித்து, 223 வழங்கல்களில் 45பில்லியன் டாலர்கள் அதிகரித்தது, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில் (EMEA) உள்ள IPOகளில் 333% அதிகரித்து, 9 பில்லியன் டாலர் முதல் 39 பில்லியன் டாலர் வரை அதிகரித்தது.

முதலீட்டு யுக்திகள்

[தொகு]

பங்குச் சந்தை பற்றி மக்கள் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புவதில் முக்கியமானவற்றில் ஒன்று, " நான் எப்படி பணத்தை முதலீடு செய்வது?" என்பது தான். பலவகையான அணுகுமுறைகள் உண்டு; இரு அடிப்படை முறைகளாக பிரிக்கப்பட்டவை அடிப்படை பகுப்பாய்வு அல்லது தொழில்நுட்ப பகுப்பாய்வு ஆகும். அடிப்படை பகுப்பாய்வு என்பது SEC பதிவுகள், தொழில் நடைமுறைகள், பொது பொருளாதார சூழல்கள் போன்ற நிதிநிலை அறிக்கைகளில் காணப்படுகிறது. தொழிநுட்ப பகுப்பாய்வு என்பது விளக்கப்படங்கள் மற்றும் அளவுகளடங்கிய நுட்பங்கள் மூலம் விலையை முன்கணித்து, நிறுவனத்தின் நிதி வசதிகளை ஆராய்வதன் மூலம் சந்தையில் விலைகளை ஆராய்தலாகும். தொழிநுட்ப யுக்தியைப் பற்றிய ஒரு எடுத்துக்காட்டு என்பது ஜான் W. ஹென்ரி மற்றும் எட் செய்கோடா ஆகியோரால் பயன்படுத்தப்படும் டிரெண்ட் பின்பற்றல் முறையாகும், அதன்மூலம் விலை வடிவங்கள் பயன்படுத்தப்பட்டு, கடுமையான பண நிர்வகிப்பு ஆபத்துக் கட்டுப்பாடு மற்றும் பிரித்துவிடுதலால் பயன்படுத்தப்படுகிறது.

கூடுதலாக, பலர் குறியீட்டு முறை மூலமே முதலீடு செய்ய விரும்புவர். இந்த முறையில், ஒருவர் முழு பங்குச் சந்தையின் எடையிடப்பட்ட அல்லது எடையற்ற பங்குமதிப்பை வைத்திருக்கலாம், அல்லது பங்குச் சந்தையின் குறிப்பிட்ட பிரிவு மட்டும் வைத்திருக்கலாம் (அதாவது S&P 500 அல்லது வில்ஷைர் 5000 போன்றவை). இந்த யுக்தியின் முக்கிய நோக்கமே பிரிந்திருப்பதை அதிகரிப்பது தான், அதோடு அடிக்கடி செய்யும் வர்த்தகத்தின் வரிகளைக் குறைத்தல், பங்குச் சந்தையின் பொது போக்கை ஓட்டுத போன்றவை (அமெரிக்காவில் அது இரண்டாம் உலகப் போரில் இருந்து, வருடத்துக்கு 10% என சராசரியாகி, வருடத்தில் ஒருமுறை தொகுக்கப்பட்டு வருகிறது).

வரிவிதிப்பு

[தொகு]

தேசிய அல்லது மாநில சட்டத்தின்படி, நிதி கட்டாயநிலைகளின் முக்கிய வரிசையாக முதலீட்டு இலாபங்களுக்கு வரி விதிக்கப்படுகிறது. பரிவர்த்தனைகளுக்காக, இலாபபங்குகளுக்காக மற்றும் பங்குச் சந்தையில் முதலீட்டு இலாபங்களுக்கு மாநிலத்தால் வரிகள் விதிக்கப்படுகின்றன, அது குறிப்பாக பங்குச் சந்தைகளில் செயல்படுத்தப்படும். நிதி கட்டாயங்களால் அவை சட்ட எல்லைக்கு உட்பட்டு மாறுபட்டாலும், மற்ற காரணங்களுக்காக, விதிக்கப்பட்ட வரி பங்கு விலையில் உள் இணைக்கப்பட்டிருக்கும் எனக் கருதப்படுகிறது, நிறுவனங்கள் மாநிலங்களுக்கு பல வரிகளை செலுத்தினாலும், அல்லது அந்த வரி அற்ற பங்குச் சந்தை செயல்பாடுகள் பொருளாதார வளர்ச்சிக்காகவே பயன்படுத்தப்படுகிறது.

பங்குச் சந்தை இடர் மேலாண்மை

[தொகு]

வணிக நிறுவனத்தின் நோக்கம்

[தொகு]

ஒரு வணிக நிறுவனம், தன்னிடத்தில் முதலீடு செய்திருக்கும் பங்குதாரர்களின் பங்கின் மதிப்பை மென்மேலும் அதிகரிக்கச் செய்வதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டுக்கு உயர்ந்தபட்ச வருமானத்தை எதிர்பார்ப்பதும் இயல்பான ஒன்றுதான். இந்த வருமானத்துக்கும் பங்குச்சந்தையில் நாம் எதிர்கொள்ள வேண்டிய இடர்களுக்கும் ஒரு நேர் விகித உறவு இருக்கிறது. அதாவது அதிக இடர் இருந்தால் அங்கே அதிக இலாபம் கிட்ட வாய்ப்பு உள்ளது. ஒருவர் அதிக இடரை விரும்பவில்லையெனில் அவருக்குக் குறைந்த வருமானமே கிட்டும்.

மேலும் பார்க்க

[தொகு]
  • இருப்பு நிலைக்குறிப்பு
  • டெட் கேட் பவுன்ஸ்
  • நாஸ்டாக்
  • நாஸ்டாக்-100
  • நிதிச் சந்தைகளின் மாதிரி மற்றும் பகுப்பாய்வுகள்
  • பங்குதாரரின் பங்கு
  • ஸ்லிப்பேஜ்
  • பத்திர பரிவர்த்தனை
  • பங்கு முதலீட்டாளர்
  • பங்குச் சந்தை குறியீடு
  • பங்கு சந்தை சுழற்சிகள்
  • பங்குச் சந்தை பப்புள்


  • அமெரிக்க பாதுகாப்பு பத்திரங்கள் ஒழுங்கு
  • வியாபாரி (நிதி)

பட்டியல்

[தொகு]
  • கணக்கிடும் தலைப்புகளின் பட்டியல்
  • பொருளாதார தலைப்புகளின் பட்டியல்
  • பொருளாதார வல்லுநர்களின் பட்டியல்
  • நிதி தலைப்புகள் பட்டியல்
  • மேலாண்மை தலைப்புகள் பட்டியல்
  • சந்தைப்படுத்தல் தலைப்புகள் பட்டியல்
  • பின்னடைவுகளின் பட்டியல்
  • பங்குச் சந்தைகளின் பட்டியல்
  • பங்குச் சந்தை வீழ்ச்சிப் பட்டியல்கள்
  • பங்குச் சந்தை குறியீடுகள் பட்டியல்

குறிப்புதவிகள்

[தொகு]
  1. {http://seekingalpha.com/article/99256-world-equity-market-declines-25-9-trillion}
  2. http://www.bis.org/publ/qtrpdf/r_qa0812.pdf
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-25. பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.
  4. முர்ரே ஸேய்ல், "டச்சாக மாறும் ஜப்பான்", லண்டன் புத்தக ஆய்வுகள் XXIII.7, April 5, 2001
  5. "உலக சந்தைகள் கழகம் மாதாந்திர YTD தரவு". Archived from the original on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2010-02-09.
  6. Hagstrom, Robert G. (2001). The Essential Buffett: Timeless Principles for the New Economy. New York: John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-22703-X.
  7. Cutler, D. Poterba, J. & Summers, L. (1991). "Speculative dynamics". Review of Economic Studies 58: 520–546. https://archive.org/details/sim_review-of-economic-studies_1991-05_58_195/page/520. 
  8. Mandelbrot, Benoit & Hudson, Richard L. (2006). The Misbehavior of Markets: A Fractal View of Financial Turbulence, annot. ed. Basic Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0465043577.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  9. Taleb, Nassim Nicholas (2008). Fooled by Randomness: The Hidden Role of Chance in Life and in the Markets, 2nd ed. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1400067936.
  10. Tversky, A. & Kahneman, D. (1974). "Judgement under uncertainty: heuristics and biases". Science 185: 1124–1131. doi:10.1126/science.185.4157.1124. 
  11. ஸ்டீபன் மோரிஸ் மற்றும் ஹியுன் சோங் ஷின், பொருளாதாரக் கொள்கையின் ஆக்ஸ்போர்டு ஆய்வு, vol. 15, no 3, 1999.
  12. செர்ஜி பெர்மின்வ், டிரெண்டோகிரசி மற்றும் பங்குச் சந்தை நடைமுறைப்படுத்தல்கள் (2008, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4357-5244-3).
  13. http://www.cnbc.com/id/27166818
  14. 14.0 14.1 14.2 [28]
  15. Chris Farrell. "Where are the circuit breakers". Archived from the original on 2008-10-28. பார்க்கப்பட்ட நாள் 2008-10-16.

கூடுதல் வாசிப்பு

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]