பள்ளிக் கால அட்டவணை
பள்ளிக் கால அட்டவணை (school timetable) என்பது வகுப்பறைகள் மற்றும் பள்ளி நாளின் பாடவேளையின் போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒருங்கிணைக்கும் காலிகை ஆகும். பாடங்கள் மற்றும் வகுப்பறைகளின் வகை (உதாரணமாக, அறிவியல் ஆய்வகங்கள்) ஆகியவை இதனைத் தீர்மானிக்கும் மற்ற காரணிகள் ஆகும்.
1970 களில் இருந்து, செய்பணி ஆய்வியல் மற்றும் மேலாண்மை அறிவியலில் ஆராய்ச்சியாளர்கள் பள்ளி கால அட்டவணைச் சிக்கலுக்கு கணினிமயமாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.
பள்ளி கால அட்டவணையின் விளக்கம் மற்றும் நோக்கம்
[தொகு]ஒரு பள்ளி கால அட்டவணையில், வழங்கப்படும் படிப்புகளின் முழுமையான தொகுப்பு, அத்துடன் வழங்கப்படும் ஒவ்வொரு பாடத்தின் நேரம் மற்றும் இடம் ஆகியவை அடங்கும். பள்ளி கால அட்டவணையின் நோக்கங்கள், ஆசிரியர்கள் எப்போது, எங்கே ஒவ்வொரு பாடத்தையும் கற்பிக்க வேண்டும் என்பதனையும் முரண்பாடுகள் இல்லாது மாணவர்கள் கற்பதற்கும் வழிவகை செய்வதாகும்.[1]
வரலாறு
[தொகு]செய்பணி ஆய்வியல் மற்றும் மேலாண்மை அறிவியல் முறைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, பள்ளிக் கால அட்டவணைகள் மனிதர்களால் கைமுறையாக உருவாக்கப்பட்டது. ஹோஷினோ மற்றும் ஃபேப்ரிஸ் ஆகியோர் பின்வருமாறு பள்ளிக் கால அட்டவணை பற்றி குறிப்பிடுகிறார்கள், "பல பள்ளி நிர்வாகிகளுக்குத் தெரியும், ஒரு கால அட்டவணையை உருவாக்குவது என்பது நம்பமுடியாத அளவிற்கு கடினமானது, பல தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் ஆகியவற்றை சமநிலையில் வைத்து உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. கால அட்டவணைகள் கைமுறையாக உருவாக்கப்படும் போது, அதில் 10% கணிதம் மற்றும் 90% அரசியல் கலந்திருக்கும்,[2] இவ்வாறு கைமுறையாக உருவாக்கும் போது பிழைகள், திறமையின்மை மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மனக்கசப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது." [1]
தொடக்கப் பள்ளி போன்ற எளிமையான பள்ளி கால அட்டவணைக்கு, கீழ்க்கானும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்:[3]
- ஒரு ஆசிரியர் ஒரே நேரத்தில் இரண்டு பாடங்களைக் கற்பிக்க முடியாது
- எந்த வகுப்பறையிலும் ஒரே நேரத்தில் இரண்டு படிப்புகள் படிக்க முடியாது
உயர்நிலைப் பள்ளி
[தொகு]உயர்நிலைப் பள்ளி கால அட்டவணைகள் பல்கலைக்கழக கால அட்டவணைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. முக்கிய வேறுபாடு என்னவென்றால், உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்கள் பள்ளி நாளின் ஒவ்வொரு மணிநேரமும் கண்காணிக்கப்பட வேண்டும். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பொதுவாகப் பல்கலைக்கழகங்களில் இருப்பதை விட அதிகமான கற்பித்தல் சுமைகளைக் கொண்டுள்ளனர்.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Hoshino, Richard; Fabris, Irene (2020). Hebrard, Emmanuel; Musliu, Nysret. eds. "Optimizing Student Course Preferences in School Timetabling, Proceedings of the 17th International Conference on the Integration of Constraint Programming, Artificial Intelligence, and Operations Research" (in en). Integration of Constraint Programming, Artificial Intelligence, and Operations Research. Lecture Notes in Computer Science (Springer International Publishing): 283–299. doi:10.1007/978-3-030-58942-4_19. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-030-58942-4. https://link.springer.com/chapter/10.1007/978-3-030-58942-4_19. Also available as .pdf: Hoshino & Fabris
- ↑ Burke, Edmund; Erben, Wilhelm, தொகுப்பாசிரியர்கள் (2001). "Practice and Theory of Automated Timetabling III" (in en-gb). Lecture Notes in Computer Science. doi:10.1007/3-540-44629-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0302-9743. https://link.springer.com/book/10.1007/3-540-44629-X.
- ↑ Post, Gerhard; Ahmadi, Samad; Daskalaki, Sophia; Kingston, Jeffrey H.; Kyngas, Jari; Nurmi, Cimmo; Ranson, David (2012-04-01). "An XML format for benchmarks in High School Timetabling" (in en). Annals of Operations Research 194 (1): 385–397. doi:10.1007/s10479-010-0699-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1572-9338. https://doi.org/10.1007/s10479-010-0699-9.
- ↑ Brailsford, Sally C.; Potts, Chris N.; Smith, Barbara M. (1999-12-16). "Constraint satisfaction problems: Algorithms and applications" (in en). European Journal of Operational Research 119 (3): 557–581. பன்னாட்டுத் தர தொடர் எண்:0377-2217. http://cepac.cheme.cmu.edu/pasilectures/henning/EJOR-BrailsfordSmith.pdf.