உள்ளடக்கத்துக்குச் செல்

பூர்ணிமா (இந்தி நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூர்ணிமா தாஸ் வர்மா[1]
பிறப்புமெகர்பனோ முகமது அலி
(1934-03-02)2 மார்ச்சு 1934
மும்பை, பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
(நவீன மும்பை, மகாராட்டிரம், இந்தியா)
இறப்பு14 ஆகத்து 2013(2013-08-14) (அகவை 79)
இந்தியா
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
  • சையத் சௌகத் ஹாஷ்மி (divorce 1947)
  • பகவான் தாஸ் வர்மா
    (தி. 1954; இற. 1962)
பிள்ளைகள்1
உறவினர்கள்மகேசு பட் (மருமகன்)
இம்ரான் ஹாஷ்மி (பேரன்)[2]
பூர்ணிமா தாஸ் வர்மா

பூர்ணிமா தாஸ் வர்மா (Purnima Das Verma) (பிறப்பு மெகர்பனோ முகமது அலி; 2 மார்ச் 1934-14 ஆகஸ்ட் 2013) ஓர் இந்திய நடிகையாவார். இவர் முக்கியமாக இந்தி மொழி படங்களில் பணியாற்றினார்.[3][4][5] இவர் இயக்குநர் மகேசு பட்டின் அத்தையும் மற்றும் நடிகர் இம்ரான் ஹாஷ்மியின் பாட்டியும் ஆவார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

மெகர்பனோ முகமது அலி 1934 மார்ச் 2 அன்று பிறந்தார். இவரது மூத்த சகோதரி சிரின், இயக்குநர்கள் மகேசு பட் மற்றும் முகேஷ் பட் ஆகியோரின் தாயார் ஆவார்.[6] மெகெர்பனோவின் முதல் கணவர் சையத் சௌகத் ஹாஷ்மி ஒரு பத்திரிகையாளர் ஆவார். அவர் இந்தியப் பிரிவினை போது பாக்கித்தானுக்கு குடிபெயர்ந்தார். இந்த முதல் திருமணத்திலிருந்து இவருக்கு அன்வர் ஹாஷ்மி (இம்ரான் ஹாஷ்மியின் தந்தை) பஹரோன் கே மஞ்சில் (1968) படத்தில் பரீதா ஜலாலுக்கு கதாநாயகனாக நடித்தார்.[7] 1954 ஆம் ஆண்டில், திரைப்படத் தயாரிப்பாளர் பகவான் தாஸ் வர்மா என்பவரை இரண்டாவது முறையாக மணந்தார். மெகெர்பனோ திரைப்படத் துறையில் நுழைந்தபோது 'பூர்ணிமா' என்ற திரைப் பெயரைப் பெற்றார்.

தொழில் வாழ்க்கை

[தொகு]

பூர்ணிமா 80க்கும் மேற்பட்ட பாலிவுட் படங்களில் நடித்தார்.[7] இவர் 40களின் பிற்பகுதி முதல் 50கள் வரை இந்தித் திரைப் படங்களில் பல படங்களில் தோன்றினார். இதில் பதங்கா (1949) ஜோகன் (1950) சாகாய் (1951) ஜல் (1952) ஔரத் (1953) அஜய் தேவ்கானின் முதல் படமான பூல் அவுர் காண்டே, மகேசு பட் இயக்கத்தில் சஞ்சய் தத்தின் நாம் படத்தில் பாட்டி வேடம் [8] ஜன்ஜீர் படத்தில் அமிதாப் பச்சனின் தாயார் போன்ற பாத்திரத்தில் நடித்தார்.

இறப்பு

[தொகு]

பூர்ணிமா தனது வாழ்க்கையின் கடைசி சில ஆண்டுகளில் ஆல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு 14 ஆகஸ்ட் 2013 அன்று இறந்தார்.[7][9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bollywoodirect (13 August 2018). "Remembering yesteryear Hindi film actress Purnima on her 5th death anniversary". Medium. Medium (website). பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  2. "My wife and my audience, both took time to understand me: Emraan Hashmi - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. "Emraan Hashmi shares a beautiful picture of his grandmother, actress Purnima, on her death anniversary". timesnownews.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). India: டைம்ஸ் நவ். 14 August 2018. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  4. "Emraan Hashmi's grandmother passes away - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (in ஆங்கிலம்). India. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  5. Bollywoodirect (13 August 2018). "Remembering yesteryear Hindi film actress Purnima on her 5th death anniversary". Medium. Medium (website). பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  6. "ETimes BFFs: Did you know Faraaz producer Sahil Saigal is Alia Bhatt's cousin? Check out the long and complicated filmy lineage of the Bhatts!".
  7. 7.0 7.1 7.2 Bollywoodirect (13 August 2018). "Remembering yesteryear Hindi film actress Purnima on her 5th death anniversary". Medium. Medium. பார்க்கப்பட்ட நாள் 3 March 2019.
  8. "Emraan Hashmi's grandmother passes away - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 July 2021.
  9. "कभी बॉलीवुड पर राज करती थी ये एक्ट्रेस, आर्थिक तंगी के कारण घर तक पड़ा था बेचना". amarujala.com. 14 August 2017. பார்க்கப்பட்ட நாள் 27 January 2021.