பெனிக்னோ அக்கீனோ III
பெனிக்னோ அக்கீனோ III Benigno Aquino III | |
---|---|
2015 இல் அக்கீனோ | |
15-வது பிலிப்பீனிய அரசுத்தலைவர் | |
பதவியில் சூன் 30, 2010 – சூன் 30, 2016 | |
துணை அதிபர் | செசோமார் பினை |
முன்னையவர் | குளோரியா மகபகல்-அர்ரொயோ |
பின்னவர் | ரொட்ரிகோ துதெர்த்தே |
உள்ளாட்சி அரசின் செயலாளர் | |
பதவியில் சூன் 30, 2010 – சூலை 9, 2010 | |
முன்னையவர் | ரொனால்டோ பூனோ |
பின்னவர் | யெசி ரொப்ரெடோ |
பிலிப்பீன்சின் மேலைவை உறுப்பினர் | |
பதவியில் சூன் 30, 2007 – சூன் 30, 2010 | |
பிலிப்பீனிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் | |
பதவியில் நவம்பர் 8, 2004 – பெப்ரவரி 21, 2006 | |
தார்லாக்கின் 2-ஆம் மாவட்டத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் சூன் 30, 1998 – சூன் 30, 2007 | |
முன்னையவர் | ஒசே யாப் |
பின்னவர் | ஒசே யாப் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பெனிக்னோ சிமியோன் கொயுவான்கோ அக்கீனோ III பெப்ரவரி 8, 1960 மணிலா, பிலிப்பீன்சு |
இறப்பு | சூன் 24, 2021 குவிசோன் நகரம், பிலிப்பீன்சு | (அகவை 61)
அரசியல் கட்சி | தாராண்மைவாதக் கட்சி |
பெற்றோர் | பெனிக்னோ அக்கீனோ இளை. கொரசோன் அக்கினோ |
முன்னாள் கல்லூரி | அத்தேனியோ டி மணிலா பல்கலைக்கழகம் |
கையெழுத்து | |
பெனிக்னோ அக்கீனோ III (Benigno Simeon Cojuangco Aquino III[1][2]; பெப்ரவரி 8, 1960 – சூன் 24, 2021) என்பவர் ஒரு பிலிப்பீனிய அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் 15-வது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்தார்.[3][4] அக்கீனோ குடும்பத்தின் 4-வது தலைமுறை அரசியல்வாதியான பெனிக்னோ, முன்னாள் அரசுத்தலைவர் கொரசோன் அக்கினோவின் மகன் ஆவார். இவர் 1998 முதல் 2010 வரை நாடாளுமன்றம், மற்றும் மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
2009 செப்டம்பர் 9 இல் தனது தாயார் கொரசோன் அக்கினோவின் இறப்பை அடுத்து, 2010 இல் நடந்த அரசுத்தேர்தல் தேர்தலில், பெனிக்னோ அகீனோ போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 2016 சூன் 30 இல், இவரது பதவிக்காலம் முடிவடைந்தது. இவரது பதவிக்காலத்தில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மிக உயர்ந்த நிலையை எட்டியது. பிலிப்பீன்சு அக்காலத்தில் "ஆசியாவின் உயரும் புலி"[6] என்று அழைக்கப்பட்டது; எனினும், சிறப்பு நிர்வாகப் படையின் 44 உறுப்பினர்களைக் கொன்ற இராணுவ நடவடிக்கை போன்ற சில பிரச்சினைகள் குறித்து அவரது நிர்வாகம் விமர்சனங்களை சந்தித்தது.[7] தென்சீனக் கடலில் சீனாவின் உரிமைகோரல்களை செல்லாததாக்கவும், இப்பகுதியில் தனது சொந்த நாட்டின் உரிமைகோரல்களை வலியுறுத்தியும் இவரது நிர்வாகம் நிர்ந்தர நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததில், பிலிப்பீன்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்து.[8]
2013 இல், டைம் இதழ் பெனிக்னோ அக்கீனோவை உலகில் மிகவும் தாக்கமேற்படுத்திய 100 நபர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்திருந்தது.[9]
பெனிக்னோ அக்கீனோ 2021 சூன் 24 இல் தனது 61-வது அகவையில் காலமானார்.[10] இவரது இறப்புக்கான காரணம் சிறுநீரக நோய், இரண்டாம் நிலை நீரிழிவு நோய் எனக் கூறப்பட்டது.[11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Senator Benigno S. Aquino III". Senate of the Philippines. Archived from the original on February 9, 2010.
- ↑ Quezon, Manuel L.. (June 19, 2010) Trivia on Aquino and Binay. ABS-CBN News. Retrieved on January 23, 2012.
- ↑ "Aquino promises justice as Philippines president – Yahoo! News". 2010-06-09. Archived from the original on 2010-06-15.
- ↑ "Congress final tallies". INQUIRER.net. 2010-06-08. Archived from the original on 2010-08-22.
- ↑ Noynoy Aquino to take oath at the Luneta grandstand | GMA News Online. Gmanetwork.com (June 15, 2010). Retrieved on January 23, 2012.
- ↑ "PNoy ushered Philippine economy to investment grade rating: PSE". ABS-CBN News. பார்க்கப்பட்ட நாள் June 24, 2021.
- ↑ "Ex-Philippine President Benigno Aquino dies at 61". Yahoo. June 24, 2021.
- ↑ Solomon, Feliz (24 June 2021). "Benigno Aquino III, Former Philippine President Who Resisted China, Dies at 61". Wall Street Journal. https://www.wsj.com/articles/benigno-aquino-iii-former-philippine-president-who-resisted-china-dies-at-61-11624523548.
- ↑ "The 100 Most influential people in the world". Time. April 18, 2013. http://time100.time.com/2013/04/18/time-100/slide/noynoy-aquino/.
- ↑ "Former Philippines President Benigno 'Noynoy' Aquino dies at 61". Japan Today. June 24, 2021 இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210624072941/https://japantoday.com/category/world/philippines'-ex-president-'noynoy'-aquino-dies1?comment-order=oldest.
- ↑ Morales, Neil; Lema, Karen (June 24, 2021). "Ex-Philippine President Benigno Aquino dies of renal failure at 61". Reuters. https://www.reuters.com/world/asia-pacific/former-philippine-president-benigno-aquino-dies-hospital-sources-2021-06-24/.
- ↑ Aguilar, Krissy (June 24, 2021). "Ex-president Noynoy Aquino died 'peacefully in his sleep' – family". Philippine Daily Inquirer இம் மூலத்தில் இருந்து June 24, 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210624081009/https://newsinfo.inquirer.net/1450643/ex-president-noynoy-aquino-died-peacefully-in-his-sleep-family.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம்
- அதிகாரப்பூர்வத் தரவுகள் in the website of the Senate of the Philippines