உள்ளடக்கத்துக்குச் செல்

போலந்துக் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போலந்து
பிற பெயர்கள் போலந்துக் குடியரசின் கொடி
பயன்பாட்டு முறை தேசியக் கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 5:8
ஏற்கப்பட்டது ஆகத்து 1, 1919 (முதல்)
சனவரி 31, 1980 (தற்போதைய)
வடிவம் ஒரு கிடைநிலை இருநிறம் (வெள்ளையும், சிவப்பும்)
கொடியின் வேறுபாடு போலந்து
பிற பெயர்கள் மரபுச் சின்னத்தோடு கூடிய போலந்துக் குடியரசின் கொடி
பயன்பாட்டு முறை அரச கொடியும் குடிசார் மற்றும் அரச கப்பற்கொடியும் Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 5:8
ஏற்கப்பட்டது 1919; கடைசித் திருத்தம் 1990
வடிவம் ஒரு கிடைநிலை இருநிறம் (வெள்ளையும், சிவப்பும்) வெள்ளைப் பட்டையில் மரபுச் சின்னத்தைக் கொண்ட கொடி

போலந்துக் கொடி சமமான அகலம் கொண்ட இரண்டு கிடைப் பட்டைகளைக் கொண்டது. மேலுள்ள பட்டை வெள்ளை நிறமானது, கீழுள்ளது சிவப்பு நிறமானது. இவ்விரு நிறங்களும் போலந்தின் அரசியல் சட்டத்தில் தேசிய நிறங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. இக்கொடியின் ஒரு வேறுபாடாக, வெள்ளைப் பட்டையின் நடுவில் தேசிய மரபுச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி வெளிநாடுகளிலும், கடலிலும் பயன்படுத்துவதற்கு சட்டப்படி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு முனையில் கவைவால் வடிவம் கொண்ட இதே போன்ற கொடி போலந்தின் கடற்படைக் கொடியாகப் பயன்படுத்தப்படுகின்றது.

1831 ஆம் ஆண்டில் வெள்ளையும், சிவப்பும் தேசிய நிறங்களாக உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்நிறங்கள் "போலிய-லித்துவேனியப் பொதுநலவாயத்தின்" உறுப்பு நாடுகள் இரண்டினதும் மரபுச் சின்னங்களில் இருந்து பெறப்பட்டவை. போலந்தின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறப் போலந்துக் கழுகுச் சின்னமும், லித்துவேனியாவின் மரபுச் சின்னத்தில் சிவப்பு நிறக் கேடயத்தில் வெள்ளை நிறத்தில் பிரபு ஒருவர் குதிரையில் சவாரி செய்யும் தோற்றமும் இருந்தன. 1919 இல் போலந்தின் தேசியக் கொடி அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 2004 ஆம் ஆண்டிலிருந்து போலந்தின் கொடிநாள் மே 2 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றம், சனாதிபதி மாளிகை போன்ற உயர் அதிகாரம் கொண்ட கட்டிடங்களில் தேசியக் கொடி தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படுகிறது. பிற நிறுவனங்களும், பல போலந்து மக்களும் தேசிய விடுமுறை நாட்களிலும், பிற தேசிய முக்கியத்துவம் கொண்ட நாட்களிலும் தேசியக் கொடியைப் பறக்க விடுகின்றனர். அவமதிப்புக்கு உள்ளாக்காதவரை மரபுச் சின்னம் பொறிக்கப்படாத தேசியக் கொடியைப் பயன்படுத்துவதைத் தற்போதைய போலந்தின் அரசியல் சட்டம் தடை செய்யவில்லை.

கிடையாக வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட வடிவமைப்பு ஒப்பீட்டளவில் பரவலாகக் காணப்படுகின்றது. போலந்தோடு தொடர்பில்லாத பல கொடிகள் இதை ஒத்ததாகக் காணப்படுகின்றன. இந்தோனேசியா, மொனாக்கோ ஆகிய நாடுகள் மேலே சிவப்பு நிறத்தையும், கீழே வெள்ளை நிறத்தையும் கொண்டுள்ளன. போலந்திலும் தேசிய வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்ட பல கொடிகள் தேசிய நிறங்களைக் கொண்டுள்ளன.

வடிவமைப்பு

[தொகு]

சட்ட அடிப்படை

[தொகு]

1997 இன் போலந்துக் குடியரசின் அரசியல் சட்டத்திலும்;[1] 1980 இன், போலந்துக் குடியரசின் மரபுச் சின்னம், நிறங்கள், தேசிய கீதம் மற்றும் அரச முத்திரைகள் சட்டத்திலும் (மரபுச் சின்னங்கள் சட்டம்);[2] போலந்துக் குடியரசின் நிறம், கொடி ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன. தேசியச் சின்னங்கள் தொடர்பான சட்டங்கள் முழுமை பெறவில்லை. மரபுச் சின்னங்கள் சட்டம் பலமுறை திருத்தப்பட்டதுடன், பல்வேறு நிறைவேற்று அரசாணைகளையும் இச்சட்டம் குறிப்பிடுகின்றது. ஆனால், இந்த அரசாணைகளிற் சில இன்னும் வெளியாகவில்லை. அத்துடன், சட்டங்களில் தவறுகளும், விடுபடல்களும், முரண்பாடுகளும் காணப்படுவதால், குழப்பமாக உள்ளதுடன், பல்வேறு விளக்கங்களுக்கும் இடமளிப்பதாக உள்ளது.[3]

தேசிய நிறங்கள்

[தொகு]

அரசியல் சட்டத்தின் அத்தியாயம் 1, பிரிவு 28, பத்தி 2 இல் போலந்தின் தேசிய நிறங்கள் வெள்ளையும், சிவப்பும் எனக் குறிக்கப்பட்டுள்ளது.[1] மரபுச் சின்னங்கள் சட்டத்தின் 4 ஆம் பிரிவு இது பற்றி மேலும் விளக்குகிறது. இதில், கிடையானவையும், ஒன்றுக்கொன்று இணையானவையும், சமமான அகலம் கொண்டவையுமான பட்டிகளாக இவை அமைய வேண்டும் எனவும் மேலே வெள்ளையும், கீழே சிவப்பும் இருக்கவேண்டும்[2] எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. நிறங்களைக் நிலைக்குத்தாகக் காட்சிப்படுத்தவேண்டி இருந்தால், வெள்ளை நிரம் பார்ப்பவருக்கு இடப் பக்கத்தில் இருக்கவேண்டும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Konstytucja Rzeczypospolitej Polskiej
  2. 2.0 2.1 Ustawa o godle... (1980, with amendments)
  3. Informacja o wynikach kontroli... (NIK, 2005)