உள்ளடக்கத்துக்குச் செல்

மயக்கம் என்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மயக்கம் என்ன
இயக்கம்செல்வராகவன்
கதைசெல்வராகவன்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்பு
ஒளிப்பதிவுராம்ஜி
கலையகம்ஓம் புரடக்சன்ஸ்
வெளியீடு26 அக்டோபர் 2011
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மயக்கம் என்ன, 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் தேதி வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைத்திருக்கின்றார்.

கதை

[தொகு]

கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு கட்டற்ற படப்பிடிப்பாளர். இவர் தனது பெற்றோர்களை இழந்த நிலையில் தனது தங்கையுடன் அவரது நண்பர்களின் உதவியோடு வாழ்க்கையை நடத்தி வரும் ஒரு இளைஞன். ஒரு நாள் இவரது நெருங்கிய நண்பர் சுந்தர் அவரது பெண் தோழியான யாமினியை (ரிச்சா) இவருக்கு அறிமுகம் செய்ய , அந்த பொழுதிலிருந்தே இருவரும் சண்டையிட்டு கொள்ள , மோதலில் தான் காதல் ஆரம்பிக்கும் என்பதற்கேற்ப ரிச்சாவுக்கு கார்த்திக் மீது காதல் மலர்கிறது. மாதேஷ் கிருஷ்ணசாமி என்ற வன புகைப்படப்பிடிப்பாளர் போல் வரவேண்டும் என்ற இலட்சிய வெறியோடு கார்த்திக் அவரிடம் அணுகும் பொது அவர் அதை உதாசினப்படுத்தி, கார்த்திக் எடுத்த ஒரு பறவையின் புகைப்படத்தை தன்னுடையது என்று பிரபல்யப்படுத்திக்கொள்கிறார். கார்த்திக் ரிச்சா காதல் அவர்களின் நண்பர்களுக்கு தெரிய வந்து, இருவருக்கும் திருமணம் செய்துமுடிக்கப்படுகிறது. கூடவே, கார்த்திக்கின் தங்கைக்கும் சுந்தருக்கும் திருமணம் நடக்கிறது.

கார்த்திக் எடுத்த புகைப்படத்தை தன் புகைப்படம் என கூறி விருதினையும் பெறுகிறார் மாதேஷ். இதனால் வெறுப்படையும் கார்த்திக் குடிகாரனாக மாறுகிறார். குடி மயக்கத்தில் மனச்சிதைவு உண்டாகும் கார்த்திக் அனைவரிடமும் வெறுப்பை உண்டாக்குகிறார் . தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாதேஷ், கார்த்திக் எடுத்த புகைப்படத்தை தன்னுடையது என்று விவரிக்கையில் ஆத்திரம் அடையும் கார்த்திக் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கிறார். கர்பிணியான யாமினி பதறியடித்துக்கொண்டு வருகையில் யாமின்யை கார்த்திக் கோபத்தில் தள்ளி விடுகிறார். இதனால் யாமினியின் கரு கலைகிறது. இரத்த வெள்ளத்தில் கிடக்கும் யாமினியை சுந்தரும் மற்ற நண்பர்களும் மருத்துவமனையில் சேர்கின்றனர். மூன்று நாட்களும் யாமினியின் ரத்தம் படித்த இடத்தில இருக்கும் கார்த்திக் அதற்காக வருந்துகிறார், ஆனால் அதை யாமினி ஏற்கவில்லை, அதனுடன் கார்த்திக்கிடம் பேசுவதை நிறுத்திவிடுகிறார். இதனிடையில் கார்த்திக்கின் புகைப்படம் ஒன்றை யாமினி குமுதம் இதழில் குடுக்க discovery நிறுவனம் எதேச்சையாக பார்க்க கார்த்திக்கிற்கு ஒரு வாய்ப்பு தருகிறது. கார்த்திக் வெற்றிகரமாக அவர் வாய்ப்பினை பயன்படுத்தி மிகபெரிய இடத்தினை பெறுகிறார். சர்வதேச புகைப்பட விருது நிகழ்ச்சியில் கார்த்திக்கின் புகைப்படமும் மாதேஷின் புகைப்படமும் இறுதி சுற்றுக்கு தேர்வாகிறது. அந்த நிகழ்ச்சியை தொடர் ஒளிபரப்பில் காண்கிறார் யாமினி. கார்த்திக்கின் புகைப்படம் விருதினை தட்டிசெல்கிறது. அந்நிலையில் கார்த்திக் விருதினை பெற்று இதற்கு காரணம் என் நண்பர்கள், இந்த வாழ்வு அவர்களால் வந்தது என்று கூறி விடைபெறுகையில் நின்று, "நன் இங்கே நிற்க காரணம் என் மனைவி யாமினி. இரும்பு பெண் அவள் , என்னால் ஏற்பட்ட எத்தனையோ தாங்கினால். என்று யாமினியை தொலைகாட்சியில் அனைவர்க்கும் காண்பிக்கிறார் கார்த்திக். இரண்டு ஆண்டுகள் பேசாமல் இருந்த யாமிநியிடம் தொலைபேசியில் அழைக்கிறார் கார்த்திக். கார்த்திக்கின் நண்பர்கள் பேசு யாமினி என கூற "ஹலோ " என யாமினி அழைக்க அந்த ஆனந்த "மயக்கம் என்ன "" ,

இசை வெளியீடு

[தொகு]

இசை வெளியீடு 19 செப்டம்பர் 2011 அன்று ரேடியோ மிர்ச்சி வாயிலாக வெளியிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]