உள்ளடக்கத்துக்குச் செல்

மேசர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரசன் வானொலி மீடிறன் வெளியிடும் ஐதரசன் மேசர்

கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வால் செறிவூட்டப்பட்ட மீயலை. ( Microwave Amplification by Stimulated Emission of Radiation ) லேசர் செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் அலைநீளத்திலும் மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்திலும் உள்ளது. 1954 - ஆம் ஆண்டு சாள் டெளன்சு ( Charles Townes )என்ற அமெரிக்க இயற்பியலாளரால் வடிவமைக்கப்பட்டது. இந்த அறிவியல் வேலைக்காக டெள்ன்சுக்கு 1964 - ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1][2][3]

மேசரின் பயன்பாடுகள்

[தொகு]

மேசர் பெருக்கிகள் செறிவு-குறைந்த சைகைகளைப் பெருக்கம் செய்யவும் வானொலியலைத் தொலைநோக்கியிலும் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வானொலியலை விண்ணியல், ரேடார், மீயலை நிறமாலையியல் ஆகிய துறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

ஆதாரம்

[தொகு]

இயல்பியல் களஞ்சியம் -- பக். 63—ப.க. பொன்னுசாமி -- சென்னைப் பல்கலைக்கழகம்—1997 பதிப்பு.

இப்பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட கலைச்சொற்கள்

[தொகு]
  • மேசர் பெருக்கி = Maser Amplifier
  • வானொலியலைத் தொலைநோக்கி = Radio Telescope
  • செயற்கைக்கோள் தகவல் தொடர்பு = Satellite Communication
  • வானொலியலை விண்ணியல் = Radio Astronomy
  • மீயலை நிறமாலையியல் = Microwave Spectroscopy

மேற்கோள்கள்

[தொகு]
  1. Townes, Charles H. (1964-12-11). "Production of coherent radiation by atoms and molecules - Nobel Lecture" (PDF). The Nobel Prize. p. 63. Archived (pdf) from the original on 2020-08-27. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27. We called this general type of system the maser, an acronym for microwave amplification by stimulated emission of radiation. The idea has been successfully extended to such a variety of devices and frequencies that it is probably well to generalize the name - perhaps to mean molecular amplification by stimulated emission of radiation.
  2. American Institute of Physics Oral History Interview with Weber
  3. Mario Bertolotti (2004). The History of the Laser. CRC Press. p. 180. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1420033403.