உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கல் ஜார்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மைக்கல் ஜார்டன்
அழைக்கும் பெயர்எம் ஜே, எயர் ஜார்டன் (Air Jordan)
நிலைபுள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard), சிறு முன்நிலை (Small forward)
உயரம்6 ft 6 in (1.98 m)
எடை216 lb (98 kg)
பிறப்புபெப்ரவரி 17, 1963 (1963-02-17) (அகவை 61)
நியூயார்க் நகரம், நியூயார்க்
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவட கரோலினா பல்கலைக்கழகம்
தேர்தல்3வது overall, 1984
சிகாகோ புல்ஸ்
வல்லுனராக தொழில்1984–2003
முன்னைய அணிகள் சிகாகோ புல்ஸ் (1984-1993, 1995-1998), வாஷிங்டன் விசர்ட்ஸ் (2001-2003)
விருதுகள்* 14x All-Star (1985-1993, 1996-1998, 2002-2003)


மைக்கல் ஜெஃப்ரி ஜார்டன் (Michael Jeffrey Jordan, பிறப்பு - பெப்ரவரி 17, 1963) முன்னாள் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 30.1 புள்ளிகள் எடுத்த ஜார்டன் என். பி. ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் என். பி. ஏ.-இல் 1984 முதல் 2003 வரை விளையாடினார். 1984 முதல் 1993 வரை சிகாகோ புல்ஸ் அணியில் விளையாடி என்.பி.ஏ.-யிலிருந்து விலகினார். ஒரு ஆண்டாக பேஸ்பால் விளையாடி 1995இல் சிக்காகோ புல்ஸ் அணிக்கு திரும்பினார். மொத்தமாக சிக்காகோ புல்ஸ் அணியில் இருக்கும்பொழுது 6 முறையாக என்.பி.ஏ. இறுதிப்போட்டிகளை வென்றுள்ளார்.

1999இல் இரண்டாம் முறையாக விலகினார். 2000இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் அணியை சிறுபான்மை உரிமையாளராகவும் அணியின் தலைவராவும் என்.பி.ஏ. உலகத்துக்கு திரும்பினார். 2001இல் வாஷிங்டன் விசர்ட்ஸ் உறுப்பினராக விளையாட்டு வீரராக என்.பி.ஏ.க்கு திரும்பினார். 2003 வரை இந்த அணியில் விளையாடி கடைசி முறையாக விலகினார். என். பி. ஏ.-இல் சேர்வதற்கு முன் இவர் மூன்று ஆண்டுகளாக வட கரொலைனா பல்கலைக்கழகத்தில் படித்து அந்த பல்கலைக்கழகத்தின் கூடைப்பந்தாட்ட அணியில் விளையாடியுள்ளார்.

விளையாட்டு வீரராக பணியாற்றுவதற்கு பிறகு 2006இல் ஷார்லட் பாப்கேட்ஸ் அணியின் ஒரு சிறிய பங்கு வாங்கி தற்போது அந்த அணியின் ஒரு சிறுபான்மை உரிமையாளர் ஆவார்.