வட்டரங்கு
Appearance
வட்டரங்கு (Circus) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
பயிற்சி
[தொகு]சர்க்கஸ் தொழிலை பாதுகாக்கும் பொருட்டு பயிற்சி மையமொன்று தலச்சேரியில் கேரள மாநில அரசின் சார்பாக, 2010இல், "சர்க்கஸ் அகடமி' எனும் பெயரில் துவக்கப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/circus-academy-at-thalassery-to-open-this-month/article494660.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-07-30. பார்க்கப்பட்ட நாள் 2013-11-04.
- ↑ கேரளாவில் துவக்கப்பட்ட சர்க்கஸ் அகாடமி தினமலர்