உள்ளடக்கத்துக்குச் செல்

வளிநீக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வளிநீக்கி

வளிநீக்கி (Deaerator) என்பது நீராவி உருவாக்கும் உலைக்குள் (Boiler) செலுத்தப்படும் ஊட்டுநீரில் (Feed Water) கலந்துள்ள வாயுக்களை நீக்க பயன்படும் சாதனம் ஆகும்.ஊட்டுநீரிலுள்ள ஆக்சிசன் வாயு குறிப்பாக நீக்கப் பட வேண்டும் ஏனென்றால் ஆக்சிசன் வாயு உலோக குழாய்கள் மற்றும் உலோகக் கருவிகளின் பரப்பில் உலோகங்களுடன் வினைபுரிந்து துருப்பிடிக்க வைத்து குழாயை அரித்து சேதப்படுத்தும். அது போல் காபனீரொக்சைட்டு வாயு நீருடன் சேர்ந்தால் கரிம அமிலங்களை உருவாக்கி குழாயை அரிக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே பெரும்பாலன வளிநீக்கிகள், நீரில் உள்ள ஆக்சிசனை 7 ppi(நூறுகோடியில் ஒரு பங்கு)என்ற அளவு நீக்க வடிவமைக்கப்படும்.[1][2][3]

வகைகள்

[தொகு]

மேலும் தேவையான அளவு காபனீரொக்சைட்டையும் நீக்கிவிடும்.
இரண்டு வகையான வளிநீக்கிகள் உள்ளன அவை

  • தட்டு வகை - குவிமுக மாடம் வடிவைப்பு உடையது.
  • தெளிப்பு வகை – உருளை வடிவம் உடையது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Deaerating Principle". Sterling Deaerator Company.
  2. "Deaerators". Stork. Archived from the original on 2018-09-01. பார்க்கப்பட்ட நாள் 2016-09-30.
  3. "Deaerator working principle". Boilers Info.