உள்ளடக்கத்துக்குச் செல்

வளிமண்டல அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
15 year average mean sea level pressure for June, July, and August (top) and December, January, and February (bottom).

வளிமண்டல அழுத்தம் (Atmospheric pressure) என்பது புவியின் வளிமண்டலத்தால் (Earth's atmosphere) அதன் மேற்பரப்பில் ஒர் அலகில் உணரப்படும் அழுத்தமாகும். வளிமம் கண்களுக்கு புலப்படவில்லையென்றாலும் அவைகளும் குறிப்பிட்ட அளவு நிறையினை கொண்டுள்ளன. புவியீர்ப்பு விசையின் காரணமாக பெருமளவிலான வாயு மூலக்கூறுகள் புவியின் மேற்பரப்பில் தக்க வைக்கப் படுகின்றன. எனவே புவியின் மேற்பரப்பிற்கு மேலே செல்லச் செல்ல வாயு மூலக்கூறுகளின் அடர்த்தி குறைவதினால் வளிமண்டல அழுத்தமும் உயரத்திற்கு ஏற்றாற் போல் குறைகின்றது. புவியீர்ப்பு விசையே பெருமளவு தாக்கத்தினை எற்படுத்தினாலும் புவி மேற்பரப்பின் வெப்பநிலையும் வளிமண்டல அழுத்தினை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாகின்றது. பெரும்பாலான தருணங்களில் வளிமண்டல அழுத்தம் நீர்ம நிலையழுத்திற்கு (hydrostatic pressure) ஒத்துப் போகின்றது.