விம்
Appearance
விம் (vim) என்பது யுனிக்ஸ் இயங்குதளங்களில் காணப்படும் ஒரு சிறப்பு உரைத்திருத்தி மென்பொருளாகும். இம்மென்பொருளானது vi மென்பொருளினை அடிப்படையாகக்கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இது பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.
விம், குனூ பொதுமக்கள் உரிமத்தோடு ஒத்திசையக்கூடிய உரிமமொன்றின் அடிப்படையில் திறந்த மூலமாக வழங்கப்படுகிறது.
இவ்வுரைத்திருத்தியானது ஏராளமான வசதிகளைக் கொண்டிருப்பதுடன் நிரலாளர்களின் உரைத்திருத்தி என்ற புகழையும் லினக்ஸ்/யுனிக்ஸ் வல்லுனர்களிடையே பெற்றிருக்கிறது. இவ்வுரைத்திருத்தி வரைகலை இடைமுகப்பினைக் கொண்டதல்ல. இது முனையத்திலேயே இயங்கும் உரை வழி இடைமுகப்பைக்கொண்ட மென்பொருளாகும். இதற்கான வரைகலை இடைமுகப்புக்களும் ஆங்காங்கு காணப்படுகின்றன என்றபோதும் இதன் உரைவழி இடைமுகப்பே மிகுந்த வரவேற்பைப்பெற்றதும் சக்திமிக்கதுமாகும்.
வசதிகள்
[தொகு]- பல கோப்புகளை ஒரே நேரத்தில் திறந்து வைத்தல், தொகுத்தல்.
- வரிகளை, பத்திகளை ஒரேயடியாக நகலெடுத்தல், ஒட்டுதல், நீக்குதல்
- நிரல்களை கொண்டு செயற்பாடுகளை மேற்கொள்ளும் வசதி
- நிரல்களை ஒழுங்குபடுத்தல்
- சொற்பிழை திருத்தி
- உதவிப் பக்கங்கள்
- செயற்பாடுகளை மேற்கொள்ள குறுக்குவழிகளை அமைக்கும் வசதி
- கோப்புகளை அருகருகே வைத்து ஒப்பிடும் வசதி
வெளி இணைப்புக்கள்
[தொகு]- விம் வலைமனை (ஆங்கில மொழியில்)