உள்ளடக்கத்துக்குச் செல்

இறைமையுள்ள நாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
MerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:34, 8 சூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு: ckb அழிப்பு: bs, lt, tt, ff, tl, tr, arz, fur, rmy, io, cv, sco, scn, ur, ba, sk, map-bms, ro, mk, vec, yi, tg, gn, cs, kn, szl, zh-min-nan, nn, ka, no, hi, kk, pnt, wo, ga, qu, nrm, mi,)

இறைமையுள்ள நாடு என்பது, நிலையான மக்கள், வரையறுக்கப்பட்ட ஆட்சிப்பகுதி, ஒரு அரசு, பிற இறைமையுள்ள நாடுகளுடன் தொடர்புகளைப் பேணுவதற்கான வல்லமை என்பவற்றைக் கொண்ட ஒரு நாடு ஆகும். இவ்வாறான ஒரு நாடு, பிற நாடுகளில் தங்கியிராதது என்றும், வேறு நாடுகளின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாதது என்றும் பொதுவாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. கோட்பாட்டளவில் பிற நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரு இறைமையுள்ள நாடு இருக்க முடியும் எனினும், பிற இறைமையுள்ள நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துகொள்வதும், அரசுமுறைத் தொடர்புகளைப் பேணிக்கொள்வதும் கடினமாக இருக்கும்