உள்ளடக்கத்துக்குச் செல்

ஒப்பந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒப்பந்தம்(Contract) என்பது 'வாக்குறுதிகளைக் கொண்டு திறத்தவருக்கிடையே உருவாக்கப்படும் உடன்படிக்கைகள்' ஆகும்.(an "agreement" made of a set of promises).இவ் வாக்குறுதிகள் ஒப்பந்ததில் ஈடுபடும் திறத்தவர்களுக்கிடையேயான கடமைகள் கட்டுப்பாடுகள் பற்றியதாக இருக்கும்.ஒப்பந்தமானது சட்ட ஆளுமையுடையதால் ஒப்பந்த முறிவு (Breach of contract) ஏற்படும் சந்தர்பங்களில் நீதிமன்றங்களை நாடி குறைதீர்ப்பினை (remedies) பெறமுடியும்.

ஒப்பந்த சட்டத்தின் பரப்பெல்லை

[தொகு]
  1. எப்போது மற்றும் எவ்வாறு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது ?
  2. எப்போது திறத்தவர்களால் ஒப்பந்த கடப்பாடுகளிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள முடியும்?
  3. ஒப்பந்த விதிப்பிற்கு (terms of contract) எம்மாதிரியான அர்த்தம்,விளைவு கொடுக்கப்பட்டுள்ளது?
  4. ஒப்பந்த முறிவிற்கு எம்மாதிரியான பரிகாரம் கூறப்பட்டுள்ளது?

போன்ற விடயம் தொடர்பில் ஒப்பந்தசட்டம் தன் கவனத்தில் கொள்கின்றது.

ஒப்பந்த உருவாக்கம்

[தொகு]

ஒப்பந்தம் திறத்தவர்களிடையே தெளிவான கொடைமுனைவும் நிபந்தனையற்ற ஏற்பும் பரஸ்பர புரிந்துணர்வுடன் ஒர் விடயபொருள் தொடர்பில் சந்திக்கும்போது உருவாகும்.

மேலும்,

  • Form - In some cases, certain formalities (that is, writing) must be observed.
  • தகைமை (Capacity) - ஒப்பந்ததில் ஈடுபடுவதற்கான முறையான தகுதி திறத்தவர்களுக்கு கட்டாயமாக இருக்க வேண்டும்.
  • உடன்பாடு (Consent) - ஒப்பந்தமானது மிரட்டல்,அச்சுறுத்தல் போன்ற காரணத்தால் அல்லாது மன உடன்பாடுடன் மேற்கொள்ளவேண்டும்.
  • சட்டத்தன்மை (Legality) - ஒப்பந்ததின் நோக்கம் நாட்டில் அமுலில் இருக்கும் பொதுசட்டத்தை மீறும் வகையிலோ,முரணாகவோ அமையாது சட்டதினை அனுசரிக்கவேண்டும்.

போன்ற இதர காரணிகளால் ஒப்பந்தமானது வலிதான ஒப்பந்தமாக ஆக்கப்படும்.மேற்கூறிய காரணிகளின் எதேனும் விடுபாடுகள் இருப்பின் அத்தகைய ஒப்பந்தங்கள் வறிதான ஒப்பந்தமாகவோ (void),வறிதாக்கதக்க ஒப்பந்தமாகவோ(voidable),செயற்படுத்தமுடியா ஒப்பந்தமாகவோ (unenforceable) சட்டதினால் அடையாளப்படுத்தப்படும்.

வலிதான ஒப்பந்ததின் கூறுகள்

[தொகு]
  1. பரஸ்பர புரிந்துணர்வு (Mutual agreement)
  2. பெறுமதி (Consideration)
  3. தகைமை - திறத்தவர்கள் ஒப்பந்தம் தொடர்பான கடமை,கடப்பாடுகளை அறிந்திருக்கும் தன்மையினை பெற்றிருக்கவேண்டும்.சட்டமானது பராயமடையாதோர் (18 வயதிற்கு உட்பட்டவர்கள்),மனநலம் குறைந்தவர்கள் போன்றவர்களை ஒப்பந்ததில் ஈடுபடும் தகமை அற்றவராக கணிக்கின்றது.
  4. முறையான ஒப்பந்தப் பொருள் (Proper Subject Matter) - ஒப்பந்த நோக்கமானது சட்டஒப்புதல் பெற்ற விடயமாக இருத்தல் வேண்டும்.அவ்வாறு சட்ட ஒப்புதல் பெறாத விடயம் தொடர்பில் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தமானது ஆரம்பம்முதலே(ab initio) வறிதான ஒப்பந்தமாக கொள்ளப்படும்.
  5. Mutual Right to Remedy - ஒப்பந்தமுறிப்பு தொடர்பில் உரிய நிவராணத்தினை பெறும் உரிமையினை ஒப்பந்ததில் ஈடுபடும் இருதிறத்தவர்களும் கொண்டிருக்க வேண்டும்.
  6. Mutual Obligation to Perform

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]