அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம்
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | நவம்பர் 15, 1983 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | மும்பை |
பணியாட்கள் | மறைபொருள் |
அமைப்பு தலைமை |
|
வலைத்தளம் | http://www.aerb.gov.in/ |
அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் (Atomic Energy Regulatory Board, AERB) அணுசக்தி சட்டம், 1962 ( 1962ஆம் ஆண்டின் 33) வரையறுத்துள்ள கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு அந்தச் சட்டத்தின் பிரிவு 27 கீழாக கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் நவம்பர் 15, 1983 அன்று நிறுவப்பட்டது. இந்த வாரியத்தின் கட்டுப்பாட்டு அதிகாரங்கள் மேற்கண்ட சட்டம் தவிர சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 கீழ் இயற்றப்பட்ட விதிமுறைகள் மற்றும் அறிவிக்கைகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் தலமையகம் மும்பையில் உள்ளது.[1]
இந்தியாவில் அயனாக்கற் கதிரியக்கம் மற்றும் அணு ஆற்றல் பயன்பாட்டால் தேவையற்ற உடற்கேடு வாய்ப்பு எதுவும் ஏற்படாது மாசற்ற சூழல் நிலவ உறுதி செய்வதே இந்த வாரியத்தின் குறிக்கோளாகும். தற்போது ஓர் முழுநேர தலைவர், ஓர் அலுவல்சார் உறுப்பினர், மூன்று பகுதிநேர உறுப்பினர்கள் மற்றும் ஓர் செயலாளர் இவ்வாரியத்தில் பணி புரிகின்றனர்.
வாரியம் பின்கற்றும் நிர்வாக, கட்டுப்பாட்டு நெறிமுறைகள் நாடு முழுவதும் உள்ள வல்லுனர்களால் பல தள மீளாய்வுகளுக்கு வழிவகுக்கிறது. இந்த வல்லுனர்கள் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "contactus". http://www.aerb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
{{cite web}}
: External link in
(help)|publisher=