அப்துல் வாரிசு கான்
அப்துல் வாரிசு கான் Abdul Warish Khan | |
---|---|
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை | |
பதவியில் மே 2007 – மார்ச்சு 2012 | |
முன்னையவர் | கிரண் பால் |
பின்னவர் | சுரேசு ராணா |
தொகுதி | தானா பவன் சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1981 |
அரசியல் கட்சி | இராசுட்ரிய லோக் தளம் |
பிற அரசியல் தொடர்புகள் | பகுசன் சமாச் கட்சி |
பெற்றோர் | ராவ் ரஃபி கான் (தந்தை) |
அப்துல் வாரிசு கான் (Abdul Warish Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இராவ் அப்துல் வாரிசு என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1981 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 2007 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் வரை சட்டமன்ற உறுப்பினராக உத்தரப் பிரதேச மாநிலத்தின் தானா பவன் சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இராசுட்ரிய லோக் தளம் கட்சியுடன் இணைந்து தேர்தலில் இவர் வெற்றி பெற்றார்.[1][2]
தொழில்
[தொகு]அப்துல் வாரிசு கான் 2007 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய 25 வயதில் இராசுட்ரிய லோக் தளத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தானா பவன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] 2011 ஆம் ஆண்டு பகுசன் சமாச் கட்சியில் சேர்ந்தார்.[4] 2012 தேர்தலில் பகுசன் சமாச் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு சுரேசு ராணாவிடம் தோல்வியடைந்து மூன்றாவது இடத்தில் நின்றார்.
மீண்டும் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பகுசன் சமாச் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி மீண்டும் சுரேசு ராணாவிடம் தோல்வியடைந்தார்.[5][6]
இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்து விலகி 2021 ஆம் ஆண்டில் இராசுட்ரிய லோக்தளத்தில் மீண்டும் சேர்ந்தார்.[7] ஆனால் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ali, Mohammad (2017-02-08). "With Jat-Muslim unity, Thana Bhawan rises above Shamli’s shame" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/elections/uttar-pradesh-2017/With-Jat-Muslim-unity-Thana-Bhawan-rises-above-Shamli%E2%80%99s-shame/article17245334.ece.
- ↑ "ABDUL WARISH KHAN(Rashtriya Lok Dal(RLD)):Constituency- THANA BHAWAN(MUZAFFAR NAGAR) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-01-13.
- ↑ "थानाभवन सीट का इतिहास: विधायकों की होती है हार". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ "Another RLD leader joins BSP". The Times of India. 2011-08-25. https://timesofindia.indiatimes.com/city/lucknow/another-rld-leader-joins-bsp/articleshow/9734813.cms?from=mdr.
- ↑ "करोड़पति हैं बसपा प्रत्याशी अब्दुल वारिस खां". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ Shaikh, Zeeshan. "UP Assembly Election Results 2017: Suresh Rana wins from Thana Bhawan, defeats BSP candidate Abdul Waris Khan | India.com". www.india.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ "कांग्रेस नेता पूर्व विधायक राव वारिश भी रालोद में शामिल". Hindustan (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ "पूर्व विधायक राव अब्दुल वारिस रालोद में हुए शामिल". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.
- ↑ "पूर्व विधायक राव अब्दुल वारिस थामेंगे रालोद का दामन". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2023-08-18.