அமோனியம் குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் குளோரைடு
| |
வேறு பெயர்கள்
சாம் அமோனியாக்கு, சால்மியாக், நுசாடிர் உப்பு, சால் ஆர்மேக்னாக்கு, அம்மோனியாக்கு உப்பு
| |
இனங்காட்டிகள் | |
12125-02-9 | |
ChEBI | CHEBI:31206 |
ChemSpider | 23807 |
EC number | 235-186-4 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D01139 |
பப்கெம் | 25517 |
வே.ந.வி.ப எண் | BP4550000 |
| |
UNII | 01Q9PC255D |
UN number | 3077 |
பண்புகள் | |
ClH4N | |
வாய்ப்பாட்டு எடை | 53.49 g·mol−1 |
தோற்றம் | வெண் திடம், நீர் உறிஞ்சும் திறன் |
மணம் | மணமற்றது |
அடர்த்தி | 1.5274 கி/செமீ3[1] |
உருகுநிலை | 338 °C (640 °F; 611 K) சிதைதல், பதங்கமாதல் |
கொதிநிலை | 520 °C (968 °F; 793 K) |
337.6 °செ. இல் பதங்கமாகிறது.[2] ΔsublH | |
244 கிராம்/லிட்டர் (−15 °செல்சியசு) 294 கிராம்/லிட்டர் (0 °செல்சியசு) 383.0 கிராம்/லிட்டர் (25 °செல்சியசு) 454.4 கிராம்/லிட்டர் (40 °செல்சியசு) 740.8 கிராம்/லிட்டர் (100 °செல்சியசு)[4] | |
கரைதிறன் பெருக்கம் (Ksp)
|
30.9 (395 கிராம்/லிட்டர்)[5] |
கரைதிறன் | நீர்ம அமோனியா, ஐதரசீன், மதுசாரம், மெத்தனால், கிளிசரால் ஆகியவற்றில் கரையும். அசிட்டோனில் ஓரளவு கரையும். டை எத்தில் ஈதர், எத்தில் அசிட்டேட்டு-இல் கரையாது.[2] |
மெத்தனால்-இல் கரைதிறன் | 3.2 கிராம்/100 கிராம் (17 °செல்சியசு) 3.35 கிராம்/100 கிராம் (19 °செல்சியசு) 3.54 கிராம்/100 கிராம் (25 °செல்சியசு)[2] |
எத்தனால்-இல் கரைதிறன் | 6 கிராம்/லிட்டர் (19 °செல்சியசு)[1] |
கிளிசரால்-இல் கரைதிறன் | 97 கிராம்/கிலோகிராம்[2] |
கந்தக டைஆக்சைடு-இல் கரைதிறன் | 0.09 கிராம்/கில் (0 °செல்சியசு) 0.031 கிராம்/கிலோகிராம் (25 °செல்சியசு)[2] |
அசிட்டிக் காடி-இல் கரைதிறன் | 0.67 கிராம்/கிலோகிராம் (16.6 °செல்சியசு)[2] |
ஆவியமுக்கம் | 133.3 பாசுக்கல் (160.4 °செல்சியசு)[6] 6.5 கிலோபாசுக்கல் (250 °செல்சியசு) 33.5 கிலோபாசுக்கல் (300 °செல்சியசு)[1] |
காடித்தன்மை எண் (pKa) | 9.24 |
-36.7·10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.642 (20 °செல்சியசு)[2] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−314.43 கிலோயூல்/மோல்[1] |
நியம மோலார் எந்திரோப்பி S |
94.56 J/மோல்l·கெல்வின்K[1] |
வெப்பக் கொண்மை, C | 84.1 யூல்/மோல்·கெல்வின்[1] |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | ICSC 1051 |
GHS pictograms | [6] |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H319[6] | |
P305+351+338[6] | |
தீப்பற்றும் வெப்பநிலை | தீப்பற்றாது |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
1650 mg/kg (rats, oral) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
எதுவுமில்லை[7] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 10 மில்லிகிராம்/மீட்டர்3 ST 20 மில்லிகிராம்/மீட்டர்3 (புகையாக)[7] |
உடனடி அபாயம்
|
N.D.[7] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் புளோரைடு அமோனியம் புரோமைடு அமோனியம் அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் குளோரைடு பொட்டாசியம் குளோரைடு ஐதராக்சிலமோனியம் குளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் குளோரைடு (Ammonium Chloride), என்பது NH4Cl என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய, வெண்மை நிறப்படிக அமோனியாவின் சோ்மமாகும். இது ஒரு கனிமச்சோ்மம். இது நீரில் கரையக்கூடியது. அம்மோனியம் குளோரைடின் நீர்க்கரைசல் சிறிதளவு அமிலத்தன்மை கொண்டதாகும். சால் அம்மோனியாக் என்பது அம்மோனியம் குளோரைடின் இயற்கையில் கிடைக்கக்கூடிய கனிமவியல் வடிவம் ஆகும். இந்தக் கனிமமானது நிலக்கரி குவியல்களை எாிக்கும் போது வெளிவரும் வாயுக்களை ஒடுக்கத்திற்கு உட்படுத்துவதால் கிடைக்கிறது. இது சில வகை எாிமலைத் துளைகளைச் சுற்றிலும் கூட காணப்படுகிறது. அம்மோனியம் குளோரைடானது முக்கியமாக உரமாகவும், சில வகை மதுபானங்களில் மணமூட்டும் காரணியாகவும் பயன்படுகிறது. அமோனியா மற்றும் ஐதரோ குளோரிக் அமிலம் இவற்றின் வினையிலிருந்து கிடைக்கும் விளைபொருளாகும்.
தயாரிப்பு
[தொகு]சோடியம் கார்பனேட்டு தயாரிக்கப் பயன்படும் சால்வே முறை யின் மற்றுமொரு விளைபொருளாக அம்மோனியம் குளோரைடு உள்ளது.[3]
- CO2 + 2 NH3 + 2 NaCl + H2O → 2 NH4Cl + Na2CO3
அம்மோனியம் குளோரைடைத் தயாாிப்பதற்கான முதன்மையான முறையாக இருந்தாலும் கூட சில தொழிலக செயல்முறைகளில் அம்மோனியாவின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான முறையாகவும் இது பயன்படுகிறது.
அம்மோனியம் குளோரைடானது வணிகரீதியில் அம்மோனியா (NH3)மற்றும் ஹைட்ரஜன் குளோரைடு வாயு அல்லது ஹைட்ரோகுளோரிக் அமிலம்(ஏதேனும் ஒன்று) இவற்றின் நீா்க்கரைசலை இணைத்து வினைபுரியச் செய்வதால் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.:[3]
- NH3 + HCl → NH4Cl
இயற்கையில் அம்மோனியம் குளோரைடானது எரிமலைப் பகுதிகளில் எாிமலைக் குழிகளைச் சுற்றிலும் காணப்படும் பாறைகளில் காணப்படுகிறது. வாயுநிலையிலுள்ள அம்மோனியம் குளோரைடில் இருந்து நேரடியாக உருவாகும் இந்தப் படிகங்கள் எளிதில் நீரில் கரையக்கூடிய தன்மையைப் பெற்றுள்ளதால் நிலைப்புத்தன்மை அற்றவையாக உள்ளன.[8]
வேதி வினைகள்
[தொகு]வெப்பப்படுத்தும் போது அம்மோனியம் குளோரைடு பதங்கமாவது போலத் தோன்றும். ஆனால், அது அம்மோனியாவாகவும், ஐதரசன் குளோரைடாகவும் சிதைவுறுகிறது.[3]
- NH4Cl → NH3 + HCl
அம்மோனியம் குளோரைடு அடா்வு மிகு காரத்துடன் (உதாரணமாக சோடியம் ஹைட்ராக்சைடு) வினைபுரிந்து அம்மோனியாவை வெளிவிடுகிறது.
- NH4Cl + NaOH → NH3 + NaCl + H2O
இதேபோன்று, அம்மோனியம் குளோரைடு அதிக வெப்பநிலைகளில் கார உலோக கார்பனேட்டுகளுடன் வினைபுரிந்து அம்மோனியா மற்றும் கார உலோக குளோரைடு ஆகியவற்றைத் தருகிறது.
- 2 NH4Cl + Na2CO3 → 2 NaCl + CO2 + H2O + 2 NH3
எடை விகிதாச்சாரப்படி அம்மோனியம் குளோரைடின் நீா்க்கரைசலின் காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பானது 4.6 முதல் 6.0 வரை என்ற எல்லைக்குள் உள்ளது. .[9]
பேரியம் ஐதராக்சைடுடன் அம்மோனியம் குளோரைடு வினை போலவே, மற்ற வேதிப்பொருட்களுடனான அம்மோனியம் குளோரைடின் வினைகள் வெப்பம் கொள் செயல்முறை வகையைச் சேர்ந்ததாக உள்ளன.
பயன்பாடுகள்
[தொகு]அம்மோனியம் குளோரைடானது நைட்ரசனைத் தரும் மூலமாக இருப்பதால் குளோரம்மோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. உலகத்தில் தயாாிக்கப்படும் அம்மோனியம் குளோரைடின் 90 விழுக்காடு உரமாகவே பயன்படுகிறது. ஆசியாவைப் பொறுத்த வரையில் நெல் மற்றும் கோதுமைப் பயிர்களுக்கு இந்த உரம் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.[10]
அம்மோனியம் குளோரைடு 18 ஆம் நூற்றாண்டில் வான வேடிக்கை வெடிபொருட்களில் பயன்படுத்தப்பட்டது, ஆனால் பாதுகாப்பான மற்றும் நீரை உறிஞ்சும் திறன் உள்ள வேதிப்பொருட்களின் வரவால் இந்த நிலையானது மாறியுள்ளது. அம்மோனியம் குளோரைடைச் சேர்ப்பதன் நோக்கம் சுடரெரியும் போது தாமிர அயனிகளிலிருந்து வெளிப்படும் பச்சை மற்றும் நீல நிறங்களை அதிகப்படுத்துவதற்கான குளோரின் ஈனிகளைத் தருவதேயாகும்.
உலோகவியல்
[தொகு]பூச்சாகப் பயன்படக்கூடிய அல்லது பற்றவைப்பில் பயன்படக்கூடிய உலோகங்களைத் தயாரிக்கக்கூடிய செயல்முறைகளில் அம்மோனியம் குளோரைடு ஒரு இளக்கியாகப் பயன்படுகிறது. வேலைக்குட்படுத்தப்படும் உலோகத்துண்டுகளின் மேற்பரப்பில் உள்ள உலோக ஆக்சைடுகளுடன் வினைபுரிந்து ஆவியாகக்கூடிய உலோக குளோரைடுகளை உருவாக்கி அந்த இடத்தை சுத்தப்படுத்தும் இளக்கியாகச் செயல்படுகிறது. இந்த பயன்பாட்டிற்காக பற்றவைக்கும் இரும்புத்துண்டின் முனைகளை சுத்தப்படுத்தும் பற்றவைக்கும் உலோகத்துடன் இளக்கியாகவும் சேர்க்கப்பட்டு கனரகப்பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் விற்கப்படுகிறது.
மருத்துவம்
[தொகு]அம்மோனியம் குளோரைடானது இருமல் மருந்துகளில் சளி நீக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சுவாசக்குழாயின் தசைகளின் மீதான அம்மோனியம் குளோரைடின் எரிச்சலுாட்டும் விளைவு சுவாசக்குழாயில் உள்ள திரவ உற்பத்தியை அதிகப்படுத்தி அதன் மூலம் இருமலைக் குறைக்கிறது. அம்மோனியம் உப்புகள் இரைப்பை திசுக்களில் எரிச்சலை உருவாக்கி குமட்டல் மற்றும் வாந்தியை உருவாக்கலாம்.
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Pradyot, Patnaik (2003). Handbook of Inorganic Chemicals. The McGraw-Hill Companies, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 http://chemister.ru/Database/properties-en.php?dbid=1&id=371
- ↑ 3.0 3.1 3.2 3.3 Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry (illustrated ed.). Academic Press. p. 614. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ Seidell, Atherton; Linke, William F. (1919). Solubilities of Inorganic and Organic Compounds (2nd ed.). D. Van Nostrand Company.
Results here are multiplied by water's density at temperature of solution for unit conversion. - ↑ "Solubility Products of Selected Compounds". Salt Lake Metals. பார்க்கப்பட்ட நாள் 2014-06-11.
- ↑ 6.0 6.1 6.2 6.3 Sigma-Aldrich Co., Ammonium chloride. Retrieved on 2014-06-11.
- ↑ 7.0 7.1 7.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0029". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Rowley, Steven P. (2011). General Chemistry I Laboratory Manual (Second ed.). Kendall Hunt. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7575-8942-3.
- ↑ Dr. K. G. Bothara (7 October 2008). Inorganic Pharmaceutical Chemistry. Pragati Books Pvt. Ltd. pp. 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85790-05-3. பார்க்கப்பட்ட நாள் 12 October 2011.
- ↑ Karl-Heinz Zapp "Ammonium Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a02_243
புற இணைப்புகள்
[தொகு]- Calculators: surface tensions, and densities, molarities and molalities of aqueous ammonium chloride
- CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards