உள்ளடக்கத்துக்குச் செல்

இலட்சுமி மேனன் (வடிவழகி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலட்சுமி மேனன்
பிறப்பு4 நவம்பர் 1982 (அகவை 42)
பெங்களூர்
பணிவடிவழகர்

இலட்சுமி மேனன் (Lakshmi Menon) இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் பெங்களூருவில் நவம்பர் 4, 1982 அன்று பிறந்த ஓர் ஒப்புரு வடிவழகி ஆவார்.[1] பெங்களூருப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்துக் கொண்டிருந்தபோதே வருமானத்திற்காக ஒப்புரு காட்சிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.[2] பல ஆண்டுகள் இந்தியாவில் காட்சிகளில் பங்கேற்றப் பின்னர் 2006ஆம் ஆண்டு பன்னாட்டு ஒப்புரு பணிவாழ்வைத் தொடங்கினார்.[2] யான் பால் கௌத்தியே மற்றும் எர்மெசு காட்சிகளில் தோன்றியதோடன்றி எர்மெசு,மாக்சு மாரா ,கிவென்சி போன்ற உயர்நிலை நிறுவனங்களுக்கான விளம்பரங்களில் தோன்றியுள்ளார்.[2]

அக்டோபர் 2008ஆம் ஆண்டில் பிரெஞ்சு பாங்கியல் இதழ் வோஃக் தலையங்கத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இதற்கு முன்னரே இத்தகைய உயர் பாங்கியல் இதழ்களில் தோன்றியிருப்பினும் பிரெஞ்சு வோஃக் இதழில் வருவது ஒவ்வொரு வடிவழகரின் ஏக்கமாகும்.

2011 ஆண்டிற்கான பிரெல்லி நாட்காட்டியில் இடம் பிடித்துள்ளது இவரது பாங்கியல் பணிவாழ்வின் சிகரமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]