உஸ்மானாபாத் மாவட்டம்
Osmanabad District உஸ்மானாபாத் மாவட்டம் عثمان آباد ضلع उस्मानाबाद जिल्हा | |
---|---|
Osmanabad District உஸ்மானாபாத்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
-18°24′N 76°24′E / 18.40°N 76.40°E | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் கோட்டம் |
தலைமையகம் | உஸ்மானாபாத் |
பரப்பு | 7,569 km2 (2,922 sq mi) |
மக்கட்தொகை | 1660311 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 219.0/km2 (567/sq mi) |
படிப்பறிவு | 76.33% |
பாலின விகிதம் | 920 |
வட்டங்கள் | 1. உஸ்மானாபாத் 2. துளஜாபூர் 3. உமர்கா, 4. லோஹாரா 5. களம்பு 6. பூம் 7. பராண்டா 8. வாசி |
மக்களவைத்தொகுதிகள் | உஸ்மானாபாத்[1] |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 9, தேசிய நெடுஞ்சாலை 211 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 730 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
உஸ்மானாபாத் மாவட்டம் இந்தியாவில் உள்ள மகாராஷ்டிராவில் உள்ளது. இது அவுரங்காபாத் மண்டலத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் உஸ்மானாபாத் நகரில் உள்ளது. புகழ் பெற்ற துளஜாபவானி கோயில் இந்த மாவட்டத்தில் உள்ளது. இந்த மாவட்டம் 7569 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [2] இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மலைகளில் அமைந்துள்ளன. தாராசிவா குகைகள் இம்மலைகளில் உள்ளது.
வட்டங்கள்
[தொகு]இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். [3]
- உஸ்மானாபாத்
- துளஜாபூர்
- உமர்கா
- லோஹாரா
- களம்பு
- பூம்
- வாசி
- பராண்டா
மக்கள் தொகை
[தொகு]2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 1,660,311 மக்கள் வாழ்ந்தனர். [2]
இந்த மாவட்டத்தில் சதுர கிலோமீட்டருக்குள் 219 பேர் வாழ்வதாக மக்கள் அடர்த்தி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. [2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 920 பெண்கள் இருப்பதாக பால் விகிதக் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. [2] இங்கு வாழ்வோரில் கல்வியறிவை 76.33% பேர் பெற்றுள்ளனர்.[2]
அரசியல்
[தொகு]சிவ சேனா , காங்கிரசு, தேசியவாத காங்கிரசு, பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் ஆகியன இங்குள்ள பெரிய கட்சிகள் [4][5]
இந்த மாவட்டத்தை பாராளுமன்றத்தில் முன்னிறுத்துபவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [6]
போக்குவரத்து
[தொகு]இந்த மாவட்டத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக பிற இடங்களுக்கு செல்லலாம். இங்கு ரயில் நிலையங்களும் உள்ளன.
சான்றுகள்
[தொகு]- ↑ "Parliamentary Constituencies Maharashtra" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2009-03-06. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 "District Census 2011". Office of The Registrar General & Census Commissioner, Ministry of Home Affairs, Government of India. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "Blocks of Osmanabad, Maharashtra". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 2011-11-13. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "Election Information in Osmanabad Parliament . Dr. Padamsingh bajirao Patil is member of parliament from 2009. Constituency". Party Analyst (IT GRIDS, India). Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ "State Assembly Elections 2009: Maharashtra: Osmanabad". Indian Election Affairs. Archived from the original on 2013-05-18. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
- ↑ Cite web|title=Map: Parliamentray Constituencies Maharashtra|publisher= Election Commission of India|url=http://164.100.9.199/ecimaps/ecipdf/state_pc_Map/Maharashtra.pdf பரணிடப்பட்டது 2009-03-06 at the வந்தவழி இயந்திரம்
இணைப்புகள்
[தொகு]- மாவட்ட அரசு பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம்
- துளஜாபவானி கோயில் பரணிடப்பட்டது 2015-04-02 at the வந்தவழி இயந்திரம்