உள்ளடக்கத்துக்குச் செல்

எக்ஸ்-மென் 3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட்
இயக்கம்பிரெட் ரட்னர்
தயாரிப்பு
கதைசைமன் கின்பெர்க்
ஜாக் பென்
மூலக்கதை
இசைஜான் பவல்
நடிப்பு
ஒளிப்பதிவுடான்டே இஸ்பினோட்டி
படத்தொகுப்புமார்க் ஹெல்ப்ரிச்
மார்க் கோல்ட்ப்ளாட்
ஜூலியா வோங்
கலையகம்
விநியோகம்20ஆம் சென்சுரி பாக்ஸ்
வெளியீடுமே 26, 2006 (2006-05-26)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்104 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$210 மில்லியன்
மொத்த வருவாய்$460.4 மில்லியன்[2]

எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட் (X-Men: The Last Stand)[3] என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் என்ற வரைகதை புத்தகத்தில் வெளியான எக்ஸ்-மென் என்ற ஒரு கற்பனை பாத்திரக் குழுவை மையமாக வைத்து மார்வல் மகிழ்கலைக் கொம்பனி, ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், இங்கெனியஸ் பிலிம் பார்ட்னர்ஸ் மற்றும் டோனர்ஸ் கொம்பனி போன்ற நிறுவனங்கள் மூலம் தயாரித்து 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

லாரன் ஷல்லர் டோனர், அவி ஆராட் மற்றும் ரால்ப் விண்டேர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை பிரெட் ரட்னர் என்பவர் இயக்க, ஹியூ ஜேக்மன், ஹாலே பெர்ரி, இயன் மெக்கெல்லன், பாம்கே ஜான்சென், அண்ணா பகுய்ன், கெல்சி கிராமர், ஜேம்ஸ் மார்ஸ்டன், ரெபேக்கா ரோமெயின், சான் ஆஷ்மோர், ஆரோன் ஸ்டான்போர்ட், வின்னி ஜோன்ஸ், டானியா ராமிரெஸ், மைக்கேல் மர்பி ஷோஹ்ரே அக்தாஷ்லூ, பேட்ரிக் ஸ்டீவர்ட் மற்றும் பென் போஸ்டர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

எக்ஸ்-மென்: தி லாஸ்ட் ஸ்டாண்ட் படம் மே 26, 2006 அன்று வெளியானது. இது உலகளவில் சுமார் 459 மில்லியனை வசூலித்தது, இது 2006 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஏழாவது படமாகவும் மற்றும் எக்ஸ்-மென் திரைப்படத் தொடர்களில் அதிக வசூல் செய்த படமும் ஆகும். இந்த திரைப்படத்தின் தொடர்சியாக எக்ஸ்-மென்: ஃபர்ஸ்ட் கிளாஸ் என்ற படம் 2011 ஆம் ஆண்டு வெளியானது.

தொடர்ச்சியான தொடர் திரைப்படங்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "X-Men The Last Stand (2006)". London: British Film Institute. பார்க்கப்பட்ட நாள் May 10, 2014. For full data, click "Show more" link.
  2. "X-Men: The Last Stand (2006)". Box Office Mojo. Archived from the original on January 8, 2017. பார்க்கப்பட்ட நாள் January 8, 2017.
  3. Dargis, Manohla (2015). "X-Men: The Last Stand (2006)". Movies & TV Dept. The New York Times. Baseline & All Movie Guide. Archived from the original on February 14, 2015. பார்க்கப்பட்ட நாள் April 9, 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]