உள்ளடக்கத்துக்குச் செல்

எராம் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எராம் அலி
பிறப்பு8 ஆகத்து 1975 (1975-08-08) (அகவை 49)
இந்தியா
வாழ்க்கைத்
துணை
அப்பாஸ் (m. 1997)
பிள்ளைகள்2

எராம் அலி, இந்தியாவைச் சேர்ந்த நவீன ஆடை வடிவமைப்பாளரும் இந்தி, கன்னட, தெலுங்கு மற்றும் தமிழ்  திரைப்படத் துறையில் திரைப்பட ஆடை தயாரிப்பாளரும் விளம்பர நடிகையாவார். திரைப்படத்துறையில் மட்டுமல்லாது நாகரீக ஆடை விழாக்கள், அழகுப்போட்டிகள் போன்றவைகளுக்கும் ஆடைகளை வடிவமைத்து கொடுத்துள்ளார்.[1]

தொழில் வாழ்க்கை

[தொகு]

1997 ஆம் ஆண்டில் இருந்து எராம் அலி, சென்னை நாகரீகக் காட்சிகளில் கலந்துகொண்டு விளம்பரங்களில் தோன்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டில் தமிழ் திரைப்பட நடிகரான, அப்பாஸ் அலியைத் திருமணம் செய்துள்ளார்.[2] இத்தம்பதியருக்கு எமிரா (பெண்), அய்மான் (ஆண்) [3] என இரு குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு, தனது கணவரின் பிரத்தியேக ஆடை வடிவமைப்பாளரான இவர், பல்வேறு திரைப்படங்களுக்காக ஆடைகளை வடிவமைத்துள்ளார். 2010 ஆம் ஆண்டு வெளியான மாய எதார்த்த படமான ஆயிரத்தில் ஒருவனில் தலைமை ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.[4]

ஆடை வடிவமைப்பாளர்

[தொகு]

நடிகர் அப்பாஸுகாக (தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம்)

முன்னணி ஆடை வடிவமைப்பாளராக

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Anything in excess is boring, says Erum Ali". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-18.
  2. "Tamil Cinema, 1997 – Year Highlights". தினகரன். 1997 இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090105224113/http://www.dinakaran.com/cinema/english/highlights/1997/1997high.htm. 
  3. Kumar, Ashok (2018-03-02). "நடிகர் அப்பாஸின் அழகான மனைவி மற்றும் குழந்தைகள் - தற்போதைய நிலை". Tamil Behind Talkies. பார்க்கப்பட்ட நாள் 2023-03-28.
  4. "Erum Ali kicked about AO release". Deccan Chronicle. 6 January 2010 இம் மூலத்தில் இருந்து 25 October 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101025222924/http://www.deccanchronicle.com/entertainment/erum-ali-kicked-about-ao-release-615. பார்த்த நாள்: 16 December 2018.