உள்ளடக்கத்துக்குச் செல்

எரிக்கு தெமேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரிக்கு தெமேன்
Erik D. Demaine
எரிக்கு தெமேன் (இடம்), மார்ட்டின் தெமேன் (நடு), பில் இசுப்பைட்டு (வலம்) ஆகிய மூவரும் சான் ஓர்த்தன் கான்வே என்பார் காட்டும் ஒரு சீட்டாட்டக் கண்கட்டு வேடிக்கையைப் பார்க்கின்றனர் (June 2005).
பிறப்புபெப்ரவரி 28, 1981 (1981-02-28) (அகவை 43)
ஆலிஃவாக்சு, நோவா இசுகோசியா, கனடா
வாழிடம் ஐக்கிய அமெரிக்க நாடுகள்
தேசியம்கனடியர், அமெரிக்கர்
பணியிடங்கள்மாசாச்சுசெட்ஃசு இன்சிட்யூட்டு ஆவ் தெக்னாலச்சி
கல்வி கற்ற இடங்கள்தல்ஃகவுசி பல்கலைக்கழகம்
வாட்டர்லூ பல்கலைக்கழகம்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
மிஃகாய் பத்ராசுக்கு (Mihai Pătraşcu)

எரிக்கு தி. தெமான் (Erik D. Demaine) (பிறப்பு: பிப்ரவரி 28, 1981), அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி (MIT. மாசாச்சுசெட்ஃசு இன்சிட்யூட்டு ஆவ் தெக்னாலச்சி) கல்விக்கழகத்தில் கணினி அறிவியல் பேராசிரியராக உள்ளார்.

தொடக்கக்கால வாழ்க்கை

[தொகு]

எரிக்கு தெமேன் கனடாவில் உள்ள நோவா இசுகோசியா மாநிலத்தில் உள்ள ஆலிஃவாக்சு (Halifax) என்னும் ஊரில், தந்தையார் மார்ட்டின் தெமேனுக்கும் (Martin Demaine) தாயார் சூடி ஆன்டர்சனுக்கும் (Judy Anderson) மகனாகப் பிறந்தார். இவருக்கு அகவை 7 இருக்கும் பொழுது, தன் தந்தையாருடன் வட அமெரிக்காவில் பல இடங்களில் பயணம் செய்தார். இவருடைய தந்தையார் கழைக்கூத்தாடிக் கலையிலும் சிலை வடிப்பதிலும் வேறு பல கலைகளிலும் வல்லவர். எரிக்கு தெமேன் வீட்டிலேயே (தந்தையாருடன் செல்லும் இடங்களில் எல்லாம்) படித்தார்.[1] எரிக்கு தெமேன் ஒரு குழந்தை மேதை.[2] எரிக்கு தெமேன் அகவை 12 இருக்கும் பொழுதே தல்ஃகவுசி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்; அகவை 14 இலேயே பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் இவருடைய முனைவர் பட்டத்தை அகவை 20 இலேயே வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் முடித்தார்[3][4].

தொழில்சார் வெற்றிகள்

[தொகு]

இவருடைய, வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் செய்த, முனைவர் பட்ட ஆய்வுரை ஒரிகாமி என்னும் தாள் மடிப்புக் கலையைச் சார்ந்த கணக்கியல் கூறுகளைப் பற்றியதாக இருந்தது. இது ஒரு முன்னோடியான ஆய்வுப் பதிவு.[5] இந்த முனைவர் பட்ட ஆய்வுரைக்கு கனடாவின் கவர்னர் செனரல் பதக்கம் பரிசாக அளிக்கப்பட்டது; கனடாவின் அறிவியல், பொறியியல் ஆய்வுக் குழுமத்தின் (NSERC) 2003 ஆம் ஆண்டுக்கான முனைவர் பட்ட சிறப்புப் பரிசும் அளிக்கப்பட்டது.

இவ் ஆய்வுரையை அடிப்படையாகக் கொண்டு ஒரு நூலும் வெளியிடப்பட்டது.[6]

எரிக் தெமேன் அமெரிக்காவில் மாசாச்சுசெட்ஃசு மாநிலத்தில் உள்ள எம்.ஐ.டி (MIT) கல்விக்கழகத்தில் 2001 ஆம் ஆண்டு, தனக்கு அகவை 20 இருக்கும் பொழுது பேராசிரியராகச் சேர்ந்தார். இவரே அக் கல்விக்கழகத்தின் வரலாற்றில் அங்கு சேர்ந்த மிகவும் இளமையான பேராசிரியர்.[3][7]. சேர்ந்த இரண்டு ஆண்டுகளில், 2003 ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மெக்கார்த்தர் பேராளர் நிலையை (MacArthur Fellowship) வென்றார்.

இவர் எம்.ஐ.டி கல்விக்கழகத்தின் கணிமைக் கொள்கைக் குழுவிலும் எம்.ஐ.டி-யின் கணினி அரிவியல், செயற்கை அறிவு ஆய்வகக் குழுக்களிலும் உறுப்பினராக இருக்கின்றார்.

தற்கால கலை கண்காட்சியகத்தில் (மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்டு) 2008 ஆண்டு காட்சிப் படுத்தப்பட்ட வகுதியும் நீட்சிமையான உள்ளமும் ( “Design and the Elastic Mind” ) என்னும் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்ட கணக்கியல் ஒரிகாமி கலைப்படைப்பு (கணக்கியல் தாள்மடிப்புக் கலை) (Mathematical origami) இப்பொழுது நிலையான காட்சிக்கலைப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது [8].

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்

[தொகு]
  1. Barry, Ellen (2002-02-17). "Road Scholar Finds Home at MIT". Boston Globe. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=BG&p_theme=bg&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0F1C278D90533407&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM. பார்த்த நாள்: 2008-04-15. 
  2. Kher, Unmesh (2005-09-04). "Calculating Change: Why Origami Is Critical to New Drugs: The Folded Universe". TIME. Archived from the original on 2011-03-09. பார்க்கப்பட்ட நாள் 28 February 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. 3.0 3.1 Wertheim, Margaret (2005-02-15). "Origami as the Shape of Things to Come". The New York Times. http://www.nytimes.com/2005/02/15/science/15origami.html?pagewanted=1&ei=5090&en=7c6938eb4b440672&ex=1266210000&partner=rssuserland. பார்த்த நாள்: 2008-04-15. 
  4. O'Brien, Danny (2005-08-19). "Commercial origami starts to take shape". Irish Times இம் மூலத்தில் இருந்து 2012-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120209093438/http://moreresults.factiva.com/results/index/index.aspx?ref=IRTI000020050819e18j00023. பார்த்த நாள்: 2008-04-15. 
  5. "National honour for Demaine". University of Waterloo. 2003-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-04-15.
  6. Demaine, Erik; O'Rourke, Joseph (July 2007). Geometric Folding Algorithms: Linkages, Origami, Polyhedra. Cambridge University Press. pp. Part II. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-85757-4.
  7. Beasley, Sandra (2006-09-22). "Knowing when to fold". American Scholar 75 (4). 
  8. Curved Origami Sculpture, Erik and Martin Demaine.

வெளி இணைப்புகள்

[தொகு]