உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலீவியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலீவியா
2007இல் ஒலீவியா ஒரு நிகழ்ச்சியில்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஒலீவியா தெரசா லாங்கோட்
பிற பெயர்கள்ஓ. ஓ., லேடி ஓ
பிறப்புபெப்ரவரி 15, 1981 (1981-02-15) (அகவை 43)
புரூக்ளின், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா.
பிறப்பிடம்ஜமிக்கா, குயின்ஸ், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா.
இசை வடிவங்கள்சமகாலம், ஆன்மா, ஹிப் ஹாப்
தொழில்(கள்)காடகர், பாடலாசிரியர், நடிகர்
இசைத்துறையில்2000 முதல் தற்போது வரை
வெளியீட்டு நிறுவனங்கள்ஜே ரெக்கார்ட்ஸ், ஜி- யூனிட், இன்டர்ஸ்கோப், வோண்டா மியூசிக்

ஒலீவியா (Olivia Theresa Longott) 1981 பிப்ரவரி 15 அன்று பிறந்த ஒரு அமெரிக்க பாடகர். ஒலிவியா 50 சென்டின் "கேண்டி ஷாப்" மற்றும் அவரது முதல் ஆல்பம் "ஒலீவியா" பாடல்களுக்கு பங்களித்ததற்காக அவர் அறியப்படுகிறார். விஎச்1 என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி தொடரின் "லவ் அண்ட் ஹிப் ஹாப்: நியூ யார்க்" என்ற முதல் மூன்று பருவங்களில் (2011-2013) ஒரு வழக்கமான நடிகர் உறுப்பினராகவும் அறியப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

ஜமேக்காவின் கிங்ஸ்டன்|கிங்ஸ்டனில் பிறந்த இவர் நியூயார்க் நகரில் பிரபலமானார், லாங்கோட் என்பது இந்தியன், கியூபன், ஐக்கிய அமெரிக்காவிலுள்ள தொல்குடி அமெரிக்கர் [1] மற்றும் ஜமைக்காவின் வம்சாவளி ஆகும்.[2] நியூ யார்க் சிட்டியிலுள்ள டிக்ஸ் ஹில்ஸில் குயின்ஸ் மற்றும் பாய்சைட் உயர்நிலைப் பள்ளியில் இசையைப் படித்தார். இளமைப் பருவத்திலேயே ஒலீவியா தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.

தொழில்

[தொகு]

ஜே.ரெக்கார்ட்ஸ் (2000–2002)

[தொகு]

2000 ஆம் ஆண்டில், கிளைவ் டேவிஸின் "ஜே ரெக்கார்ட்"ஸில் கையெழுத்திட்ட முதல் கலைஞர் ஆவார். 2001 ஆம் ஆண்டில் அவரது சுய-பெயரான "ஒலீவியா" என்ற முதல் ஆல்பம் வெளியிடப்பட்டது மேலும் "பிஸௌன்ஸ்" என்ற பாடல் 15வது இடம் பெற்றது,[3] மற்றும் ஆர் யூ கேப்பபுள்" என்ற ஆல்பம் "பில்போர்டு 200" 55 வது இடம் பெற்றது

2007 முதல் தற்போது வரை

[தொகு]

2007 ஆம் ஆண்டில், ஒலீவியா மற்றும் ஜி-யூனிட் ரெக்கார்ட்ஸ் பிரிந்ததாக அறிவித்தது, எனவே அவரது இரண்டாவது ஸ்டுடியோ ஆல்பமான "பிஹிண்ட் குலோஸ்டு டோர்ஸ்" கைவிடப்பட்டது. இருப்பினும், இந்த ஆல்பம் பல வலைத்தளங்களில் தரவிறக்கம் செய்ய ஒரு கலவையாக வெளியிடப்பட்டது. 2009 இல், காங்கோ மற்றும் ஆப்பிரிக்க பாடல்களைப் போல இருந்த "சயீஸ் எலக்ட்ரிக்" என்ற பாடலில் காங்கோலிய பாடகர் ஃபால்லி இபூபா பாடியதை போலவே ஒரு அம்சத்தை ஒலிவியாவும் பாடினார். 2011 ஏப்ரல் 12, அன்று அவர் தனது முதல் மியூசிக் இசைத் தொகுப்பான "டிசம்பர்" என்பதை வெளியிட்டார், இது அவரது முதல் ஆல்பமான 2012 ஆல்பத்தில், "ஷோ த வேர்ல்ட்" என்பதற்கு முன்னர் வெளி வந்தது. பில்போர்டு ஹாட் ஹிப்-ஹாப் பாடலானது 76 வது இடத்தை பிடித்தது, இது அவரது ஜி யூனிட் அறிமுக ஒற்றைப்பாடலான "ட்விஸ்ட் இட்" விட அதிகமாக உள்ளது. டிசம்பர் 2011, அவர் தனது இரண்டாவது ஒற்றைப்பாடலான "வால் அவே" வெளியீடு மற்றும் ஒளிக் காட்சிகளின் படப்பிடிப்பினை வெளிய்ட்டார்.[4][5] 2013 இல், ஒலீவியாவின் பாடலான "வேர் டு ஐ கோ ஃப்ரம் கியர்" ஐ டியூன்ஸ் தரவரிசைகளில் 10 வது இடத்தில் இடம் பெற்று வெற்றி பெற்றது.[6]

குறிப்புகள்

[தொகு]
  1. Olivia Speaks On Why She Really Left G-Unit!. YouTube. 3 November 2009.
  2. Ogunnaike, Lola (October 2005). Sole Sister. Vibe Media Group. பன்னாட்டுத் தர தொடர் எண் 1070-4701. பார்க்கப்பட்ட நாள் September 24, 2007. {{cite book}}: |work= ignored (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Artist Chart History]. Billboard. Retrieved September 24, 2007.
  4. HipHopDX (30 April 2012). "Olivia Signs With Jerry Wonda's Wonda Music Label, New Album On The Way". HipHopDX.
  5. "New Music: Olivia f/ Sean Kingston – 'Sun Don't Shine'". Rap-Up.
  6. "Olivia Discusses Kissing Maino, New Boyfriend And Love & Hip Hop Drama". Necole Bitchie.com. Archived from the original on 2012-06-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஒலீவியா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.