கான்பூர் மின்சார வழங்கல் நிறுவனம்
கான்பூர் மின்சார வழங்கல் நிறுவனம் (Kanpur Electricity Supply Company) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள கான்பூரில் அமைந்துள்ள ஒரு மின்சார நிறுவனம் ஆகும்.[1][2] முன்னதாக இந்நிறுவனம் கான்பூர் மின்சார வழங்கல் ஆணையம் என்று அழைக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மின்சார ஆணைய நிறுவனத்தின் ஒரு பகுதியாக உத்தரப் பிரதேச அரசு நிறுவனம் இதை 2000 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று உருவாக்கியது. கான்பூர் நகராட்சி ஆணையத்தின் கீழ் உள்ள முழுப் பகுதிக்கும் இந்நிறுவனம் மின்சாரம் வழங்குகிறது.[3]
கான்பூர் நகரத்தில் மின்சாரம் வழங்கவும், மின்சாரத்தை மொத்தமாக வழங்குவதற்கும் கான்பூர் மின்சார விநியோக நிறுவனம் பொறுப்பாகும். 427,158 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட நுகர்வோருக்கு இந்நிறுவனம் மின்சாரம் வழங்குகிறது. சுமார் 350,000 உள்நாட்டு நுகர்வோர், 73 ஆயிரம் வணிகர்கள் உட்பட சிறிய, நடுத்தர, பெரிய மற்றும் கனரக மின் இணைப்புகள் உட்பட 8 ஆயிரம் பேர் இந்நுகர்வோர் பட்டியலில் அடங்குவர். 33/6.6 கிலோவாட்டு அளவிலான 61 மின் துணை நிலையங்கள், 11 கிலோவாட்டு அளவிலான 333 ஊட்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் 3000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட வழங்கு மின்மாற்றிகளை அடிப்படையாகக் கொண்ட வலைப்பின்னல் மூலம் அனைத்து நுகர்வோருக்கும் இந்நிறுவனம் மின்சாரத்தை அளிக்கிறது. தற்போது சௌமியா அகர்வால் கான்பூர் மின்சார வழங்கல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Citizens sweat due to unscheduled power cuts". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 August 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
- ↑ "Power supply to remain suspended in many areas". The Times of India. 2 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
- ↑ 3.0 3.1 "About us". Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-30.
புற இணைப்புகள்
[தொகு]- Official website பரணிடப்பட்டது 2022-07-15 at the வந்தவழி இயந்திரம்