உள்ளடக்கத்துக்குச் செல்

குற்றாலீசுவரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குற்றாலீசுவரன் ரமேஷ் (பிறப்பு: 8 நவம்பர், 1981) என்னும் குற்றால் ரமேஷ் இந்திய நீச்சல் வீரர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இவர், மாரத்தான் என்னும் வகை நீச்சல் வீரர்.

இவர் 1994-ம் ஆண்டு, தன்னுடைய 13-ம் அகவையில் நீச்சல் அடித்து, ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை புரிந்தார். அதே வருடம், இவர் நீச்சல் அடித்து, 6 கால்வாய்களைக் கடந்து மிகிர் சென் என்பவருடைய (5 - காலவாய்களை நீச்சலடித்துக் கடந்த) சாதனையை முறியடித்தார். இவருடைய பெயர் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளது. 1996-ம் ஆண்டு குற்றாலீசுவரனுக்கு அர்ஜுனா விருது இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டது. இவரைப் பற்றிய ஒரு பாடம் தமிழ்நாட்டின் பாடபுத்தகத்திலும் இருந்தது.

குற்றாலீசுவரன்
குற்றாலீசுவரன்

இளமைக் காலம்

[தொகு]

குற்றாலீசுவரன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர், இரமேசு என்பவருக்கும், சிவகாமிக்கும் மகனாக ஈரோடு நகரில் பிறந்தார். ஒரு மாதத்திலேயே இவருடைய குடும்பம் சென்னை நகருக்கு நகர்ந்தது. குற்றாலீசுவரன் தன்னுடைய படிப்பை கோபாலபுரத்தில் உள்ள பள்ளியிலும், கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியலும், தன்னுடைய முதுகலைப் பட்டத்தினை டல்லாசிலுள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலும், தற்போது எம். ஐ. டி. ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மன்ட்டில் மேலாண்மைக் கல்வி பயின்று வருகிறார்.

நீச்சல்

[தொகு]

தன்னுடைய 7-ம் அகவையில் இருந்து நீச்சல் போட்டியில் பங்குபெற்றும் வரும் இவர், ரிப்பன் மீட் என்ற மாவட்ட அளவிலான போட்டியில் முதன்முறையாக நீச்சலடித்தார். அப்போட்டியில் ஆறாவது இடம் பிடித்தார். அதன்பிறகு பல மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்குபெற்ற இவர், தன்னுடைய 10-வது அகவையில், 1991-ம் ஆண்டு நடைபெற்ற 5 கி.மீ. தூர நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு நான்காம் இடம் பிடித்தார்.

1994 - ஆங்கிலக் கால்வாய்

[தொகு]

1994-ம் ஆண்டு, மிஹிர் சென்னுடைய ஒரே வருடத்தில் ஐந்து கால்வாய்களை நீச்சல் மூலம் கடந்த 30 வருட சாதனையை முறியடித்தார்.

இவர் முதன்முதலாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பாக்கு நீரிணையை ஏப்ரல 1994-ம் ஆண்டு நீச்சலடித்து கடந்தார். அதன்பிறகு, தமிழக அரசின் உதவியுடன் 1994-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி ஆங்கிலக் கால்வாயைக் கடந்தார்.

ஆறு கால்வாய்களை நீச்சல் மூலம் நீந்தி கடந்தமைக்காக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.

1995–1998

[தொகு]

சாதனை புரிந்த பிறகு, இவர் உலகம் முழுவதுமுள்ள பல்வேறு போட்டிகளில் பங்குபெறத் துவங்கினார். 1995-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை, 25-நீச்சல் வீரர்களில், உலக நீச்சல் போட்டிக்குத் தகுதிபெற்ற ஒரே நபரும் இவரே. இவர் 6-முறை இந்தியாவுக்காக நீச்சல் போட்டிகளில் பங்குபெற்று விருதும் பெற்றுள்ளார். அவற்றுள், சுவிட்சர்லாந்தில் பெற்ற முதல்பரிசும் அடங்கும். இவருக்கு 1996-ம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால், அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

விருதுகள்

[தொகு]

உசாத்துணை

[தொகு]