உள்ளடக்கத்துக்குச் செல்

குவாண்டாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A red triangle containing a white silhouette of a kangaroo, with the word Qantas underneath the triangle
IATA ICAO அழைப்புக் குறியீடு
QF QFA QANTAS
நிறுவல்16 நவம்பர் 1920 (1920-11-16)
வின்டன், குயின்ஸ்லாந்து, ஆத்திரேலியா
செயற்பாடு துவக்கம்மார்ச்சு 1921 (1921-03)
மையங்கள்
  • பிறிஸ்பேன் விமான நிலையம்
  • மெல்பேர்ண் விமான நிலையம்
  • சிட்னி விமான நிலையம்
இரண்டாம் நிலை மையங்கள்
கவன செலுத்தல் மாநகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Qantas Frequent Flyer
கூட்டணிவன்வர்ல்டு
கிளை நிறுவனங்கள்
  • குவாண்டாசுலிங்க்
  • ஜெட்ஸ்டார்
  • ஜெட்கனெக்ட்
  • நெட்வர்க் ஏவியேசன்
  • Qantas Freight
  • Australian air Express
  • Qantas Holidays
  • Express Ground Handling
  • Qantas Ground Services
  • Q Catering
  • Snap Fresh
வானூர்தி எண்ணிக்கை118
சேரிடங்கள்42
தலைமையிடம்மாஸ்கொட், நியூ சவுத் வேல்சு, ஆத்திரேலியா
RevenueIncrease வார்ப்புரு:A$15.9 பில்லியன் (2013)[1]
நிகர வருவாய்Increase A$6 மில். (2013)[1]
மொத்த சொத்துக்கள் A$20.2 பில். (2013)[1]
மொத்த சமபங்குIncrease A$5.954 பில். (2013)[1]
பணியாளர்கள் 33,265 (2013)[1]
வலைத்தளம்qantas.com.au

குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் (Qantas Airways Limited) ஆத்திரேலியாவுடன் இணைந்த ஒரு விமானச் சேவையாகும்.[3] குவாண்டாசு என்பது குயின்ஸ்லாந்து மற்றும் வடக்குப் பகுதிகளுக்கு செயல்படும் வான்வழிச்சேவை என்பதன் ஆங்கிலச் சுருக்கமாகும். இதற்கு ‘பறக்கும் கங்காரு’ என்ற பட்டப்பெயரும் உண்டு. ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய விமானச் சேவையாகும், அத்துடன் உலகளவில் இரண்டாம் பழமையான விமானச் சேவையாகும். [4] இந்நிறுவனம் 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்டு, 1935 ஆம் ஆண்டு மே மாதம் முதல் தனது விமானச் சேவையினை சர்வதேச அளவில் தொடங்கியது.

இது மஸ்கட்டின் புறநகர் பகுதியான சிட்னியிலுள்ள, சிட்னி விமான நிலையத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. காண்டாஸ் ஆஸ்திரேலியர்களின் உள்நாட்டு சந்தையில் 65 சதவீத பங்கினைப் பெற்றுள்ளது மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் செல்பவர்களில் 18.7 சதவீதம் மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.[5][6]

வரலாறு

[தொகு]

1920 ஆம் ஆண்டு 20 ஆம் தேதி, குயின்ஸ்லாண்டில் வின்டன் நகரில் காண்டாஸ் நிறுவப்பட்டது.[7] ஆவ்ரோ 540கே எனும் விமானத்தினை முதன்முதலாக தனது சேவையில் ஈடுபடுத்தியது. 1935 ஆம் ஆண்டின் மே மாதத்தில் இருந்து சர்வதேச அளவிலான செயல்பாடுகளை காண்டாஸ் நிறுவனம் துவங்கியது. அந்த காலகட்டத்தில் டார்வின் மற்றும் வடக்குப் பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் விமானச் சேவையினை இந்நிறுவனம் பெற்றிருந்தது. ஜெட் விமானங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நிகழ்வுகள், 1959 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அரங்கேறின. முதன் முதலாக போயிங்க் 707-138 ஐப் பயன்படுத்தியதில் இருந்து ஜெட் ரக விமானங்களை பயன்படுத்த ஆரம்பித்தது.

இலக்குகள்

[தொகு]
Qantas Boeing 747-400 on final approach to 27L at London Heathrow Airport, 2004

காண்டாஸ் நிறுவனம் 20 உள்நாட்டு இலக்குகளையும், 21 சர்வதேச இலக்குகளையும் கொண்டு செயல்படுகிறது. இந்த சர்வதேச இலக்குகளில் தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஓசியானியா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 நாடுகள் அடங்கும், இவற்றுள் இதன் துணைநிறுவனங்கள் செயல்படுத்தும் சேவைகள் அடங்காது. மொத்த காண்டாஸ் குழுவும் இணைந்து 65 உள்நாட்டு இலக்குகளுக்கும், 27 சர்வதேச இலக்குகளுக்கும் விமானச் சேவைபுரிகின்றன.

1977 ஆம் ஆண்டு முதல், கிரைய்டான் டிராவலுக்குப் பதிலாக அண்டார்டிகா பகுதிகளைப் பார்வையிட காண்டாஸ் நிறுவனம் விமானங்களை செயல்படுத்த துவங்கியது. ஏர் நியூசிலாந்து விமானம் 901 என்ற விமானம் எரேபஸ் மலையில் 1979 ஆம் ஆண்டு விபத்துக்குள்ளானது. அதிலிருந்து அண்டார்டிகா பயணங்களை காண்டாஸ் நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. பின்னர் 1994 முதல் மீண்டும் அந்தச் சேவைகளைத் தொடங்கியது, ஆனால் அதில் தரையிறங்கும் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.[8]

காண்டாஸ் நிறுவனம், 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல், சிட்னி விமான நிலையத்தில் இருந்து டாலஸ்/ஃபோர்ட் வொர்த் சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர்பஸ் ஏ380 விமானம் மூலம் இடைவிடாத சேவைகளை புதிதாக வழங்கியது.

கூட்டுப் பங்காண்மை மற்றும் கோட்ஷேர் ஒப்பந்தங்கள் ஒன்வேர்ல்டு நிறுவனத்தின் உறுப்பினர்களுடன் காண்டாஸ் நிறுவனம் கூட்டுப்பாங்காண்மை அல்லது கோட்ஷேர் ஒப்பந்தங்களைப் பகிர்ந்துள்ளது. ஒன்வேர்ல்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் விவரம் பின்வருமாறு: 1. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 2. பிரித்தானிய ஏர்வேய்ஸ் 3. ஃபின்னையர் 4. இபேரியா 5. ஜப்பான் ஏர்லைன்ஸ் 6. லேன் ஏர்லைன்ஸ் 7. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் [9] ஒன்வேர்ல்டு நிறுவனத்துடன் மட்டுமல்லாது பின்வரும் நிறுவனங்களுடனும் கோட்ஷேர் ஒப்பந்தங்களை காண்டாஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. 1. ஏர்கலின் 2. ஏர் சீனா[10] 3. ஏர் நியூகினி 4. ஏர்நார்த் 5. ஏர் டஹிடி நியு 6. ஏர் வனௌடு 7. அலஸ்கா ஏர்லைன்ஸ் 8. பாங்காங்க் ஏர்வேய்ஸ் 9. சீனா ஏர்லைன்ஸ் 10. சீன கிழக்கு ஏர்லைன்ஸ் 11. சீன தெற்கு ஏர்லைன்ஸ் 12. எமிரேட்ஸ் 13. ஃபிஜி ஏர்வேய்ஸ் 14. ஜெட் ஏர்வேய்ஸ் 15. கென்யா ஏர்வேய்ஸ் 16. வியட்நாம் ஏர்லைன்ஸ் 17. வெஸ்ட்ஜெட்

காண்டாஸ் ஏர்வேஸ் – உயர்தர வழித்தடங்கள்

[தொகு]
Qantas Building A

மெல்போர்ன் – சிட்னி, சிட்னி – மெல்போர்ன், சிட்னி – பிரிஸ்பேன் மற்றும் சிட்னி – கோல்டு கோஸ்ட் போன்ற வழித்தடங்கள் காண்டாஸ் நிறுவனத்தின் உயர்தர வழித்தடங்கள் ஆகும். இந்த வழிகளில் வாரத்திற்கு முறையே 120, 119, 108 மற்றும் 104 விமானங்களை காண்டாஸ் நிறுவனம் இயக்குகிறது. சில குறிப்பிட்ட காரணங்களுக்காக இயக்கப்படும் வழித்தடங்களில் போர்ட் வில்லா – சேன்டோ மற்றும் கிறிஸ்ட்சர்ச் – நாடி போன்ற வழித்தடங்களில் இயக்கப்படும் விமானங்கள் முக்கியமானவை.[11]

ஏர்லைன் துணைநிறுவனங்கள்

[தொகு]

காண்டாஸ் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே பல பயணிகள் விமானங்களை துணைநிறுவனங்களுடன் இயக்கிவருகிறது. அவை கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

  1. ஆஸ்திரேலியா ஆசியா ஏர்லைன்ஸ் – 1990 முதல் 1996 வரை தாய்வான் சந்தையில் காண்டாஸ் நிறுவனம் தனது விமானச் சேவையினை செய்தது.
  2. இம்பல்ஸ் ஏர்லைன்ஸ் – 2001 இல் தொடங்கி அந்த வருடமே சேவைகளை நிறுத்திக்கொண்டது. ஜெட்ஸ்டார் எனும் நிறுவனத்தினை தோற்றுவித்தது இந்தச் சேவைகளை நிறுத்தியதன் முக்கியக்காரணம்.
  3. ஆஸ்திரேலியர்களின் ஏர்லைன்ஸ் – 2001 முதல் 2006 வரை சர்வதேச பட்ஜெட் கொண்ட விமானச்சேவைகள்.[12]
  4. காண்டாஸ்லிங்க் – காண்டாஸின் இரு துணைநிறுவனங்களுக்காக உருவாக்கப்பட்டது.
  5. ஜெட்ஸ்டார் ஏர்வேய்ஸ் – காண்டாஸின் குறைந்த கட்டண விமானச் சேவையாக தற்போது செயல்பட்டு வருகிறது.
  6. நெட்வொர்க் ஏவியேஷன் – சுரங்க நிறுவனங்களுக்காக விமானச் சேவை புரியும் இந்நிறுவனத்தினை மேற்கு ஆஸ்திரேலியாவிடம் இருந்து 2011 இல் காண்டாஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியது.
  7. ஜெட்கனெக்ட் – இதன் முழு உரிமையினையும் காண்டாஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இது வெலிங்க்டன் – சிட்னி மற்றும் பிரிஸ்பேன் – மெல்போர்ன் போன்ற இடங்களுக்கு விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. 2002 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், எட்டு போயிங்க் 737-800 விமான ரகங்களைக் கொண்டு செயல்படுகிறது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Preliminary Final Report 2013" (PDF). பார்க்கப்பட்ட நாள் 29 ஆகத்து 2013.
  2. "The Spirit of Tomorrow". Qantas. பார்க்கப்பட்ட நாள் 30 May 2013.
  3. Paylor, Anne (12 June 2014). "Qantas plans early repayment of debt". Air Transport World.Archived fromthe original on 12 June 2014. Archived from the original on 12 ஜூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 மே 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help); no-break space character in |publisher= at position 46 (help)CS1 maint: numeric names: authors list (link) CS1 maint: unfit URL (link)
  4. "Qantas frequent flyers get microchip cards, heralding new era in faster travel". The Independent. 13 November 2009. Archived from the original on 4 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  5. "Qantas Overview". Airreview.com. 17 January 2012.
  6. "In Detail, Here's why Alan Joyce says Qantas must defend its 65% marketshare". Business Insider. 5 March 2014. Archived from the original on 22 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 16 பிப்ரவரி 2015. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "Small Beginnings". Our Company. Qantas. 9 October 2006. Archived from the original on 9 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 16 December 2006.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  8. "Other News – 09/11/2009". Air Transport World. 14 September 2009. பார்க்கப்பட்ட நாள் 22 August 2011. {{cite web}}: Unknown parameter |note= ignored (help)
  9. "New codeshare delivers more options for Qantas and SriLankan Airlines". Qantas Airways. 16 September 2014. {{cite web}}: Unknown parameter |note= ignored (help)
  10. "Qantas sign codeshare agreement with Air China". Travel Mole. 24 August 2006. பார்க்கப்பட்ட நாள் 27 May 2014.
  11. "Qantas Airlines". cleartrip.com.
  12. "Airreview Australian Airlines". Airreview. 17 January 2012.