சந்திரசேகர் கணபதி
சந்திரசேகர் கணபதி (Chandrasekar Ganapathy) (பிறப்பு: சூன் 10, 1981, சென்னை, தமிழ்நாடு) ஓர் இந்திய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் ஒரு வலது கை நடுத்தரமான பந்து வீச்சாளர் மற்றும் வலது கை ஆட்டக்காரா் ஆவார்.[1] இவர் ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் தமிழக அணியிலும் துலீப் கோப்பைக்கான போட்டியில் தெற்கு மண்டல அணியிலும் விளையாடியவா். 2010 ஆம் ஆண்டில் இந்திய ஏ அணிக்காக விளையாடுவதற்கு அழைக்கப்பட்டிருந்தார்.[2] 2010 ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் துடுப்பாட்டப் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தையும் பெற்றிருந்தார். டக் பொலிஞ்சரின் வருகைக்கு முன்னதாக அருண் கார்த்திக் நீக்கப்பட்ட சமயத்தில் சென்னை அணிக்காக ஒரு பந்தயத்தில் விளையாடினார். இந்தப் போட்டியில் துடுப்பாட்டக்காரராக ஒரு பந்தினைக்கூட சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு வாய்க்கவில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chandrasekar Ganapathy - Profile". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 8 April 2010.
- ↑ "Ganapathy replaces Mithun in India 'A' team to England". 2 June 2010.
- ↑ Arjun, Siddarth (26 February 2020). "Six players who only played one game for CSK".